பருத்தித்துறை இராணுவ சிற்றுண்டிச்சாலையில் புகைபொருட்கள் விற்பனைக்கு தடை

பருத்தித்துறை துறைமுகத்திற்கு முன்னால் உள்ள இராணுவ சிற்றுண்டிச்சாலையில் புகைத்தல் பொருட்கள் விற்பனையை தடை செய்வதென்றும், நகர சபையின் உரிய அனுமதிகள் பெறப்படவில்லையேல் அச்சிற்றுண்டிச்சாலையை மூடுவதென்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பருத்தித்துறை நகர சபையின் அமர்வு தவிசாளர் வின்சன் டீ போல் டக்ளஸ் போல் தலைமையில் நேற்று (20) காலை நடைபெற்றபோதே குறித்த தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

அத்துடன் கனரக வாகனங்கள் பாடசாலை ஆரம்பிப்பதற்கு முன் காலை 6:45 மணி முதல் 8 மணி வரையும், பாடசாலை முடிவடையும் நேரத்தில் பகல் 12 மணி முதல் 2 மணி வரை பயணிக்க தடை விதிப்பது…

புதிய ஜேசிபி இயந்திரம் ஒன்று கொள்வனவு செய்வது தொடர்பாக தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் அனல் ரெஜி கொண்டுவந்த தீர்மானம் அதன் தேவைப்பாடு தொடர்பான ஆய்வுக்கு பின்னர் அடுத்த கூட்டத்தில் ஆராய்வது…

மரக்கறி சந்தை மீண்டும் நவீன சந்தை தொகுதிக்கு மாற்றப்பட்டமையால் ஏற்கனவே குத்தகைக்கு வழங்கப்பட்டவருக்கு வழங்குவது…முனையில் அமைந்துள்ள சிறுவர் மகிழ்வகத்திற்கு வருகை தருவோர்க்கு ரூபா 20/- பணம் பரீட்சார்த்தமாக 3 மாதம் வரை அறவிடுவது…

மகிழ்வகம் காலை 9:00 மணியிலிருந்து இரவு 9:00 மணி வரையும் திறப்பது…முனை வெளிச்ச வீடு திருத்தப்பட்டு பார்வையாளர்களிடமிருந்து கட்டணம் அறவிடுவது…

இடையூறாக நிறுத்தப்படும் தனியார் போக்குவரத்து சேவையில் ஈடுபடும் ஊர்திகளுக்கு உடனடி தண்டமாக ரூபா 2000/- அறவிடுவது…

நகரசபை விதிகளை மீறி வியாபாரதில் ஈடுபடுவோர்க்கும், மரக்கறி சந்தையிலிருந்து 500 மீற்றர் தூரத்திற்குள் மரக்கறி மற்றும் சந்தை பொருட்கள் விற்பனை செய்வோர்க்கும் ரூபா 2000 தண்டம் அறவீடு செய்வது, சட்ட நடவடிக்கை எடுப்பது…

கைப்பற்றப்பட்ட பொருட்களுக்கு உரிய நடவடிக்கை எடுப்பது, நகர சபை எல்லைக்குள் பிறக்கும் குழந்தைகளுக்கு தமிழில் பெயர் சூட்டுவதை ஊக்குவிப்பது…

இரண்டு பிரபல பாடசாலைகள் அருகில் அமைந்துள்ள நிலையில் இராணுவத்தின் சிற்றுண்டி சாலையில் புகைத்தல் விற்பனை செய்வதை தடை செய்வது…

குறித்த இராணுவம் நகரசபை சட்டங்களுக்கு உட்பட்டு உரிய அனுமதி பெறப்படாது இயங்குவதால் அதற்கான உரிய அனுமதி பெறப்படவில்லை எனில் அந்த இராணுவ சிற்றுண்டிச்சாலையை மூடுவது போன்ற தீர்மானங்கள் உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்த ஆண்டுக்கான புதிய நிதிக் குழு, சுகாதாரக் குழு, பெறுகை குழு உட்பட பல குழுக்களும் தெரிவு செய்யப்பட்டன.

 

ganja

ஊர்காவற்துறையில் கஞ்சா கடத்த முற்பட்ட இளைஞர் கைது!  

