படுகொலை செய்யப்பட்ட நீலன் திருச்செல்வம் அரசியலமைப்பு மூலமான தீர்வுக்காக அயராது உழைத்தவர் – எரிக் சொல்ஹெய்ம்

படுகொலை செய்யப்பட்ட நீலன் திருச்செல்வம் இலங்கையில் சிங்களவர்களுக்கும் தமிழர்களுக்கும் இடையில் நிலவிய பிளவுகளை சீரமைப்பதற்குப் பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும் தொடர்ந்து போராடியதாகவும், போரை நிறுத்தி, நாட்டின் ஒற்றுமையைக் கட்டியெழுப்புவதற்கு ஏதுவான வகையில் அரசியலமைப்பின் ஊடாகத் தீர்வு காண்பதற்கு அயராது உழைத்ததாகவும் இலங்கைக்கான முன்னாள் சமாதானத்தூதுவரும், நோர்வே நாட்டு இராஜதந்திரியுமான எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி சட்டத்தரணி நீலன் திருச்செல்வம் தொடர்பில் பிரசன்னா சண்முகதாஸ் என்பவரால் தயாரிக்கப்பட்டுள்ள (Neelan: Unsilenced) எனும் ஆவணத்திரைப்படத்தைப் பார்வையிட்டதாகக் குறிப்பிட்டு, அதுபற்றி தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தளப்பக்கத்தில் செய்திருக்கும் பதிவிலேயே எரிக் சொல்ஹெய்ம் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அந்த ஆவணப்படம் இலங்கையின் சமாதானப்பேச்சுவார்த்தை செயன்முறை தொடர்பான பல நினைவுகளை மீட்டெடுக்கும் வகையில் அமைந்திருந்ததாக அவர் அப்பதிவில் தெரிவித்துள்ளார்.

அதேபோன்று ‘இந்த ஆவணத்திரைப்படம் தமிழ் சட்டத்தரணியும், அரசியல்வாதியுமான எனது நண்பர் நீலன் திருச்செல்வத்தைப் பற்றியதாகும். அவர் இலங்கையில் சிங்களவர்களுக்கும் தமிழர்களுக்கும் இடையில் நிலவிய பிளவுகளை சீரமைப்பதற்குப் பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும் தொடர்ந்து போராடியவராவார். நாட்டில் ஒற்றுமையைக் கட்டியெழுப்புவதற்கும், போரை நிறுத்துவதற்கும் ஏதுவான வகையில் அரசியலமைப்பின் ஊடாகத் தீர்வு காண்பதற்கு அவர் அயராது உழைத்தார். உலகளாவிய அமைதித் தூதுவராகவும், மனித உரிமை ஆர்வலராகவும் திகழ்ந்த அவர், எல்லாவற்றுக்கும் மேலாக ஒரு மிகச்சிறந்த மனிதராவார்’ என்றும் எரிக் சொல்ஹெய்ம் அவரது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை ‘துரதிஷ்டவசமாக 1999 ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட தற்கொலைக்குண்டுத்தாக்குதலின் விளைவாக, இந்தக் கொடூர மோதலினால் பலியான பலரில் அவரும் ஒருவராக மாறினார். பின்னாளில் சமாதானத்தை ஏற்படுத்துவதை முன்னிறுத்திப் பணியாற்றிய விடுதலைப்புலிகள் இயக்கத்தின் அன்ரன் பாலசிங்கம், இதுவரை முன்வைக்கப்பட்டவற்றில் நீலனின் அரசியலமைப்பு முன்மொழிவுகளே மிகச்சிறந்தவை எனக் குறிப்பிட்டார்’ என்றும் அவர் அப்பதிவில் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் இலங்கையில் நிலவும் இனப்பிரச்சினையின் மையமாகத் திகழும் அரசியலமைப்பு சார்ந்த சிக்கல்களைப் புரிந்துகொள்வதற்கு இந்த ஆவணத்திரைப்படம் உதவும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

miss

கிளிநொச்சியில் 13 வயது சிறுவனைக் காணவில்லை!

