பெண்களுக்கு மயக்க மருந்து கொடுத்துக் கடத்தல்; குற்றவாளிகள் அடையாளம்!

மட்டக்களப்பில் பெண்களுக்கு மயக்க மருந்து கொடுத்துக் கடத்தி, நகைகளைக் கொள்ளையிட்டு கிணற்றுக்குள் வீசிய விவகாரம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களுக்கான அடையாள அணிவகுப்பு, நேற்று மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் மூடிய அறைக்குள் நடைபெற்றது.

இவ்விவகாரம் தொடர்பில் கைது செய்யப்பட்ட மூன்று பிரதான சந்தேகநபர்களும், நீதிமன்றில் இருந்த ஏனையோர் வெளியேற்றப்பட்டு, மூடிய அறைக்குள் அடையாள அணிவகுப்பிற்கு உட்படுத்தப்பட்டனர். கடத்தப்பட்டு கிணற்றில் போடப்பட்ட நிலையில் உயிருடன் மீட்கப்பட்ட பெண் முன்னிலையிலேயே இந்த அணிவகுப்பு நடத்தப்பட்டது.

இதன்போது, முதலாவது அடையாள அணிவகுப்பில் முதலாம் மற்றும் இரண்டாம் சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டதுடன், இரண்டாவது அணிவகுப்பில் மூன்றாவது சந்தேகநபரும் சாட்சியால் அடையாளம் காட்டப்பட்டுள்ளார்.

கடந்த 20ஆம் திகதி கொக்கட்டிச்சோலை, நெல்லிக்காட்டு வயல் பகுதியில் உள்ள பாழடைந்த கிணறு ஒன்றிலிருந்து வவுணதீவு, கொத்தியாபுலை பிரதேசத்தைச் சேர்ந்த 26 வயதுடைய இளம் தாய் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டார். அதே கிணற்றிலிருந்து ஏற்கனவே காணாமல் போனதாகக் கருதப்பட்ட மற்றொரு பெண் சடலமாக மீட்கப்பட்டார். மேலும், அந்த இளம் தாயின் 3 வயது சிறுமி கொத்தியாபுலை வயல் பகுதியில் உயிருடன் மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கிழக்கு மாகாண பிரதி பொலிஸ் மா அதிபர் சிரேஷ்ட சட்டத்தரணி வர்ண ஜயசுந்தரவின் வழிகாட்டலில், மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் லலித் லீலாரத்னவின் நேரடி கண்காணிப்பில், கிழக்கு மாகாண பெரும் குற்றத் தடுப்புப் பிரிவு பொறுப்பதிகாரி தெய்வநாயகம் மேனன் தலைமையிலான பொலிஸ் குழுவினர் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்தனர்.

அதன்படி, இச்சம்பவம் தொடர்பில் காஞ்சரம்குடா பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய பெண், அவரது 34 வயதுடைய கணவர் மற்றும் அவரது 22 வயதுடைய சகோதரர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

பின்னர், கொள்ளையிடப்பட்ட தங்க ஆபரணங்களை வாங்கிய ஊறணி மற்றும் திருகோணமலை வீதிப் பகுதியைச் சேர்ந்த இரு நகைக்கடை உரிமையாளர்களும் மற்றும் மயக்க மருந்துகளைப் பெற்றுக்கொடுத்த முச்சக்கரவண்டி சாரதி உள்ளிட்ட ஆறு பேர் ஆரம்பத்தில் கைது செய்யப்பட்டனர்.

மேலும், இவர்களிடமிருந்து இரண்டு முச்சக்கவரண்டிகள், ஒரு கார், கோடரி மற்றும் கூரிய ஆயுதங்களையும் பொலிஸார் மீட்டனர்.

மயக்க மருந்துகளை விநியோகித்ததாகக் கூறப்படும் ஏழாவது சந்தேகநபர், கடந்த ஞாயிற்றுக்கிழமை கொழும்பு வத்தளை பகுதியில் வைத்து தெய்வநாயகம் மேனன் தலைமையிலான பொலிஸ் குழுவினரால் கைது செய்யப்பட்டார். குறித்த சந்தேகநபரை எதிர்வரும் 02ஆம் திகதி வரை கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணை செய்ய மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.தர்சினி நேற்று அனுமதி வழங்கினார்.

தற்போது கொக்கட்டிச்சோலை பொலிஸாரும், கிழக்கு மாகாண பெரும் குற்றத் தடுப்புப் பிரிவினரும் மேலதிக விசாரணைகளைத் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.

