கிளிநொச்சி பூநகரியில் பேருந்துடன் மோட்டார் சைக்கிள் மோதி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளார்.
A32 நெடுஞ்சாலையில் இடம்பெற்ற கோர விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதுடன், அவருடன் பயணித்த நண்பர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இத்துயரச் சம்பவம் நேற்றுமுன்தினம் (13) ஞாயிற்றுக்கிழமை இரவு 10.00 மணியளவில் பூநகரி பள்ளிக்குடாச் சந்திப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
இளைஞரும் அவரது நண்பரும் மோட்டார் சைக்கிளில் A32 நெடுஞ்சாலை வழியாகச் சென்றுகொண்டிருந்தபோது, பூநகரி பள்ளிக்குடா” சந்தியில் பேருந்துடன் மோதி விபத்துக்குள்ளானது.