பரந்தூர் விமான நிலையம் அமைப்பது குறித்த தவெக அரசின் உண்மையான நிலைப்பாடு என்ன? – சீமான் கேள்வி!

சென்னை:

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது :- பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்க முன்மொழியப்பட்ட இடத்தை மாற்றுமாறு தமிழ்நாடு அரசு, இதுவரை மத்திய அரசிடம் எவ்வித கோரிக்கையும் முன்வைக்கவில்லை என்று மத்திய அரசு அறிவித்துள்ளது அதிர்ச்சியளிக்கிறது. சட்டமன்றத் தேர்தலில் வென்று ஆட்சி, அதிகாரத்தை அடைந்த தவெக அரசு, பரந்தூரில் விமான நிலையம் அமைக்கப்படாது என்றும், அந்த இடத்தில் தொழிற்பேட்டை அமைக்க முடிவெடுத்திருப்பதாகவும் அறிவித்தது. ஆனால், இந்திய நாடாளுமன்றத்தில் நடப்பு கூட்டத்தொடரில் பரந்தூர் விமான நிலையம் தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த மத்திய விமான போக்குவரத்துத்துறை இணை மந்திரி முரளிதர் மோஹோல் பரந்தூரிலிருந்து விமான நிலைய திட்டத்தை வேறு இடத்திற்கு மாற்ற தமிழ்நாடு அரசிடமிருந்து எவ்வித கோரிக்கையும் வரவில்லை என்று தெரிவித்துள்ளது, பரந்தூர் புதிய விமான நிலைய விவகாரத்தில் தவெக அரசு இரட்டை வேடம் போடுகிறதோ என்ற சந்தேகத்தை எழுப்புகிறது.

பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதை தவெக தற்போது ஆதரிக்கிறதா? அல்லது எதிர்க்கிறதா? எதிர்க்கிறது என்றால் இடத்தை மாற்ற வேண்டுமென்று தவெக அரசு இதுவரை மத்திய பாஜக அரசிடம் கோரிக்கை விடுக்காதது ஏன்? முந்தைய திமுக ஆட்சியின்போது விளைநிலங்களை அழித்து புதிய விமான நிலையம் அமைப்பதற்கு எதிராக பரந்தூருக்கே தான் நேரில் சென்றதாவது முதல்வர் விஜய்க்கு நினைவிருக்கிறதா அல்லது அதுவும் மறந்து போனதா? என்ற கேள்விகளுக்கு தவெக அரசின் பதிலென்ன? ஆகவே, பரந்தூர் புதிய விமான நிலையம் அமைப்பது குறித்த தவெக அரசின் உண்மையான நிலைப்பாடு என்ன? என்பது குறித்து தமிழ்நாட்டு மக்களுக்கு உடனடியாக உரிய விளக்கமளிக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

#Seeman #ParandurAirport #TVK #ADMK #DMK #TamilNadu #TamilNews #BMNews #PoliticalUpdate #TvkUpdate #BreakingNewsTN #TamilNaduPolitics #VijayGovernment #TvkGovernment #PoliticalNews #TamilNaduNews #Politics2026 #NaamTamilarKatchi #TamilPolitics

boavdfx

36 நாட்கள் மேலாகக் கடலில் தத்தளித்து உயிருடன் மீட்கப்பட்ட தந்தை, மகன்!

July 26, 2026

36 நாட்களுக்கும் மேலாகக் கடலில் தத்தளித்து மிதந்து கொண்டிருந்த இலங்கை மீனவர்கள் இருவர் பங்களாதேஷின் கொக்ஸ் பாஸார் (Cox’s Bazar),

danu

வத்தளை துப்பாக்கிச் சூட்டுடன் தொடர்புள்ளவர்கள் தனுஷ்கோடியில் கைதானவர்கள்?

