போர்ச் சூழல் காரணமாக எரிபொருள் விலை அதிகரிக்குமா?

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது நடத்திய தாக்குதல்களைத் தொடர்ந்து, மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழல் காரணமாக இலங்கையின் சுற்றுலாத்துறைக்கு 20மூ முதல் 30மூ வரை பாதிப்பு ஏற்படும் என சுற்றுலா துறை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

குறிப்பாக, இலங்கைக்கு வருகை தரும் ஐரோப்பிய மற்றும் ரஷ்ய சுற்றுலாப் பயணிகளில் சுமார் 40 சதவீதமானோர் டுபாய், கட்டார் அல்லது அபுதாபி ஆகிய விமான நிலையங்கள் ஊடாகவே வருகின்றனர். தற்போது நிலவும் யுத்த சூழல் காரணமாக சுற்றுலா பயணிகள் பெரும் அச்சத்தில் காணப்படுகின்றனர்.

இது தொடர்பாக செவ்வாய்க்கிழமை (03) கருத்துத் தெரிவித்த துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சர், மோதல்கள் ஆரம்பமான கடந்த பெப்ரவரி 28 ஆம் திகதி முதல் நேற்று வரை 205 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார். இதில் 107 விமானங்கள் இலங்கைக்கு வரவிருந்தவை என்பதுடன், 98 விமானங்கள் இலங்கையிலிருந்து புறப்படவிருந்தவை ஆகும்.

ஐரோப்பாவிலிருந்து வரும் விமானங்கள் மத்திய கிழக்கு வான்பரப்பைத் தவிர்த்து மாற்று வழிகளில் வருவதாகவும், இதனால் ஏற்படும் எரிபொருள் செலவு அதிகரிப்பு காரணமாக சுற்றுலாப் பயணிகளுக்கான பயணப்பொதி (Luggage) வரம்புகளை விதிக்க விமான நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும குறிப்பிட்டார்.

இந்த விடயம் தொடர்பில் கருத்துரைத்த சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் முன்னாள் தலைவர் கலாநிதி ரோஹந்த அத்துகோரள, மத்திய கிழக்கு மற்றும் வளைகுடா பிராந்தியமானது இலங்கையின் சுற்றுலா வருகையில் பாரிய பங்களிப்பு செய்கிறது. இந்த மோதல்கள் காரணமாக முதலில் அந்த வருகைகளை நாம் இழக்க நேரிடும். ஆனால், வளைகுடா பிராந்தியமே இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் தங்கிச் செல்லும் (Transit) இடமாகும். இத்தாலி, ஸ்பெயின் போன்ற நேரடி விமான வசதிகள் இல்லாத நாடுகளின் பயணிகளும் இதன் ஊடாகவே வருகின்றனர். இந்த விமான நிலையங்கள் மூடப்பட்டால், ஐரோப்பிய பயணிகளின் வருகையில் வீழ்ச்சி ஏற்படும்.

மேலும், எரிபொருள் விலை 100 – 120 டொலர்களாக அதிகரித்தால் அது உலகப் பொருளாதார நெருக்கடியாக மாறி, ஐரோப்பிய பயணிகளின் முடிவுகளையும் பாதிக்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேநேரம், இந்த பாதிப்பை ஈடுகட்ட இந்திய, அவுஸ்திரேலிய, ஜப்பான் மற்றும் கொரிய சந்தைகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும். ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸ் ஐரோப்பாவிற்கான நேரடி விமான சேவைகளை அதிகரிக்க வேண்டும். மோதல்களில் சிக்காத துருக்கியின் ‘டர்க்கிஷ் ஏர்லைன்ஸ் உடன் பேச்சுவார்த்தை நடத்தி விமான சேவைகளை விரிவாக்க வேண்டும் என இலங்கை உள்நாட்டு சுற்றுலா முகவர்கள் சங்கத்தின் (SLAITO) தலைவர் நலின் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

மார்ச் மாதத்தில் எதிர்பார்க்கப்பட்ட 3 இலட்சம் சுற்றுலாப் பயணிகள் எனும் இலக்கை அடையக்கூடிய சாத்தியக்கூறுறுகள் இல்லை. இதன் காரணமாக வாரத்திற்கு 10 முதல் 12 மில்லியன் அமெரிக்க டொலர் வருமான இழப்பு ஏற்பக்கூடும் என்றும் சுற்றுலாதுறை பிரதி அமைச்சர் ருவான் ரணசிங்க தெரிவித்தார்.

chi

அதிகரித்து வரும் போர் பதற்றத்தை தணிக்கும் நோக்கில் சீனா!

