மண்முனை மேற்கு – வவுணதீவு பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்!

மட்டக்களப்பு மாவட்டத்தில் யானை–மனித மோதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு சுற்றாடல் அமைச்சர் மட்டக்களப்பிற்கு விஜயம் செய்தபோது வழங்கிய வாக்குறுதிகள் இதுவரை நிறைவேற்றப்படவில்லை எனச் சுட்டிக்காட்டப்பட்டது.

மண்முனை மேற்கு – வவுணதீவு பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நேற்று புதன்கிழமை (25) நடைபெற்றது. இக்கூட்டத்தில் பல்வேறு மக்கள் பிரச்சினைகள் குறித்து ஆராயப்பட்ட போதிலும், நீண்டகாலப் பிரச்சினைகளுக்கு இதுவரை தீர்வு எட்டப்படாமை குறித்துக் கவலை வெளியிடப்பட்டது.

பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கந்தசாமி பிரபு தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் அமைச்சருமான சுனில் ஹந்துன்நெத்தி, பாராளுமன்ற உறுப்பினர்கள், பிரதேச செயலாளர் மற்றும் துறைசார் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

மகாவலி அதிகார சபையினால் முன்னெடுக்கப்படும் நீர்ப்பாசனத் திட்டங்களுக்காகக் காடுகள் அழிக்கப்படுவதே யானைகள் குடியிருப்புப் பகுதிகளுக்குள் நுழைய முக்கிய காரணமாகும். மகாவலி திட்டத்தின் மூலம் தண்ணீர் வருகிறதா என்பது கேள்விக்குறியாக உள்ள நிலையில், யானைகளின் வருகை மட்டும் நிச்சயிக்கப்பட்டுள்ளதாகக் கூட்டத்தில் விசனம் தெரிவிக்கப்பட்டது.

அத்துடன், மகாவலி திட்டத்தை முன்னிறுத்தி இடம்பெறும் பாரிய அளவிலான மண் அகழ்வு காரணமாக, மாவட்டத்தில் வெள்ளப் பாதிப்புகள் அதிகரித்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது.

தொடர்ச்சியான கனமழை மற்றும் அண்மையில் ஏற்பட்ட புயல் காரணமாக மாவட்டத்தில் நெற்பயிர்கள் கடுமையாகச் சேதமடைந்துள்ளன. அறுவடைக்காலத்திலும் நெல்லை உலர வைக்க முடியாத நிலையில் விவசாயிகள் உள்ளனர். ஈரநெல்லை 5,000 ரூபாய்க்குக்கூட விற்பனை செய்ய முடியாமல் விவசாயிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

பாதிக்கப்பட்ட விவசாயிகள் காப்பீட்டு நிவாரணம் பெற முற்பட்டபோது, 2026 பெப்ரவரி 13 ஆம் திகதியுடன் காப்பீட்டுக் காலம் முடிவடைந்ததாகக் கூறி நிவாரணம் மறுக்கப்படுவது விவசாயிகளுக்கு இழைக்கப்படும் பெரும் அநீதியாகும் என இதன்போது வலியுறுத்தப்பட்டது.

மாவட்டத்தில் உள்ள இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி தலைமையிலான உள்ளூராட்சி சபைகள் முன்வைக்கும் அபிவிருத்தித் திட்டங்களுக்கு அனுமதி வழங்குவதில், உள்ளூராட்சி ஆணையாளர் மற்றும் உதவி ஆணையாளர் தரப்பில் திட்டமிட்ட தாமதங்கள் நிலவுவதாகச் சந்தேகம் வெளியிடப்பட்டது. குறிப்பிட்ட ஒரு அரசியல் கட்சி சார்ந்த உள்ளூராட்சி அமைப்புகளின் பணிகளைத் தடுக்க முயற்சி நடைபெறுகின்றதா என்ற கேள்வியும் இதன்போது எழுப்பப்பட்டது.