July 26, 2026

சட்டவிரோதமாகப் படகில் தனுஷ்கோடி சென்ற இரு இலங்கையர்களும் அண்மையில் வத்தளையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்பிருக்கலாம் என இலங்கை

pre

வெளிநபர்கள் ஜனாதிபதி மாளிகையில்? – ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிக்கை

July 26, 2026

ஜனாதிபதி மாளிகைகளில் வெளிநபர்கள் தங்கியிருப்பதாக ஊடகங்களில் வெளியான செய்தி தொடர்பில் ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. ஜனாதிபதி மாளிகைகளில்

Death-2

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர் உயிரிழப்பு!

July 26, 2026

பெல்லன்வில பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் காயமடைந்த நபர் உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். துப்பாக்கிச் சூட்டிற்கு

download

தமிழ் பேசும் அரசியல் கட்சிகள் ஜனாதிபதியைச் சந்திக்க கோரிக்கை

July 26, 2026

இம்மாத ஆரம்பத்தில் ஒன்றிணைந்து செயற்படுவதற்கான தமது தீர்மானத்தை அறிவித்த ஆறு தமிழ் பேசும் அரசியல் கட்சிகள், தமிழ் பேசும் மக்களைப்

PAORB2GRUNFXLLFYFI5ON7ESCE

கல்கரியில் காணாமல் போன 11 வயது சிறுவனைத் தேடும் பணி ‘நோஸ் ஹில் பூங்கா’ பகுதிக்கு விரிவாக்கம்

July 25, 2026

காணாமல் போன 11 வயதான பார்க்கர் வெல்ஸ் (Parker Wells) என்ற சிறுவனைத் தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும்

HVAI6OYZWRG25PUTY7WGYICNKQ

எட்டோபிகோக் துப்பாக்கிச் சூடு: கொல்லப்பட்ட பெண் அடையாளம் காணப்பட்டார்; சந்தேகநபர் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டது!

July 25, 2026

வெள்ளிக்கிழமை அதிகாலை எட்டோபிகோக் (Etobicoke) பகுதியில் இலக்குவைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் பெண் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, முதல்

MediaFile_20260725_142217_197

பொதுவான பிரச்சினைகள் குறித்து ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை-  ஆறு தமிழ் பேசும் கட்சிகள் அனுமதி கோரிக்கை!

July 25, 2026

தமிழ் பேசும் மக்களின் பொதுவான பிரச்சினைகளில் ஒன்றிணைந்து செயற்பட இம்மாதத் தொடக்கத்தில் தீர்மானித்த ஆறு தமிழ் பேசும் அரசியல் கட்சிகளின்

arrest1

கிளிநொச்சியில் வனஜீவராசிகள் மற்றும் அதிரடிப்படை அதிகாரிகள் மீது தாக்குதல்: ஒன்பது பேர் கைது!

July 25, 2026

கிளிநொச்சி, அக்கரயான்குளம் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது, வனஜீவராசிகள் திணைக்களம் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரின் (STF) கடமைகளுக்கு

6

தர்மேந்திர பிரதான் ராஜினாமா – சென்னையில் கொண்டாட்டம்!

July 25, 2026

சென்னை: மத்திய கல்வி அமைச்சராக இருந்த தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ததை தொடர்ந்து சென்னையில் போராட்டக்காரர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை

photo-collage.png (1)

முக்கிய மைல்கல்லை எட்டியது தமிழ்ச்சமூக மையம்

July 25, 2026

ரொறன்டோ ஒன்டாறியோ – வட கிழக்கு ஸ்காபரோவில் நீண்ட காலமாக எதிர்பார்க்கப்படும் தமிழ்ச் சமூக மையத்தின் கட்டுமானப் பணிகளில் ஏற்பட்ட

4

“இனி அரசியல் பேச மாட்டேன் .. தலையிட மாட்டேன்” – ராமதாஸ் அதிரடி அறிவிப்பு!

July 25, 2026

திண்டிவனம்: 88வது வயதில் அரசியல் துறவறம் மேற்கொள்வதாக ராமதாஸ் அறிவித்துள்ளார். பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று தனது 88-வது பிறந்தநாளை