காஸா நோக்கிப் பயணமான ‘சுமுத் குளோபல் புளோட்டிலா’ (Global Sumud Flotilla) எனப்படும் சர்வதேச கப்பல் பேரணியில் பங்கேற்று, பின்னர் இஸ்ரேலியப் படையினரால் தடுத்துவைக்கப்பட்ட நிலையில் நாடு திரும்பிய மனித உரிமைகள் செயற்பாட்டாளர் சமீரா மெஹ்புப்தீன், தாங்கள் அனுபவித்த சித்திரவதைகள் மிகவும் சிறிய பகுதி மட்டுமே என தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், பலஸ்தீன மக்கள் தினந்தோறும் இதைவிடப் பன்மடங்கு கடுமையான சித்திரவதைகள் மற்றும் துன்பங்களை எதிர்கொண்டு வருவதாகவும் கரிசனை வெளியிட்டார்.
காஸா மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை கொண்டு செல்லும் நோக்கில் சர்வதேச செயற்பாட்டாளர்கள் இணைந்து மேற்கொண்ட இந்தக் கடல் பேரணி, உலகளவில் பெரும் கவனத்தை ஈர்த்திருந்தமை குறிப்பிடத்தக்கது.