சிறை மோதலுக்குப் பின்னால் சதித்திட்டமா?

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலின் பின்னணியில் ஏதேனும் சதித்திட்டங்கள் அடங்கிய செயல்பாடுகள் காணப்பட்டதா என்பது குறித்து தற்போது விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக சுகாதார பிரதி அமைச்சர் வைத்தியர் ஹன்ஸக விஜேமுனி தெரிவித்துள்ளார்.

கண்டி மாவட்டத்தின் சுகாதார நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வது தொடர்பில் நடைபெற்ற கலந்துரையாடலொன்றின் போது கருத்துத் தெரிவிக்கையிலேயே பிரதி அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.

பழைய போகம்பறை சிறைச்சாலை வளாகத்தினுள் நிறுவப்படும் புதிய சிறைச்சாலை மற்றும் காலி, மஹமோதர பழைய வைத்தியசாலையை புதிய சிறைச்சாலையாக மாற்றுவதற்கு அரசாங்கம் எடுத்த தீர்மானம் சில மாதங்களுக்கு மட்டுமேயானது என்றும் சுகாதார பிரதி அமைச்சர் வைத்தியர் ஹன்ஸக விஜேமுனி இங்கு சுட்டிக்காட்டினார்.

சிறைச்சாலைகளின் நெரிசலுக்கு அரசாங்கத்தின் தீர்வுகள் கிடைத்த பின்னர், அந்த இரண்டு சிறைச்சாலைகளும் நீக்கப்படும் என்றும் அவர் அங்கு சுட்டிக்காட்டினார்.

“நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலின் பின்னணியில் ஏதேனும் சதித்திட்டம் இருந்ததா? என்பது குறித்து தற்போது விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த விசாரணைகளின் முன்னேற்றத்தின் அடிப்படையிலேயே எம்மால் உறுதியாகக் கூற முடியும்.”

“சிறைச்சாலைகளில் உள்ள அதிக நெரிசல் நீண்டகாலமாக நிலவி வரும் ஒரு பிரச்சினையாகும். சிறைச்சாலைக்குள் பல பிரச்சினைகள் உருவாகின்றன. வழக்குகள் தேவையற்ற முறையில் தாமதமடைதல், அறிக்கைகள் கிடைக்காமை, போதைப்பொருள் கைதுகள் அதிகரிப்பு ஆகியன சிறைச்சாலை நெரிசல் அதிகரிப்பதற்கு காரணமாக அமைந்துள்ளன.”

“காலி மஹமோதர பழைய வைத்தியசாலை, கண்டி போகம்பறை சிறைச்சாலை ஆகிய இரண்டையும் நாங்கள் சிறைச்சாலைகளாக தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல எதிர்பார்ப்பவை அல்ல. எமக்கு வேறு திட்டங்கள் உள்ளன. ஆனால் இந்த நேரத்தில் உடனடி நடவடிக்கையாக சில மாதங்களுக்கு மட்டுமே அந்தப் படியை எடுத்தோம்.”

“சில மாதங்களுக்கு மட்டுமே அந்த இடங்களில் சிறைச்சாலைகள் நடத்தப்படும். தீர்வுகள் கிடைக்கும் போது அந்த இரண்டு சிறைச்சாலைகளும் நீக்கப்படும்.”

இதேவேளை, பழைய போகம்பறை சிறைச்சாலை வளாகத்தினுள் புதிய சிறைச்சாலையொன்றை நிறுவுவது தொடர்பான விசேட வர்த்தமானி அறிவித்தல், நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவினால் கடந்த 8ஆம் திகதி வெளியிடப்பட்டிருந்தது.

காலி, மஹமோதர பகுதியில் புதிய சிறைச்சாலையொன்றை நிறுவுவது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலும் கடந்த 7ஆம் திகதி வெளியிடப்பட்டிருந்தது.

PAORB2GRUNFXLLFYFI5ON7ESCE

கல்கரியில் காணாமல் போன 11 வயது சிறுவனைத் தேடும் பணி ‘நோஸ் ஹில் பூங்கா’ பகுதிக்கு விரிவாக்கம்

July 25, 2026

காணாமல் போன 11 வயதான பார்க்கர் வெல்ஸ் (Parker Wells) என்ற சிறுவனைத் தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும்

HVAI6OYZWRG25PUTY7WGYICNKQ

எட்டோபிகோக் துப்பாக்கிச் சூடு: கொல்லப்பட்ட பெண் அடையாளம் காணப்பட்டார்; சந்தேகநபர் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டது!