April 17, 2026

கிளிநொச்சி பொன் நகரைச் சேர்ந்த 13 வயதுடைய சிறுவன் ஒருவன் கடந்த 13ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

pim

280 டொலர் கச்சா எண்ணெய் கொடுக்கல் வாங்கல்: ஆதாரங்களை முன்வைக்குமாறு அரசாங்கம் சவால்

April 17, 2026

அரசாங்கம் ஒருபீப்பாய் கச்சா எண்ணெயை சுமார் 268 டொலர் என்ற அதிக விலைக்கு கொள்வனவு செய்ததாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை நிரூபிக்குமாறு

dddd

மத்திய ஒன்ராறியோ – ஒரிலியாவில் வெள்ள அபாயம் அதிகரிப்பு: மீட்புப் பணிகளில் ஊழியர்களும் தொண்டர்களும் தீவிரம்

April 17, 2026

மத்திய ஒன்ராறியோவின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாகத் பெய்து வரும் பலத்த மழை மற்றும் நீர்மட்டம் உயர்வு காரணமாக

NAMAL

எரிசக்தி அமைச்சர் ஜெயக்கொடியின் ராஜினாமா மிகவும் தாமதமானது – நாமல் ராஜபக்ஷ

April 17, 2026

எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடியின் பதவி விலகலை விமர்சித்துள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ,

ff

ஈழத்தமிழர் அரசியலமைப்பு நிர்ணயப் பொதுச்சபையின் வழிநடத்தல் குழு உறுப்பினர்களது விபரங்களை உள்ளடக்கிய ஊடக அறிக்கை

April 17, 2026

தமிழ்த்தேசியப்பேரவையினால் 15.02.2026 அன்று குடிசார் அமைப்புக்கள், அரசியல் தரப்புக்கள், துறைசார் நிபுணர்கள், தமிழ்த் தேசியச் செயற்பாட்டாளர்கள் மற்றும் சமயத்தலைவர்கள் உள்ளிட்ட

Apo

வலுசக்தி அமைச்சின் செயலாளராக ஜி.எம்.ஆர்.டி. அபொன்சு நியமனம்

April 17, 2026

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் வலுசக்தி அமைச்சின் செயலாளராக ஜி.எம்.ஆர்.டி. அபொன்சு நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான நியமனக் கடிதத்தை ஜனாதிபதியின் செயலாளர்

d

ஹோர்முஸ் நீரிணை முழுமையாகத் திறப்பு – டொனால்ட் ட்ரம்ப்

April 17, 2026

ஈரான் கடற்பரப்பில் அமைந்துள்ள சர்வதேச ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த ஹோர்முஸ் நீரிணை (Strait of Hormuz) தற்போது முழுமையாகத் திறக்கப்பட்டுள்ளதாகவும்,

po

பிரிட்டிஷ் கொலம்பியா மாநிலத்தில் உள்ள லாங்லியில் கத்திக்குத்து: ஒருவர் காயம்

April 17, 2026

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாநிலத்தில் உள்ள லாங்லி (Langley), வில்லோபி (Willoughby) பகுதியில் வியாழக்கிழமை பிற்பகல் நடந்த “திட்டமிட்ட” (Targeted)

hf

மேற்கு ஆசியப் போரினால் ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றாக இலங்கை: ஐ.நா

April 17, 2026

மேற்கு ஆசியாவில் நிலவும் போர் நெருக்கடியின் நேரடி மற்றும் மறைமுகத் தாக்கங்களால் ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட நாடுகளில்

ku

தரம் குறைந்த நிலக்கரி இறக்குமதி; குமார ஜெயக்கொடிக்கு ஆதரவாக அமைச்சர்கள் தற்காப்பு வாதம்

April 17, 2026

தரம் குறைந்த நிலக்கரி இறக்குமதி தொடர்பான எந்தவொரு ஊழல் விசாரணைகளிலும் முன்னாள் எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடிக்குத் தொடர்பிருப்பதாக உறுதிப்படுத்தப்படவில்லை

cacv

கனடாவில் பல பெண்களைத் திருமணம் செய்துகொண்ட நபர் குறித்து பொலிஸார் விசாரணை

April 17, 2026

முன்னாள் அமெரிக்க கடற்படை வீரரும், MMA தற்காப்புக் கலை வீரருமான ஜேசன் வாஷிங்டன் (Jason Washington) என்பவர், தனது முந்தைய

5

இலங்கையின் பொருளாதார மீட்சிக்குத் தொடர்ந்தும் ஆதரவு

April 17, 2026

இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தலைமையிலான தூதுக்குழுவினர், 2026 வசந்தகாலக் கூட்டத்தின் (Spring Meetings) போது