tru

ஈரானுடன் ஒப்பந்தம் ஏற்படாவிடின் மீண்டும் குண்டுவீச்சு – ட்ரம்ப் எச்சரிக்கை

April 18, 2026

ஈரானுடன் எட்டப்பட்டுள்ள போர்நிறுத்தக் காலம் முடிவடைவதற்குள் நிரந்தர உடன்பாடு எட்டப்படாவிட்டால், அந்த நாட்டுக்கு எதிராக மீண்டும் குண்டுவீச்சுத் தாக்குதல்கள் நடத்தப்படும்

ele dea

மின்சாரம் தாக்கி ஒருவர் பலி

April 18, 2026

ஹாலி-எல, உடுவர பகுதியில் மின்சாரம் தாக்கியதில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த நபர் தனது வயல் நிலத்திற்கு சட்டவிரோதமான முறையில்

hurm

ஹோமுஸ் நீரிணையை ஈரான் இராணுவம் மீண்டும் மூடியது

April 18, 2026

ஈரான் தனது இராணுவத்தின் மூலம் ஹோமுஸ் நீரிணையை (Strait of Hormuz) மீண்டும் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளதாக அந்நாட்டு அரசு

lal

10 பில்லியன் ரூபாய் நட்டஈடு கோருகிறார் அமைச்சர் லால் காந்தா

April 18, 2026

தனது 2025-ஆம் ஆண்டுக்கான சொத்து மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான வெளிப்படுத்தலைத் தவறாகச் சித்தரித்து, அவதூறு பரப்பும் வகையில் செய்தி வெளியிட்டதாகக்

bud

வெள்ளை மாளிகையில் உலக அமைதிக்காக பௌத்த மத வழிபாட்டு நிகழ்வு

April 18, 2026

மத்திய கிழக்கில் நிலவி வரும் பதற்றமான சூழலுக்கு மத்தியில், உலக அமைதி மற்றும் நாடுகளுக்கிடையிலான நல்லிணக்கத்திற்காக ஆசி வேண்டி, கடந்த

sc

பொலிஸ் அதிகாரிகள் என ஆள்மாறாட்டம்

April 18, 2026

பொலிஸ் அதிகாரிகள் என ஆள்மாறாட்டம் செய்து பொதுமக்களை ஏமாற்றும் மோசடிகள் அதிகரித்து வருவது குறித்துக் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் (CID) எச்சரிக்கை

d

யாழில் நிதி ஒதுக்கப்பட்டும் புனரமைக்கப்படாத வீதி

April 18, 2026

நிதி ஒதுக்கப்பட்ட யாழ்.வடமராட்சி கிழக்கு கேவில் பிரதான வீதி நான்கு மாதங்களுக்கு பின்பும் புனரமைக்கப்படாமல் காணப்படுவதால் மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

Ikkiya

 எரிசக்தி அமைச்சர் மற்றும் செயலாளரின் இராஜினாமா ஒரு கண்துடைப்பு 

April 18, 2026

மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி மற்றும் அமைச்சின் செயலாளர் ஆகியோரின் இராஜினாமாவானது நிலக்கரி கொள்முதல் மோசடியைப் பொதுமக்களின்

east

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்; விசாரணையில் உள்ள பலவீனங்களை சுட்டிக்காட்டும் புதிய அறிக்கை

April 18, 2026

உயிர்த்த ஞாயிறு ஏழாம் ஆண்டு நிறைவை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ள புதிய அறிக்கை, இலங்கையின் நீண்டகால விசாரணைகள் இப்போதுதான் முன்னேற்றத்திற்கான அறிகுறிகளைக்

bal

அதிமுக தென் மாநிலங்களுக்கு துரோகம் இழைக்கின்றது – மார்க்​சிஸ்ட் கட்​சி​

April 18, 2026

தொகுதி மறுவரையறை திட்​டத்தை ஆதரித்து தென் மாநிலங்​களுக்கு அதி​முக துரோகம் இழைப்​ப​தாக மார்க்​சிஸ்ட் கட்​சி​யின் அரசி​யல் தலை​மைக்​குழு உறுப்​பினர் கே.​பால​கிருஷ்ணன்

st

‘தமிழ்​நாடு முழுக்க ஒரே ஒரு குற்​றச்​சாட்டு தான் அண்​ணன் ஸ்டா​லின் மேல் இருக்​கு’ – பிரேமலதா

April 18, 2026

“தமிழ்​நாடு முழுக்க ஒரே ஒரு குற்​றச்​சாட்டு தான் அண்​ணன் ஸ்டா​லின் மேல இருக்​கு. அதை​யும் இந்​தப் பெண்​கள் கூட்​டத்​தில் நான்

vij

தேர்​தல் விதி​களை‌ மீறிய​தாக விஜய் மீது 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு?

April 18, 2026

தேர்​தல் விதி​களை‌ மீறிய​தாக தவெக தலை​வர் விஜய் மீது 3 பிரிவு​களின் கீழ் போலீ​ஸார் வழக்​குப் பதிவு செய்​துள்​ளனர். தவெக