பாப்பரசர் 14ஆம் லியோவிடம் சான்றாதாரப் பத்திரங்களை சமர்ப்பித்தார் இலங்கையின் புதிய தூதுவர்

ஜெனீவாவுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதி தூதுவர் சுமித் தசநாயக்க, வத்திக்கான் – அப்போஸ்தலிக் அரண்மனையில் பாப்பரசர் 14ஆம் லியோவிடம் தனது சான்றாதாரப் பத்திரங்களைச் சமர்ப்பித்துள்ளார்.

அதற்கமைய, அவர் ஜெனீவாவில் வசித்தவாறே வத்திக்கானுக்கானஇலங்கையின் அடுத்த தூதுவராகவும் பணியாற்றவுள்ளார்.

கடந்த 21ஆம் திகதி நடைபெற்ற இந்த சான்றாதாரப் பத்திரங்கள் கையளிக்கும் நிகழ்வில் உரையாற்றிய பாப்பரசர் 14ஆம் லியோ, “தமது ஆதிக்கத்தை நிலைநிறுத்துவதற்கான ஒரு நிபந்தனையாக ஆயுதங்கள் மூலம் அமைதியைத் தேட முயற்சிக்கும் இவ்வாறானதொரு காலகட்டத்தில், இருதரப்பு, பிராந்திய மற்றும் பன்முகத்தன்மை கொண்ட அனைத்து மட்டங்களிலும் கலந்துரையாடல்களை ஊக்குவிப்பதோடு, இணக்கப்பாடுகளைத் தேடும் இராஜதந்திரத்தை நோக்கி மீண்டும் திரும்புவதற்கான அவசரத் தேவை ஏற்பட்டுள்ளது” எனக் குறிப்பிட்டார்.

தூதுவர்களின் சேவை, அந்தந்த நாடுகளுக்கும் வத்திக்கானுக்கும் இடையே நம்பிக்கை மற்றும் ஒத்துழைப்பை வளர்க்கும் ஒரு முக்கிய பாலமாகும் என்றும் பாப்பரசர் தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

நமது கூட்டு முயற்சிகள் இருதரப்பு மற்றும் பன்முக உறவுகளுக்குப் புதிய உயிர் கொடுக்க பங்களிப்பதுடன், நமது சமூகங்களில் ஓரங்கட்டப்பட்ட மற்றும் மறக்கப்பட்ட மக்கள் மீது கவனம் செலுத்தவும் உதவும். இதன் மூலம் மிகவும் நியாயமான, சகோதரத்துவம்மிக்க மற்றும் அமைதியான உலகிற்கு வலுவான அடித்தளமிடுவதற்கு நாம் இணைந்து பணியாற்ற முடியும் என்றார்.

இதன்போது, தூதுவர் சுமித் தசநாயக்க, இலங்கை ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவின் வாழ்த்துகளை பாப்பரசரிடம் சமர்ப்பித்ததுடன், இலங்கைக்காகவும்; மக்களுக்காகவும் பிரார்த்தனை செய்யுமாறு அவரிடம் கேட்டுக்கொண்டார். இலங்கைக்கும் வத்திக்கானுக்கும் இடையே நிலவும் நீண்டகால நட்பு உறவுகளை நினைவு கூர்ந்த தூதுவர் சுமித் தசநாயக்க, 2027 ஆம் ஆண்டில் இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவினால் பாப்பரசர் 14ஆம் லியோவுக்கு ஏற்கனவே விடுக்கப்பட்டுள்ள அழைப்பையும் மீண்டும் நினைவுபடுத்தினார்.

இந்த சான்றாதாரப் பத்திரங்கள் கையளிக்கும் நிகழ்வுக்கு இணையாக, தூதுவர் சுமித் தசநாயக்க, வத்திக்கான் இராஜங்கச் செயலாளர் கர்தினால் பீட்டர் பரோலினையும் சந்தித்து, இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்து கலந்துரையாடினார்.

அத்துடன், இலங்கைக்கும் வத்திக்கானுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளின் 50ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடுவதற்காக 2025 நவம்பர் மாதத்தில் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த, அரசுகள் மற்றும் சர்வதேச அமைப்புகளுடனான உறவுகளுக்கான செயலாளர் பேராயர் பால் ரிச்சர்ட் காலகரையும் தூதுவர் சந்தித்தார்.

இதன்போது, பேராயர் பால் ரிச்சர்ட் காலகர் தனது இலங்கை விஜயம், அதன் முக்கியத்துவம் மற்றும் இலங்கையிலிருந்து தமக்குக் கிடைத்த விருந்தோம்பல் என்பனவற்றை பாராட்டி நினைவு கூர்ந்தார்.

