பிற நாடுகளின் கடல் எல்லைகளில் கைதான 795 மீனவர்களில் 753 பேர் 66 படகுகளுடன் விடுவிப்பு

பிற நாடுகளின் பிரத்தியேக பொருளாதார வலயங்களுக்குள் பிரவேசித்தமை காரணமாக, 2020 ஆம் ஆண்டு முதல் 2026 ஒக்டோபர் 23 ஆம் திகதி வரை 145 மீன்பிடிப் படகுகளுடன் 795 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களில் 753 மீனவர்கள் 66 மீன்பிடிப் படகுகளுடன் இதுவரை விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி அவர்கள் வாய்மூல விடைக்காக முன்வைத்த கேள்விகளுக்காக கடற்றொழில், நீரியல் வளங்கள் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் சார்பில் பதில் வழங்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

2024 ஆம் ஆண்டின் புள்ளிவிபரங்களின்படி, மொத்தம் 49,271 மீன்பிடிப் படகுகள் கடற்றொழிலில் ஈடுபட்டு வருவதாகக் குறிப்பிட்ட அமைச்சர், அவற்றில் 4,869 பதிவு செய்யப்பட்ட பலநாள் மீன்பிடிப் படகுகள், 880 ஒருநாள் மீன்பிடிப் படகுகள் (IDAY), வெளிப்புற இயந்திரங்களைக் கொண்ட 24,823 படகுகள் (OFRP), இயந்திரங்களைக் கொண்ட 2,709 பாரம்பரியப் படகுகள் (MTRB), இயந்திரங்கள் அற்ற 15,037 பாரம்பரியப் படகுகள் (NTRB) மற்றும் இயந்திரமற்ற கரைவலைப் படகுகள் (NBSB) 953 என்பன உள்ளடங்குவதாகத் தெரிவித்தார்.

இவற்றில் 4,869 பலநாள் மீன்பிடிப் படகுகளும் சர்வதேசக் கடற்பரப்பில் மீன்பிடிப்பதற்கான சட்டபூர்வ அனுமதிப்பத்திரங்களைப் பெற்றுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். சில சந்தர்ப்பங்களில், சீரற்ற காலநிலை, பலத்த காற்று அல்லது தொழில்நுட்பக் கோளாறுகள் காரணமாக மீன்பிடிப் படகுகள் பிற நாடுகளின் பிரத்தியேக பொருளாதார வலயங்களுக்குள் பிரவேசிக்கும் நிலை ஏற்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

அதேவேளை, சில படகுகளின் மீகாமர்கள் வேண்டுமென்றே பிற நாடுகளின் கடல் எல்லைகளுக்குள் பிரவேசித்து, அங்குள்ள மீன் வளங்களைப் பயன்படுத்தி மீன்பிடிக்கும் சம்பவங்களும் பதிவாகியுள்ளதாக அமைச்சர் வலியுறுத்தினார்.

வெளிநாடுகளில் கைது செய்யப்படும் மீனவர்களின் எண்ணிக்கை வேகமாகக் குறைந்து வருவதாகக் குறிப்பிட்ட அமைச்சர், 2026 ஆம் ஆண்டில் இதுவரை 7 மீன்பிடிப் படகுகளுடன் 40 மீனவர்கள் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

வெளிநாடுகளில் கைது செய்யப்படும் மீனவர்கள் மற்றும் மீன்பிடிப் படகுகள் தொடர்பில், சம்பந்தப்பட்ட நாடுகளில் அமைந்துள்ள இலங்கைத் தூதரகங்கள் நேரடியாகச் செயற்படுவதாகவும், அதற்கமைய கைது செய்யப்பட்ட மீனவர்கள் மற்றும் மீன்பிடிப் படகுகள் தொடர்பில் தேவையான அனைத்து சட்டரீதியான மற்றும் இராஜதந்திர ரீதியான தலையீடுகளையும் அந்தந்தத் தூதரகங்கள் மேற்கொள்வதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

மேலும், அனர்த்தங்களுக்கு உள்ளாகும் படகுகள் உள்ளிட்ட ஏனைய மீன்பிடிப் படகுகள் தொடர்பான தேவையான தொழில்நுட்ப அறிக்கைகளை கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களம் வழங்குவதாகவும், சில சந்தர்ப்பங்களில் மீனவர்களை மீண்டும் நாட்டுக்கு அழைத்து வருவதற்குத் தேவையான விமானப் பயணச்சீட்டுகளைக்கூட அத்திணைக்களம் வழங்குவதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

51 rd card

பிரேஸிலில் 51 சிவப்பு அட்டைகள் காட்டப்பட்டுச் சாதனை!

November 6, 2026

பிரேஸிலில் 20 வயதுக்குட்பட்டோருக்கான போட்டியொன்றில் உலக சாதனையாக 51 சிவப்பு அட்டைகள் காட்டப் பெற்றுள்ளது. மினாஸ் ஜெரைஸ் 20 வயதுக்குட்பட்ட

Mit

முதலாமிடத்துக்கு முன்னேறிய ஸ்டார்க்

November 6, 2026

ர்வதேச கிரிக்கெட் சபையின் டெஸ்ட் போட்டிகளுக்கான பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் முதலாமிடத்துக்கு அவுஸ்திரேலியாவின் மிற்செல் ஸ்டார்க் முன்னேறியுள்ளார். தென்னாபிரிக்காவுக்கெதிரான மூன்றாவது டெஸ்டில்

max

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற மக்ஸ்வெல்

November 6, 2026

ர்வதேச கிரிக்கெட்டிலிருந்து அவுஸ்திரேலியாவின் கிளென் மக்ஸ்வெல் ஓய்வு பெற்றுள்ளார். இது தவிர முதற்தரப் போட்டிகள், ஏ போட்டிகளிலிருந்தும் மக்ஸ்வெல் ஓய்வு

In pa

ஒருநாள் உலகக் கிண்ணத் தொடர்; இந்திய – பாகிஸ்தான் மோதலுக்கு 8.4 மில்லியன் கோரிக்கைகள்

November 6, 2026

சர்வதேச கிரிக்கெட் சபையின் ஒருநாள் உலகக் கிண்ணத் தொடரில், இந்தியா – பாகிஸ்தான் குழுநிலைப் போட்டிக்கான நுழைவுச்சீட்டு விண்ணப்பங்கள் ஏறத்தாழ

Ronal

சர்வதேச போட்டிகளில் இருந்து ரொனால்டோ ஓய்வு!

November 6, 2026

சர்வதேச கால்பந்து போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக போர்த்துக்கல் வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ அறிவித்துள்ளார். தனது இந்த ஓய்வு முடிவை

gor

ஜோர்தானில் இலங்கை தூதரகம் முன்பாக கூரிய ஆயுத தாக்குதல்

November 6, 2026

ஜோர்தானில் வாழும் இலங்கையர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளதாக ஜோர்தானுக்கான இலங்கைத் தூதரகம் அறிவித்துள்ளது. அம்மான் நகரில் உள்ள இலங்கைத் தூதரகத்தின்

Parliament

இலங்கை விமான படைக்கான மேலதிக ஒதுக்கம் நிறைவேற்றம்

November 6, 2026

இலங்கை விமானப் படைக்கு 4,261 மில்லியன் ரூபாயை வழங்குவதற்காகச் சமர்ப்பிக்கப்பட்ட 2026 ஆம் ஆண்டின் 8 ஆம் இலக்க குறைநிரப்பு

ara

அறக்கட்டளைகள் திருத்தச் சட்டமூலம் நிறைவேற்றம்

November 6, 2026

அறக்கட்டளைகள் திருத்தச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு திருத்தங்கள் ஏதுமின்றி நிறைவேற்றப்பட்டது. இதற்கமைய, 1917 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க

anu

குற்றத் தடுப்புச் சட்டமூலத்தில் தடுப்பு காவல் உத்தரவு காலத்தை திருத்தம் செய்ய ஜனாதிபதி தயார்?

November 6, 2026

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத் தடுப்புச் சட்டமூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சந்தேகநபர்களைத் தடுத்து வைக்கும் காலத்தை 72 மணித்தியாலத்திலிருந்து 48 மணித்தியாலமாகக் குறைப்பதற்குத் தாம்

dsaf

ஆழ்கடலில் பிடிப்பட்ட போதைப்பொருள்

November 5, 2026

இலங்கைக்கு தெற்கே உள்ள ஆழ்கடல் பகுதியில் கடற்படையினரால் பொறுப்பேற்கப்பட்ட மீன்பிடிப் படகில் காணப்பட்ட போதைப்பொருளின் அளவு 189 கிலோ கிராமிற்கும்

ci

காகிதங்கள் என்ற பெயரில் இறக்குமதி செய்யப்பட்ட பாரியளவான சிகரெட் தொகை பறிமுதல்

November 5, 2026

போலி ஆவணங்களைச் சமர்ப்பித்து சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட, சுமார் 792 மில்லியன் ரூபாய் பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகள் அடங்கிய கொள்கலன்

bus

இலங்கை போக்குவரத்து சபையில் இயங்கக்கூடிய நிலையில் 5,000 மட்டுமே!

November 5, 2026

இலங்கை போக்குவரத்து சபையில் 7,130 பேருந்துகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக நெடுஞ்சாலைகள் மற்றும் போக்குவரத்து பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார்.