726717948_1315682237340097_3613316531790611472_n

செம்மணி ஆர்ப்பாட்டத்திற்கு நீதிமன்றம் தடை

June 19, 2026

செம்மணி ஆர்ப்பாட்டத்திற்கு யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் தடை விதித்து கட்டளையிட்டுள்ளது

court-judge-hammer-gavel-696x398

தெல்லிப்பழை புற்றுநோய் வைத்திய நிபுணர் கிருஷாந்திக்கு எதிராக பொய்ப் பிரசாரம் செய்த டாக்டர் அர்ச்சுனா! வீடியோக்களை உடனே தூக்க நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

June 19, 2026

ஆதாரமற்ற பொய்க் குற்றச்சாட்டுகளையும் அவதூறுகளையும் பரப்பிய நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் அர்ச்சுனா இராமநாதனுக்கு யாழ்ப்பாணம் நீதிமன்றம் இன்று கடுமையான சாட்டையடி

728195759_27644703031792012_903873584557734534_n

நெடுந்தீவில் மக்களின் காணியைக் சிறீலங்கா கடற்படைக்கு வழங்க வேண்டுமென ஒற்றைக் காலில் நிற்கும்அமைச்சர் சந்திரசேகர்

June 19, 2026

நெடுந்தீவில் பொதுமக்களுக்கு சொந்தமான ஒரு ஏக்கர் காணி கடற்படைக்கு வழங்கப்பட்டமைக்குத் தமிழ்த்தேசியப் பேரவையின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இன்று

728195759_27644703031792012_903873584557734534_n

நெடுந்தீவில் மக்களின் காணியைக் சிறீலங்கா கடற்படைக்கு வழங்க வேண்டுமென ஒற்றைக் காலில் நிற்கும்அமைச்சர் சந்திரசேகர்

June 19, 2026

நெடுந்தீவில் பொதுமக்களுக்கு சொந்தமான ஒரு ஏக்கர் காணி கடற்படைக்கு வழங்கப்பட்டமைக்குத் தமிழ்த்தேசியப் பேரவையின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இன்று

725147385_963435430006083_3681308214476639100_n

அரச படைகளுக்கு கணி வழங்க முயற்சி – எதிர்த்து குரல் கொடுத்தவர்கள் குரலை ஒடுக்க அழைக்கப்பட்ட பொலிசார் – யாழ் ஒருங்கிணைப்பு கூட்டத்தில் பரபரப்பு!

June 19, 2026

அரச படையினருக்கு காணி வழங்க யாழ் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தின் தீர்மானம் நிறைவேற்ற முற்பட்டதால் ஏற்பட்ட பெரும் குழப்பத்தைத் தடுக்க

acci main

கடந்த ஐந்தரை மாத காலப்பகுதியில் வீதி விபத்துகளால் 1,297 பேர் பலி

June 19, 2026

2026ஆம் ஆண்டின் கடந்த ஐந்தரை மாத காலப்பகுதியில் மாத்திரம் இடம்பெற்ற வீதி விபத்துக்களினால் 1,297 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் தலைமையகம்

d

36வது தியாகிகள் தின நினைவேந்தல்!

June 19, 2026

ஈழமக்கள் புரட்சிகரவிடுதலை முன்னனியின் செயலாளர் பத்மநாபா மற்றும் போராளிகளின் 36வது தியாகிகள் தினம் வவுனியாவில் இன்று வெள்ளிக்கிழமை (19) காலை

chemmani

செம்மணி புதைகுழியில் 387 என்புக்கூடுகள் நேற்று வரை அடையாளம்

June 19, 2026

செம்மணி மனித புதைகுழியில் இருந்து நேற்று 18ஆம் திகதி வியாழக்கிழமை ஒரு குழந்தையின் என்புக்கூடு உட்பட 5 என்புக்கூடுகள் அகழ்ந்து

us

அமெரிக்கா – ஈரான் இடையிலான பேச்சுவார்த்தை திடீர் இரத்து

June 19, 2026

பிராந்தியத்தில் நிலவும் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக இரு நாடுகளுக்கும் இடையே எட்டப்பட்ட ஆரம்பகட்ட உடன்படிக்கையைச் செயல்படுத்துவது தொடர்பாக, சுவிட்சர்லாந்தின்

Cont

புதிய இறக்குமதி ஒழுங்குமுறை – வௌியானது வர்த்தமானி

June 19, 2026

இலங்கையிலிருந்து மேற்கொள்ளப்படும் இறக்குமதிகள் தொடர்பான வெளிநாட்டு நாணயக் கொடுப்பனவுகளை மிகவும் திறம்படக் கண்காணிப்பதற்காக, அரசாங்கம் புதிய ஒழுங்குமுறைகளை அறிமுகப்படுத்தி வர்த்தமானி

ca

உலக கிண்ண கால்பந்தாட்டம்; கனடா ஆதிக்கம்

June 19, 2026

உலக கிண்ண கால்பந்தாட்ட தொடரின் ‘பி’ பிரிவு போட்டியில், கட்டார் அணியை 6-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி கனடா

727322968_2861356607530672_2715840258650210241_n

ஐ.நா.வின் பங்களிப்புடன், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் காணி மற்றும் நம்பிக்கை கட்டியமைக்கும் செயல்திட்டமான லன்டேன் (LANTERN – Land and Trust-Building Engagement) செயற்றிட்டம் வடக்கு மாகாணத்தைப் பொறுத்தவரையில் வரப்பிரசாதம்-ஆளுநர் நா.வேதநாயகன்

June 19, 2026

ஐ.நா.வின் பங்களிப்புடன், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் காணி மற்றும் நம்பிக்கை கட்டியமைக்கும் செயல்திட்டமான லன்டேன் (LANTERN – Land