பாடசாலை மாணவர்களிடையே பரவி வரும் மெனிஞ்சைடிஸ் வைரஸ் நோய் குறித்து பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை என பிரதான தொற்றுநோயியல் நிபுணர் விசேட வைத்தியர் பாலித கருணாபேம தெரிவித்துள்ளார்.
தியத்தலாவையில் 28 பேரும், வெலிமடையில் 13 பேரும், ரிகில்லகஸ்கட பகுதியில் 25 பேரும் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடுமையான காய்ச்சல், தலைவலி மற்றும் வாந்தி ஆகியவை இதன் முக்கிய அறிகுறிகளாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.