பஸ் விபத்தில் ஒருவர் பலி – 34 பேர் காயம்

ஹட்டன் – டிக்கோயா பிரதான வீதியில் நேற்று(29) பிற்பகல் இடம்பெற்ற பஸ் விபத்தில் காயமடைந்தோரில் ஒருவர் உயிரிழந்தார்.

அவர் காயமடைந்து சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

உயிரிழந்தவர் 70 வயதுடைய ஹட்டன் பகுதியைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.

மேலும் காயமடைந்த 34 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதுடன், ஒருவர் மேலதிக சிகிச்சைகளுக்காக கண்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

டயகமவில் இருந்து ஹட்டன் நோக்கி பயணித்த தனியார் பஸ் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த பஸ் வீதியை விட்டு விலகி சுமார் 25 அடி பள்ளத்தில் விபத்துக்குள்ளானது.

இவ்விபத்து நேற்று (29) பிற்பகல் சுமார் 3.00 மணியளவில் ஹட்டன் – போடைஸ் வழியாக டிக்கோயா பட்டல்கல பகுதியில் இடம்பெற்றது.

மற்றொரு பஸ்ஸிற்கு வழிவிட முற்பட்டபோது, கட்டுப்பாட்டை இழந்த பஸ் வீதியிலிருந்து விலகி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தில் காயமடைந்தவர்கள் டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், 17 ஆண்களும், 14 பெண்களும், 2 சிறுவர்களும் அடங்குகின்றனர்.

விபத்து இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் பஸ்ஸில் சுமார் 40 பேர் பயணித்திருந்ததாகவும், சாரதியும், உதவியாளரும் காயமடைந்துள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

peel poli

மிசிசாகாவில் துப்பாக்கி மற்றும் போதைப்பொருட்களுடன் இருவர் கைது

April 30, 2026

மிசிசாகாவில் நடத்தப்பட்ட வாகனச் சோதனையின் போது, தோட்டாக்கள் நிரப்பப்பட்ட கைத்துப்பாக்கி மற்றும் போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டதைத் தொடர்ந்து, இரண்டு இளைஞர்கள் மீது

canada police251

கால்கரியில் தபால் பெட்டி உடைப்பு: இருவர் மீது 98 குற்றச்சாட்டுகள் பதிவு

April 30, 2026

நகரின் வடகிழக்குப் பகுதியில் தொடர்ச்சியாக இடம்பெற்ற தபால் பெட்டி (Mailbox) உடைப்புச் சம்பவங்கள் குறித்த விசாரணையைத் தொடர்ந்து, இரண்டு ஆண்கள்

683205215_122290010084194641_7110331960142875781_n

வின்னிபெக் மிரட்டிப் பணம் பறித்தல் மற்றும் தீவைப்புச் சம்பவங்கள்: ஒன்டாரியோ இளைஞர் மீது குற்றம் சுமத்தப்பட்டது

April 30, 2026

வின்னிபெக் நகரில் உள்ள உள்ளூர் வணிக நிறுவனங்களை இலக்கு வைத்து நடத்தப்பட்ட தொடர்ச்சியான மிரட்டிப் பணம் பறித்தல் மற்றும் தீவைப்புச்

682498274_122290014542194641_8190665495581400332_n

வட ஒன்டாரியோ சிறுவன் கடத்தல் விவகாரம்: சிறைத்தண்டனையைத் தொடர்ந்து நாடு கடத்தப்படும் அபாயத்தில் குற்றவாளி

April 30, 2026

வட ஒன்டாரியோவில் (Northern Ontario) சிறுவன் ஒருவனைக் கடத்திய குற்றத்திற்காக தண்டனை விதிக்கப்பட்ட பிராம்ப்டன் (Brampton) பகுதியைச் சேர்ந்த 37

687038414_122290016300194641_7422793790922838407_n

டொராண்டோ நகரில் நடந்த கொள்ளைச் சம்பவம்: மூன்று சந்தேக நபர்களைத் தேடும் காவல்துறை

April 30, 2026

டொராண்டோ நகரின் மையப்பகுதியில் (Downtown) நடந்த கொள்ளைச் சம்பவத்தைத் தொடர்ந்து, மூன்று சந்தேக நபர்களை அடையாளம் காண காவல்துறை பொதுமக்களின்

iran

ஐக்கிய மக்கள் சக்தியின்பொறுப்புகளில் இருந்து விலகிய இரான் விக்ரமரத்ன

April 30, 2026

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் இடைக்கால நிர்வாகக் குழுவின் தலைவராகப் பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்குழு மற்றும் நிர்வாகக்

child-abuse-copy

பாடசாலை மாணவிகள் காருக்குள் துஷ்பிரயோகம்; ஆசிரியர் கைது

April 30, 2026

கம்பஹாவில் பாடசாலை மாணவியுடன் முறையற்ற வகையில் செயற்பட்ட ஆசிரியர் அதிசொகுசு கார் ஒன்றுக்குள் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். லக்கல, பக்கமுன

Srith

“நாம் நீலகாமம்” அறவழிப் போராட்டத்துக்கு தமிழரசு கட்சி ஆதரவு

April 30, 2026

“நாம் நீலகாமம்” அறவழிப் போராட்டத்துக்கு நாமும் எமது முழு பங்களிப்பை வழங்குவோம் என்று இலங்கை தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாணம் –

ir

ஈரான் மீதான துறைமுக முற்றுகை இன்னும் பல மாதங்களுக்கு நீடிக்க வாய்ப்பு?

April 30, 2026

ஈரான் மீதான துறைமுக முற்றுகை இன்னும் பல மாதங்களுக்கு நீடிக்க வாய்ப்புள்ள நிலையில், உலகளாவிய எண்ணெய் சந்தையை நிலைப்படுத்துவது குறித்து

hea

அதிக வெப்பநிலையால் மராட்டியத்தில் 109 பேர் உயிரிழப்பு

April 30, 2026

மராட்டிய மாநிலத்தில் கோடை வெயிலின் தாக்கம் முன்னெப்போதும் இல்லாத வகையில் தீவிரமடைந்துள்ள நிலையில், வெப்பத்தால் உயிரிழப்புகள் அதிகரித்து வருவகின்றன. மாநில

Sri-Lankan-Parliament-Complex

விரைவில் சமர்ப்பிக்கப்படுகின்றது பாராளுமன்றின் முழுமையான கணக்கறிக்கை

April 30, 2026

8ஆவது மற்றும் 9ஆவது பாராளுமன்ற அமர்வுகளின் நிதிப் பயன்பாடு குறித்து அனைத்துப் பிரிவுகளையும் உள்ளடக்கிய முழுமையான தணிக்கையினை மேற்கொண்டு, அந்த

heat

இன்று அதிக வெப்பநிலை

April 30, 2026

இன்று(30) பல பகுதிகளில் பகல் வேளையில் வெப்பச் சுட்டெண், மனித உடலுக்கு உணரப்படும் வெப்பமானது “கவனம் செலுத்த வேண்டிய” மட்டத்தில்