July 25, 2026

வெள்ளிக்கிழமை அதிகாலை எட்டோபிகோக் (Etobicoke) பகுதியில் இலக்குவைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் பெண் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, முதல்

MediaFile_20260725_142217_197

பொதுவான பிரச்சினைகள் குறித்து ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை-  ஆறு தமிழ் பேசும் கட்சிகள் அனுமதி கோரிக்கை!

July 25, 2026

தமிழ் பேசும் மக்களின் பொதுவான பிரச்சினைகளில் ஒன்றிணைந்து செயற்பட இம்மாதத் தொடக்கத்தில் தீர்மானித்த ஆறு தமிழ் பேசும் அரசியல் கட்சிகளின்

arrest1

கிளிநொச்சியில் வனஜீவராசிகள் மற்றும் அதிரடிப்படை அதிகாரிகள் மீது தாக்குதல்: ஒன்பது பேர் கைது!

July 25, 2026

கிளிநொச்சி, அக்கரயான்குளம் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது, வனஜீவராசிகள் திணைக்களம் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரின் (STF) கடமைகளுக்கு

6

தர்மேந்திர பிரதான் ராஜினாமா – சென்னையில் கொண்டாட்டம்!

July 25, 2026

சென்னை: மத்திய கல்வி அமைச்சராக இருந்த தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ததை தொடர்ந்து சென்னையில் போராட்டக்காரர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை

photo-collage.png (1)

முக்கிய மைல்கல்லை எட்டியது தமிழ்ச்சமூக மையம்

July 25, 2026

ரொறன்டோ ஒன்டாறியோ – வட கிழக்கு ஸ்காபரோவில் நீண்ட காலமாக எதிர்பார்க்கப்படும் தமிழ்ச் சமூக மையத்தின் கட்டுமானப் பணிகளில் ஏற்பட்ட

4

“இனி அரசியல் பேச மாட்டேன் .. தலையிட மாட்டேன்” – ராமதாஸ் அதிரடி அறிவிப்பு!

July 25, 2026

திண்டிவனம்: 88வது வயதில் அரசியல் துறவறம் மேற்கொள்வதாக ராமதாஸ் அறிவித்துள்ளார். பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று தனது 88-வது பிறந்தநாளை

3

நீட் தேர்வு பற்றி பேசும் தகுதி திமுகவுக்கு இல்லை – நிர்மல்குமார்!

July 25, 2026

மதுரை: மதுரையில் அமைச்சர் நிர்மல்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது; \”நம்முடைய நிலைப்பாடு நீட் தேர்வு வேண்டாம் என்பது

2

“மாணவர்கள் பங்கெடுக்காத எந்த போராட்டமும் வெற்றி அடையாது” – இயக்குநர் வெற்றிமாறன்!

July 25, 2026

புதுடெல்லி: ‘நீட்’ வினாத்தாள் கசிவு விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாகவும், ‘நீட்’ தேர்வு தோல்வி

1

பரந்தூர் விமான நிலையம் அமைப்பது குறித்த தவெக அரசின் உண்மையான நிலைப்பாடு என்ன? – சீமான் கேள்வி!

July 25, 2026

சென்னை: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது :- பரந்தூரில் புதிய விமான நிலையம்

756342355_1705147084632306_8643715829015481329_n

கதிர்காமம் சென்றோரின் கார் செட்டிபாளையத்தில் லொறியுடன் மோதி பாரிய விபத்து 5 பேருக்கு காயம்.!!

July 25, 2026

களுவாஞ்சிகுடி பொலிஸ்பிரிவுக்குட்ப செட்டிபாளையம் பகுதியில் இன்று (25) காலை 8 மணியளவில் பாரிய விபத்துச் சம்பம் ஒன்று பதிவாகியுள்ளது. மட்டு

754915059_10227609771149071_2184276843327531274_n

கறுப்பு ஜூலை மற்றும் வெலிக்கடை சிறைப் படுகொலை நினைவேந்தல்

July 25, 2026

வலிகாமம் கிழக்கு பிரதேச சபையில் 53 தீபங்கள் ஏற்றி உணர்வுபூர்வ அஞ்சலி!கறுப்பு ஜூலை தமிழினப் படுகொலை நிகழ்வுகளையும், அதன்போது கொழும்பு