மண்டபம் கடல் வழியாக இலங்கைக்கு தப்பிச் செல்ல முயன்ற அகதிகள் உட்பட அறுவர் கைது

மண்டபம் கடல் வழியாக இலங்கைக்கு தப்பிச்செல்ல முயன்ற இலங்கை அகதிகள் உட்பட ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக, கடந்த 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் 300-க்கும் மேற்பட்ட இலங்கைத் தமிழர்கள் கடல் வழியாகச் சட்டவிரோதமாகத் தனுஷ்கோடிக்கு வந்து, தமிழகத்தில் அகதிகளாகத் தஞ்சம் புகுந்தனர்.

இவர்கள் அனைவரும் மண்டபம் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் தங்கவைக்கப்பட்டனர்.

தற்போது இலங்கையின் பொருளாதார நிலை சீராகியுள்ளதால், முகாமில் தங்கியுள்ளவர்கள் மீண்டும் தாய்நாடு திரும்ப விருப்பம் தெரிவித்து இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் மற்றும் சென்னையில் உள்ள இலங்கைத் தூதரகத்தில் பலமுறை மனு அளித்தனர்.

இருப்பினும், இவர்கள் சட்டவிரோதமான முறையில் கடல் வழியாகத் தமிழகத்திற்குள் நுழைந்ததால், இவர்களை மீண்டும் இலங்கைக்குத் திருப்பி அனுப்புவதில் சட்டச் சிக்கல்கள் நிலவி வருகின்றன.

இதன் காரணமாக, முகாமில் உள்ள பலர் மீண்டும் சட்டவிரோதப் படகுகள் மூலம் இலங்கைக்குத் தப்பிச் செல்லும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், மண்டபம் தெற்குக் கடல் பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்றுகொண்டிருந்த மூன்று இலங்கைத் தமிழர்களைக் கியூ பிரிவு பொலிஸார் நேற்று மாலை (27) பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், அவர்கள் யாழ்ப்பாணம் குருநகர் பகுதியைச் சேர்ந்த ஜிம்ஸ்ரிவ் (48), அவரது மனைவி ராஜினி (47) மற்றும் அவர்களது மகள் திபேந்தினி (20) என்பது தெரியவந்தது.

இவர்கள் சட்டவிரோதப் படகு மூலம் இலங்கைக்குத் தப்பிச் செல்லக் காத்திருந்ததை ஒப்புக்கொண்டனர்.

இதனையடுத்து, அவர்களுக்கு உதவியாக டீசல் மற்றும் பைகளுடன் நின்றிருந்த மண்டபம் எருமைத் தரவைப் பகுதியைச் சேர்ந்த மூவர் என மொத்தம் ஆறு பேரை பொலிஸார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட ஆறு பேர் மீதும் மண்டபம் பொலிஸார் வழக்குப் பதிவு செய்து, அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின் சிறையில் அடைத்தனர்.

pta

பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் (PTA) நீக்கப்படுகிறது; இரண்டு மாதங்களில் புதிய சட்டம் அமலுக்கு வருகிறது

June 14, 2026

கொழும்பு: இலங்கையில் நீண்டகாலமாகப் பலத்த விவாதங்களுக்கும் விமர்சனங்களுக்கும் உள்ளாகியிருக்கும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் (PTA) முழுமையாக நீக்கப்பட்டு, அதற்குப் பதிலாக

QLLE5GRSC5F5FCSDC7A63GB54U

பிரிட்டிஷ் கொலம்பியா இளைஞரைத் தேடும் ரொறன்ரோ பொலிஸார்: தொடர் அச்சுறுத்தல் குற்றச்சாட்டு

June 14, 2026

ரொறன்ரோ: நபர் ஒருவருக்குத் தொடர்ந்து அச்சுறுத்தல் மற்றும் தொல்லை கொடுத்து வந்த குற்றச்சாட்டின் பேரில், பிரிட்டிஷ் கொலம்பியா (B.C.) மாகாணத்தைச்