March 5, 2026

மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் போர் பதற்றத்தை தணிக்கும் நோக்கில் சீனா மத்தியஸ்த முயற்சியில் இறங்கியுள்ளது. சீன வெளியுறவு அமைச்சர்

vijitha

அமைச்சர் விஜித ஹேரத் ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் மறைவிற்கு இரங்கல்

March 5, 2026

ஈரானின் ஆன்மீக உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் மறைவையொட்டி, இலங்கை அரசாங்கம் மற்றும் மக்கள் சார்பாக அமைச்சர் விஜித

Ninda

புதிய தவிசாளர் தெரிவுக் கூட்டத்தில் பங்கேற்கத் தவறுவோரின் உறுப்புரிமை இரத்து!

March 5, 2026

நிந்தவூர் பிரதேச சபையின் புதிய தவிசாளர் தெரிவுக் கூட்டத்தில் பங்கேற்கத் தவறும் உறுப்பினர்களின் உறுப்புரிமை இரத்து செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

anu

மத்திய கிழக்கு நாடுகளுக்குச் சென்றுள்ள இலங்கையர்கள் குறித்துக் கண்டறியுமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்குப் பணிப்பு

March 5, 2026

மத்திய கிழக்கின் யுத்த சூழல் நிலவும் பகுதிகளில் உள்ள சுற்றுலாப் பயணிகள் மற்றும் வெளிநாட்டில் பணிபுரியும் ஊழியர்களின் பாதுகாப்பு மற்றும்

us

உயிரிழந்த முதல் அமெரிக்கப் படையினரின் விபரங்கள் வெளியீடு

March 5, 2026

அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையிலான போர் மோதல்களில் உயிரிழந்த முதல் அமெரிக்கப் படையினரின் விபரங்களை அமெரிக்க இராணுவம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

new

2026 ஐசிசி ஆண்கள் டி20; நியூசிலாந்து இறுதிப் போட்டிக்கு தகுதி

March 5, 2026

2026 ஐசிசி ஆண்கள் டி20 உலகக் கிண்ணத் தொடரின் விறுவிறுப்பான முதலாவது அரையிறுதிப் போட்டியில், தென்னாபிரிக்க அணியை 9 விக்கெட்டுகளால்

Sarath Savendra

அனுர அரசினால் சரத் பொன்சேகா மற்றும் சவேந்திரா சில்வா வகித்த பதவி ரத்து?

March 5, 2026

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா, சவேந்திர சில்வா உள்ளிட்டவர்கள் வகித்த பாதுகாப்புப் படைகளின் பிரதானி பதவியை அரசாங்கம் ரத்து

ganja

ஊர்காவற்துறையில் கஞ்சா கடத்த முற்பட்ட இளைஞர் கைது!  

March 4, 2026

ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுருவில் பகுதியில் 9 கிலோ கிராம் கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது

boa

கடற்றொழிலாளர்களுக்கு தடையின்றி எரிபொருள் விநியோகம்

March 4, 2026

நாட்டில் நிலவும் எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியில், கடற்றொழிலாளர்களுக்குத் தேவையான எரிபொருளை எந்தவிதத் தடையுமின்றி விநியோகிப்பதற்கு முறையான பொறிமுறை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளதாகக்

curr

வெளிநாட்டு நாணயமாற்று நிர்வாகமானது இலங்கையின் பொருளாதார நிலையை அளவிடும் கருவியாக செயற்பட்டு வருகிறது

March 4, 2026

வெளிநாட்டு நாணயமாற்று நிர்வாகமானது இலங்கையின் பொருளாதார நிலையை அளவிடும் கருவியாக வரலாற்று அடிப்படையில் செயற்பட்டு வருகிறது என திருகோணமலை மாவட்ட

b

பிறப்பு வீதம் இலங்கையில் குறைவடைகிறது?

March 4, 2026

இலங்கையில் பிறப்பு வீதம் படிப்படியாகக் குறைந்து வருவதாக லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் வைத்தியர்

arrest

போதைப்பொருளுடன் இராணுவச் சிப்பாய் கைது

March 4, 2026

திருகோணமலையில் வான்எல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில், உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கி மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் இன்று(04.03.2026) கைது