March 4, 2026

ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுருவில் பகுதியில் 9 கிலோ கிராம் கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது

boa

கடற்றொழிலாளர்களுக்கு தடையின்றி எரிபொருள் விநியோகம்

March 4, 2026

நாட்டில் நிலவும் எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியில், கடற்றொழிலாளர்களுக்குத் தேவையான எரிபொருளை எந்தவிதத் தடையுமின்றி விநியோகிப்பதற்கு முறையான பொறிமுறை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளதாகக்

curr

வெளிநாட்டு நாணயமாற்று நிர்வாகமானது இலங்கையின் பொருளாதார நிலையை அளவிடும் கருவியாக செயற்பட்டு வருகிறது

March 4, 2026

வெளிநாட்டு நாணயமாற்று நிர்வாகமானது இலங்கையின் பொருளாதார நிலையை அளவிடும் கருவியாக வரலாற்று அடிப்படையில் செயற்பட்டு வருகிறது என திருகோணமலை மாவட்ட

b

பிறப்பு வீதம் இலங்கையில் குறைவடைகிறது?

March 4, 2026

இலங்கையில் பிறப்பு வீதம் படிப்படியாகக் குறைந்து வருவதாக லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் வைத்தியர்

arrest

போதைப்பொருளுடன் இராணுவச் சிப்பாய் கைது

March 4, 2026

திருகோணமலையில் வான்எல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில், உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கி மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் இன்று(04.03.2026) கைது

manmu

பிரதேசசபையின் தவிசாளர் அச்சுறுத்துவதாக பிரதேச சபை உறுப்பினர் தெரிவிப்பு

March 4, 2026

தனது அதிகாரத்தின் கீழ் உள்ள பிரதேச சபையின் தோல்வியை மூடி மறைப்பதற்காகவும் எதிரான உறுப்பினர்களை அடிபணிய வைப்பதற்காகவும் பொலிஸில் பொய்யான

photo-collage.png (49)

தனியார் நிறுவன ஊழியர்களின் ஒரு நாள் சம்பளம் Rebuilding Sri Lanka நிதியத்திற்கு நன்கொடை

March 4, 2026

அனைத்து நிறுவன ஊழியர்கள் சங்கத்தின் Varun Beverages Lanka Pvt Ltd (Pepsi Cola Company) கிளையின் மற்றும் Royal

jail

கொழும்பு கிராண்ட்பாஸ் படுகொலைச் சம்பவம் : 6 சந்தேக நபர்கள் கைது!

March 4, 2026

கொழும்பு, கிராண்ட்பாஸ் பகுதியில் நபர் ஒருவரை பாராங்கத்தியால் வெட்டிக் கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய 6 சந்தேக நபர்களை விசேட

hari

நிவாரண கொடுப்பனவை செலுத்தி முடிக்கும் காலத்தை நிச்சயமாக குறிப்பிட முடியாது – பிரதமர்

March 4, 2026

தித்வா புயல் தாக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களில் 80 சதவீதத்துக்கும் அதிகானோருக்கு இழப்பீடு மற்றும் நிவாரண கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளது.இழப்பீடு வழங்கல் குறித்து பல்வேறு

Saj

மக்களிடம் ஜனாதிபதி மன்னிப்பு கோரவேண்டும் – சஜித் பிரேமதாச

March 4, 2026

எமது நாட்டை ஒரு சிண்டாக அறிமுகப்படுத்தியமை தொடர்பில் நாட்டிடமும் மக்களிடமும் ஜனாதிபதி மன்னிப்பு கோரவேண்டியது மிகவும் முக்கியமாகும் என எதிர்க்கட்சித்

lssp

லங்கா சமசமாஜக் கட்சியின் யாப்பை மீறி எவரும் செயலாளர் பதவியை கைப்பற்ற முடியாது

March 4, 2026

லங்கா சமசமாஜ கட்சியின் பொதுச் செயலாளர் பதவி மற்றும் கட்சியின் எதிர்கால அரசியல் நகர்வுகள் குறித்து அக்கட்சி தெளிவுபடுத்தியுள்ளது. கடந்த

fue

போர்ச் சூழல் காரணமாக எரிபொருள் விலை அதிகரிக்குமா?

March 4, 2026

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது நடத்திய தாக்குதல்களைத் தொடர்ந்து, மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழல்