பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தினால் தேசிய பராமரிப்புக் கொள்கை பரிந்துரை

பெண்களின் உழைப்பை மதிக்கும் ஒரு நியாயமான சமூகத்தையும், பாதுகாப்பான பொருளாதாரத்திற்கான தேசிய பராமரிப்புக் கொள்கையினையும் நிறுவுதல் மிகவும் அவசியமாகும் எனப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தினால் பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை (5) முன்வைக்கப்பட்ட ‘தேசிய பராமரிப்புக் கொள்கையொன்றை உருவாக்க வேண்டும்’ பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்..

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தினால் தேசிய பராமரிப்புக் கொள்கையொன்றைப் பரிந்துரைத்து சமர்ப்பிக்கப்பட்டுள்ள இந்தப் பிரேரணை குறித்து உரையாற்றக் கிடைத்தமை இட்டு நான் மட்டற்ற மகிழ்ச்சியடைகிறேன். குறிப்பாக, ஆறு வருடங்களுக்கு முன்னர் பாராளுமன்றத்தில் எனது கன்னி உரையை நிகழ்த்திய போது, ‘பராமரிப்பு பொருளாதாரம்’ பற்றி நான் பேசிய வேளையில், இச்சபையில் மிகக் குறைந்த எண்ணிக்கையிலான பெண் உறுப்பினர்களே இருந்தனர். அன்று அந்தத் தலைப்பைப் பற்றிப் பேசுவதே ஒரு புதிய விடயமாகக் கருதப்பட்டது.

ஆனால், ஆறு வருடங்களின் பின்னர் இன்று இத்தலைப்பைப் பற்றிப் பேசுவதற்கு பாராளுமன்றத்திற்குள்ளும் வெளியேயும் ஒரு பலமான குழு எமக்கு இருப்பையிட்டு நான் மகிழ்ச்சியடைகிறேன். அந்த உரையாடல் இன்று எந்தளவுக்கு வளர்ச்சியடைந்துள்ளது என்றால், எமது தேசியக் கொள்கை வரைவுக்கான ஒரு முன்மொழிவை முன்வைக்கும் அளவுக்கு பாராளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் இக்கருத்தாடல் வலுவடைந்திருக்கின்றது.

உள்ளூராட்சி மன்றங்களின் தலைமைத்துவம், சமூக நிறுவனங்கள், அரச சேவை, கல்வித் துறை உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் பெண்களின் பிரதிநிதித்துவம் அதிகரித்துள்ள ஒரு சூழலில், இவ்வாறானதொரு தீர்க்கமான அதே நேரத்தில் மிக முக்கியமான தலைப்பு குறித்து உரையாடலை முன்னெடுப்பது காலத்தின் தேவையாகும்.

பொதுவாக இத்துறைகளில் பெண்களின் பங்களிப்பை மேம்படுத்தி வலுப்படுத்த வேண்டுமாயின், பெண்களின் உழைப்பை அங்கீகரித்து, ஒரு பிரஜையாக அனைத்துத் துறைகளிலும் சமமாகவும் கௌரவமாகவும் தனது விருப்பத்திற்கமைய பங்கெடுப்பதற்கான அவரது உரிமையை ஏற்றுக்கொண்டு, அதற்கான பிரதான தடைகளை நீக்குவதற்கு நாம் செயற்பட வேண்டும்.

பெண்களின் அரசியல் பங்களிப்பு குறித்து அதிக கவனம் செலுத்தப்பட்டு வரும் இக்காலக்கட்டத்தில், பெண்கள் பிரஜைகளாக சமூகம், அரசியல் மற்றும் கலாசார ரீதியில் அச்சமின்றி கௌரவமான முறையில் செயற்பட வேண்டுமாயின், ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகப் பரப்புகளிலும் அவர்களின் கௌரவம் பேணப்படும் வகையிலும், பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் வகையிலும் அந்தத் தளங்கள் ஒழுங்கமைக்கப்படுவது குறித்து நாம் கவனம் செலுத்த வேண்டும்.

அதேபோன்று, இது சட்டத்தை அமுல்படுத்துவதன் மூலம் மாத்திரமன்றி, ஒரு சமூக மாற்றத்தின் ஊடாகவே நிகழ வேண்டும். அந்தச் சமூக மாற்றத்தினூடாக பெண்களுக்கு நீதியும் நியாயமும் கிடைக்க வேண்டும் என்பதுடன், அனைத்துப் பிரஜைகளும் கௌரவமாகவும் பாதுகாப்பாகவும் சம வாய்ப்புகளுடனும் வாழக்கூடிய ஒரு சமூகத்தையே நாம் எதிர்பார்க்கின்றோம், என்றார்.

Harshana-Suriyapperuma

நிதிச் செயலாளர் சமூகமளிக்கத் தவறினால் சட்ட நடவடிக்கை: சுதந்திர சட்டத்தரணிகள் அமைப்பு எச்சரிக்கை

April 30, 2026

நிதி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும, நாடாளுமன்றக் குழு முன்னிலையில் சமூகமளிக்கத் தவறினால், அவருக்கு எதிராக நாடாளுமன்ற பொறிமுறையூடாக

sund

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்; குற்றவாளிகள் தப்பிக்க முடியாது!