தூதுவர் சுமித் தசநாயக்கவுடன் இணைந்து சர்வதேச நாடுகளான சியெரா லியோன், பங்களாதேஷ், யேமன், ருவாண்டா, நமீபியா, மொரிஷியஸ் மற்றும் சாட் ஆகிய நாடுகளின் வதிவிடமற்ற தூதுவர்களும் அன்றைய தினமே பாப்பரசர் 14ஆம் லியோவிடம் தங்களது சான்றாதாரப் பத்திரங்களைச் சமர்ப்பித்தனர்.

doug-ford-ontario-premiere-february-7-2023

அவர் எனது பின்புறத்தில் முத்தமிடட்டும்’: ட்ரம்பின் புதிய வரி அச்சுறுத்தலுக்கு ஃபோர்ட் கடும் கண்டனம்

August 24, 2026

அவர் எனது பின்புறத்தில் முத்தமிடட்டும்’: ட்ரம்பின் புதிய வரி அச்சுறுத்தலுக்கு ஃபோர்ட் கடும் கண்டனம்எதிர்வரும் புத்தாண்டு முதல் கனடாவின் அனைத்து

trump carney

வாகனங்கள் மீதான இறக்குமதி வரியை 50% ஆக உயர்த்த ட்ரம்ப் திட்டம்

August 24, 2026

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், கனடாவுக்கு எதிராகப் பதிலடி கொடுக்கும் வகையில், எதிர்வரும் புத்தாண்டு முதல் “அனைத்து வகையான பெரிய

au

அவுஸ்திரேலியாவில் பாலூட்டி விலங்கில் முதன்முறையாக எச்5என்1 பறவைக் காய்ச்சல் தொற்று உறுதி

August 24, 2026

அவுஸ்திரேலியாவில் முதன்முறையாக பாலூட்டி விலங்கொன்றில் எச்5என்1 (H5N1) பறவைக் காய்ச்சல் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தெற்கு அவுஸ்திரேலியாவின் பீச்போர்ட்

fif

பிஃபா தலைவரை சிறுவர் கால்பந்து தொடரில் பங்கேற்பதை தவிர்க்குமாறு கோரிக்கை

August 24, 2026

சர்வதேச கால்பந்து கூட்டமைப்பின் தலைவர் ஜியானி இன்ஃபான்டினோவை இந்த வார இறுதியில் டொமினிகன் குடியரசில் நடைபெறவுள்ள சிறுவர் கால்பந்து தொடரில்

jud

வவுனியாவில் மகளை துஷ்பிரயோகம் செய்த தந்தைக்கு கடூழிய சிறைத்தண்டனை

August 24, 2026

2013 ஆம் ஆண்டு வவுனியாவில் தனது 14 வயதுடைய மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தைக்கு 15 வருட கடூழிய

26-6a8afc6b4e102

மஞ்சள் காவிக்கு சிறப்பு சலுகை?

August 24, 2026

அனுராதபுரத்தின் முன்னாள் அட்டமஸ்தானாதிபதி பல்லேகம ஹேமரத்தன தேரர், மேல் நீதிமன்ற வளாகத்திற்குள் நீதிபதி நுழையும் நுழைவாயிலின் ஊடாக எவ்வாறு நீதிமன்ற

NAMAL

மக்கள் பிரச்சினைகளை விடுத்து அநுர தரப்பு எதிர்க்கட்சி உறுப்பினர்களின் வழக்குகளில் தலையிடுகின்றது!

August 24, 2026

தற்போதைய அநுர அரசாங்கம் மக்கள் பிரச்சினைகளை விடுத்து, எதிர்க்கட்சி உறுப்பினர்களின் வழக்குகளை துரிதப்படுத்தவும், அவர்களை சிறைக்கு அனுப்புவதற்குமே விசேட கவனம்

dailythanthi_2026-08-24_vrhb80pa_protest

“பணி நிரந்தரம் கோரி சென்னையில் தூய்மைப் பணியாளர்கள் மறியல்; 250 பேர் கைது!”

August 24, 2026

சென்னை சென்னை பாரிமுனையில் பணி நிரந்தரம் செய்யக் கோரித் தற்காலிகத் தூய்மைப் பணியாளர்கள் நடத்திய திடீர் சாலை மறியலும், அதனைத்

dailythanthi_2026-08-23_qs9w3fhj_13 (1)

“புதிய நிறுவனங்கள் சென்னைக்கு வரத் தயங்கும்!” – பரந்தூர் விமான நிலையத் திட்ட ரத்து குறித்து உதயநிதி ஸ்டாலின் கடும் கண்டனம்

August 24, 2026

சென்னை பரந்தூர் விமான நிலையத் திட்டத்தைக் கைவிடுவதாக த.வெ.க அரசு அறிவித்துள்ள நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் இதற்குத்

maalai-malar_2026-08-24_06gims2h_Anbumani

“புதிய விமான நிலையத்திற்கான மாற்று இடத்தை விரைந்து அறிவிக்க வேண்டும்!” – அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

August 24, 2026

சென்னை பரந்தூர் விமான நிலையத் திட்டம் கைவிடப்பட்டுள்ள நிலையில், சென்னைக்கு 2-வது விமான நிலையம் அமைப்பதற்கான மாற்று இடத்தை அரசு

1200-675-24217931-755-24217931-1747840878798

“அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா: ஒரே காரணத்திற்காக அடுத்தடுத்து மனுவா?” – பொதுநல வழக்கைத் தள்ளுபடி செய்த சென்னை உயர் நீதிமன்றம்!

August 24, 2026

சென்னை அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 6 பேர் தங்களது பதவியை ராஜினாமா செய்ததை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவைச் சென்னை

collage-1700827110

பரந்தூர் விமான நிலையத் திட்டம் ரத்து: மக்கள் போராட்டத்திற்கு மாபெரும் வெற்றி!” – வேல்முருகன் வரவேற்பு மற்றும் கோரிக்கைகள்

August 24, 2026

பரந்தூர் விமான நிலையத் திட்டத்தைக் கைவிடுவதாக முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளதைத் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் வரவேற்றுள்ளார். அவரது