VFSVNY33WNCS5IL6IWULQ3EVUQ

ரொறன்ரோவில் கத்திக்குத்துச் சம்பவம்: 50 வயது மதிக்கத்தக்க நபர் படுகாயம்

June 14, 2026

ரொறன்ரோ: கனடாவின் ரொறன்ரோ நகரின் கிழக்குப்பகுதியில் சனிக்கிழமை (ஜூன் 13, 2026) இரவு நிகழ்ந்த கத்திக்குத்துச் சம்பவத்தில் 50 வயது

JZTK3F6L2NCDDLTE6OY6XIQ4OI

கனடாவில் கோர விபத்து: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 சிறுவர்கள் பலி

June 14, 2026

ஒண்டாரியோ: கனடாவின் ஒண்டாரியோ (Ontario) மாகாணத்தில் நிகழ்ந்த மிக மோசமான வாகன விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து சிறுவர்கள்

sss

சியான்’ விக்ரம் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்

June 14, 2026

தமிழ் திரையலகின் பெருமிதமாக ஜொலிக்கும் சர்வதேச தரத்திலான நட்சத்திர நடிகர் சியான் விக்ரம் கதையின் நாயகனாக நடிக்கும் பெயரிடப்படாத திரைப்படத்தின்

ang

நவீன தொழில் நுட்பத்தில் தயாரான பாடலை வெளியிட்ட ‘அங்கீகாரம்’ படக் குழு

June 14, 2026

அறிமுக நாயகன் கே ஜே ஆர் நடிப்பில் தயாராகி உள்ள ‘அங்கீகாரம்’ எனும் திரைப்படத்தில் இடம்பெற்ற ‘வெற்றி விழா ஆந்தம்’எனும்

sam

நடிகை சமந்தா நடிக்கும் ‘எங்கள் தங்கம்’

June 14, 2026

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகையாக திகழும் சமந்தா கதையின் நாயகியாக நடித்திருக்கும் ‘எங்கள் தங்கம்’ திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.

100

இயக்குநர் சசி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘நூறு சாமி’ திரைப்படம்

June 14, 2026

மூன்று தசாப்தங்களாக தொடர்ந்து தமிழ்த் திரையுலகில் கவனிக்கத்தக்க படைப்புகளை வழங்கி ரசிகர்களை தொடர்ந்து உச்சகட்ட மகிழ்ச்சியில் ஆழ்த்தும் இயக்குநர் சசி

sea

கடல் பகுதிகளுக்கு ‘சிவப்பு’ எச்சரிக்கை!

June 14, 2026

காங்கேசன்துறையிலிருந்து மன்னார் ஊடாக கல்பிட்டி வரையான கடல் பகுதிகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் ‘சிவப்பு’ எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன்படி, காங்கேசன்துறையிலிருந்து மன்னார்

Legends_1

Behind me சர்வதேச ஊடக வலையமைப்பு வழங்கும் Legends & Icons Awards 2026!

June 14, 2026

உலகெங்கும் பரந்துவாழும் எமது ஈழத்தமிழ்ச் சமூகத்தை சேர்ந்த மருத்துவத்துறை, சட்டத்துறை, கற்பித்தற்துறை, கலைத்துறை, பாதுகாப்புத்துறை, தொழில் முனைவோர்… எனப் பரந்து

Shakthivel

இலங்கையில் இடம்பெற்ற இனஅழிப்பு மற்றும் மனித உரிமை மீறல்களின் கொடூர உண்மைகளை செம்மணி புதைகுழி வெளிச்சமிட்டுக் காட்டுகிறது – அருட்தந்தை மா. சத்திவேல்

June 14, 2026

செம்மணி சமூக புதைகுழி அகழ்வுப் பணிகளில் வெளிவரும் மனித எச்சங்களும், குழந்தைகளின் பாவனை பொருட்களும் இலங்கையில் இடம்பெற்ற இனஅழிப்பு மற்றும்

appu

குற்றவாளிகள் எவராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும் – ஐக்கிய மக்கள் சக்தி

June 14, 2026

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலுடன் தொடர்புடைய குற்றவாளிகள் எவராக இருந்தாலும், அவர்கள் அனைவருக்கும் தகுந்த தண்டனை வழங்கப்படும் வரை ஐக்கிய