April 30, 2026

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சூத்திரதாரிகளுக்கு நிச்சயமாகத் தண்டனை கிடைக்கும். அதற்கான விசாரணைகள் மிக வேகமாக முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. ஒரு நீதியான விசாரணைகள்

Kajen

இனப்பிரச்சினைத் தீர்வுக்காகத் தமிழ்த் தேசியக் கட்சிகளை ஒருமித்த நிலைப்பாட்டுக்குக் கொண்டுவரத் தமிழ்ச் சட்டத்தரணிகள் பேரவை எடுத்து வரும் முயற்சி குறித்து…

April 30, 2026

“ஈழத்தமிழர் அரசமைப்பு நிர்ணயப் பொதுச்சபை வழிநடத்தல் குழுவின் செயற்பாடானது, தமிழ்ச் சட்டத்தரணிகள் பேரவை முன்னெடுத்து வரும் ஒற்றுமை முயற்சியை மேலும்

mann

மன்னார் மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம்: பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்

April 30, 2026

மத்திய மற்றும் மாகாண அரசுகளின் நிதி ஒதுக்கீட்டில் முன்னெடுக்கப்படவுள்ள புதிய அபிவிருத்தி திட்டங்களுக்கான அனுமதி வழங்குதல் மற்றும் மாவட்டத்தின் முக்கிய

soor

நிதிபற்றிய குழுவில் முன்னிலையாக முடியாது – திறைசேரி செயலாளர்

April 30, 2026

அரச நிதிப்பற்றியக் குழுவில் இன்று முன்னிலையாக முடியாதென திறைசேரியின் செயலாளர் ஹர்ஷன சூரியப்பெரும கடிதம் ஒன்றின் மூலம் அறிவித்துள்ளார். அது

FB_IMG_1777466129432

விளையாட்டில் அரசியல் வேண்டாம்: எரானுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி அதிரடி

April 30, 2026

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் ‘மாற்றத்திற்கான குழுவின்’ (Transformation Committee) தலைவராக நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரத்னவை, கட்சியின்

684152693_122289994754194641_3108322150554372323_n

ஆள் கடத்தல் மற்றும் சிறுவர் துஷ்பிரயோக விசாரணை: 47 வயது நபர் மீது குற்றம் சுமத்தப்பட்டது

April 30, 2026

காணாமல் போன சிறுமி ஒருவர் மற்றும் பாலியல் சுரண்டல் குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணையைத் தொடர்ந்து, 47 வயதுடைய நபர் ஒருவர்

peel poli

மிசிசாகாவில் துப்பாக்கி மற்றும் போதைப்பொருட்களுடன் இருவர் கைது

April 30, 2026

மிசிசாகாவில் நடத்தப்பட்ட வாகனச் சோதனையின் போது, தோட்டாக்கள் நிரப்பப்பட்ட கைத்துப்பாக்கி மற்றும் போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டதைத் தொடர்ந்து, இரண்டு இளைஞர்கள் மீது

canada police251

கால்கரியில் தபால் பெட்டி உடைப்பு: இருவர் மீது 98 குற்றச்சாட்டுகள் பதிவு

April 30, 2026

நகரின் வடகிழக்குப் பகுதியில் தொடர்ச்சியாக இடம்பெற்ற தபால் பெட்டி (Mailbox) உடைப்புச் சம்பவங்கள் குறித்த விசாரணையைத் தொடர்ந்து, இரண்டு ஆண்கள்

683205215_122290010084194641_7110331960142875781_n

வின்னிபெக் மிரட்டிப் பணம் பறித்தல் மற்றும் தீவைப்புச் சம்பவங்கள்: ஒன்டாரியோ இளைஞர் மீது குற்றம் சுமத்தப்பட்டது

April 30, 2026

வின்னிபெக் நகரில் உள்ள உள்ளூர் வணிக நிறுவனங்களை இலக்கு வைத்து நடத்தப்பட்ட தொடர்ச்சியான மிரட்டிப் பணம் பறித்தல் மற்றும் தீவைப்புச்

682498274_122290014542194641_8190665495581400332_n

வட ஒன்டாரியோ சிறுவன் கடத்தல் விவகாரம்: சிறைத்தண்டனையைத் தொடர்ந்து நாடு கடத்தப்படும் அபாயத்தில் குற்றவாளி

April 30, 2026

வட ஒன்டாரியோவில் (Northern Ontario) சிறுவன் ஒருவனைக் கடத்திய குற்றத்திற்காக தண்டனை விதிக்கப்பட்ட பிராம்ப்டன் (Brampton) பகுதியைச் சேர்ந்த 37

687038414_122290016300194641_7422793790922838407_n

டொராண்டோ நகரில் நடந்த கொள்ளைச் சம்பவம்: மூன்று சந்தேக நபர்களைத் தேடும் காவல்துறை

April 30, 2026

டொராண்டோ நகரின் மையப்பகுதியில் (Downtown) நடந்த கொள்ளைச் சம்பவத்தைத் தொடர்ந்து, மூன்று சந்தேக நபர்களை அடையாளம் காண காவல்துறை பொதுமக்களின்