படகுத்துறையில் கடற்படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள கடலுணவு கொள்வனவு வாடியை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு- ரவிகரன் எம்.பியிடம் கோரிக்கை-வாடிகளின் உரிமையாளர்களால்

மன்னார் – மாந்தை மேற்கு பிரதேச செயலாளர்பிரிவில், இலுப்பைக்கடவை, படகுத்துறைப் பகுதியில் கடற்படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள கடலுணவுகளைக் கொள்வனவுசெய்யும் வாடிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு, குறித்த வாடிகளின் உரிமையாளர்களால் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களிடம் கோரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது.

படகுத்துறைப் பகுதியில் கடற்படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள கடலுணவுக் கொள்வனவனவு வாடிகளின் உரிமையாளர்களால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக குறித்த பகுதிக்கு நேரில் சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன், நிலைமைகளைப் பார்வையிட்டதுடன், கடலுணவுக் கொள்வனவாளர்கள் மற்றும் மீனவர்களின் பிரச்சினைகள் தொடர்பில் கேட்டறிந்துகொண்டார். இதன்போதே கடலுணவுக் கொள்வனவாளர்களால் மேற்கண்டவாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக படகுத்துறைப்பகுதியில் கடந்த 1970ஆம் ஆண்டு காலப்பகுதியில் கடலுணவுகளைக் கொள்வனவு செய்வதற்கென வாடிகள் அமைக்கப்பட்டு, கடலுணவுக் கொள்வனவுச் செயற்பாடுகள் மிகச்சிறப்பாக இடம்பெற்றுவந்துள்ளன.
இத்தகையசூழலில் கடந்த யுத்த சூழல் காரணமாக அந்தப்பகுதிகளிலிருந்த மக்கள் இடப்பெயர்வைச் சந்திக்கவேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த பகுதி மீள்குடியேற்றம் செய்யப்பட்டபோது, குறித்த இரு கடலுணவுக் கொள்வனவாளர்களுக்குரிய வாடி அமைந்திருந்த பகுதி கடற்படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்ததுடன், அந்த கடலுணவுக் கொள்வனவு வாடிகளையும் கடற்படையினர் பயன்படுத்திவந்துள்ளனர்.
இந்நிலையில் குறித் கடலுணவு கொள்வனவு வாடிகளை விடுவிக்குமாறு, குறித்த வாடிகளின் உரிமையாளர்களால் தொடர்ச்சியாக உரியதரப்பினரிடம் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுவந்தபோதும், அந்தவாடிகளை விடுவிப்பதற்கு இதுவரை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை என இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் அவர்களது கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.
அதேவேளை தற்போது படகுத்துறைப்பகுதியில் 150இற்கும் மேற்பட்ட மீனவர்கள் கடற்றொழிலுக்குச் சென்றுவருவதாக கடலுணவு கொள்வனவாளர்களால் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டது.
இந்நிலையில் இவ்வாறு கடற்படையினால் கடலுணவுக் கொள்வனவு வாடிகள் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதால் கடற்றொழிலாளர்களிடமிருந்து கடலுணவுகளைக் கொள்வனவுசெய்வதில் தாம் பல்வேறு நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துவருவதாகவும் இதன்போது கடலுணவுக் கொள்வனவாளர்களால் இதன்போது நாடாளுமன்ற உறுப்பினரிடம் முறையீடுசெய்யப்பட்டது.
எனவே கடற்படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமது கடலுணவுக் கொள்வனவு வாடிகளை உடனடியாக விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கடலுணவுக் கொள்வனவாளர்கள் இதன்போது நாடாளுமன்ற உறுப்பினரிடம் கோரிக்கையினையும் முன்வைத்தனர்.
இந்நிலையில் கடலுணவுக் கொள்வனவாளர்கள் மற்றும் மீனவர்களின் குறைபாடுகளைக் கேட்டறிந்துகொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன், குறித்த கடலுணவுக் கொள்வனவு வாடிகளை விடுவிப்பதுதொடர்பில் தம்மால் கவனஞ்செலுத்தப்படுமெனத் தெரிவித்தார்.
Pillayan-733199

என் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை, போலியானவை ; அநுரவின் வாயைப் போலவே எல்லாம் பொய்! – விளக்கமறியலுக்காக கொண்டுசெல்லப்படுகையில் பிள்ளையான் தெரிவிப்பு

June 30, 2026

என் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்க் குற்றச்சாட்டுக்கள். போலிக் குற்றச்சாட்டுக்கள். அநுரவின் வாயைப் போலவே எல்லாம் பொய்” என்று

kiruba

“சர்வதேச விசாரணை நடத்தப்பட்டால் நேரடி சாட்சியங்களை சமர்ப்பிக்கத் தயார்!” – செம்மணி மனிதப் புதைகுழி முறைப்பாட்டாளர் கிருபாகரன் அதிரடித் தகவல்!

June 30, 2026

யாழ்ப்பாணம் செம்மணி அணையா விளக்கு திடலில், 6 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி “உரிமைப் பந்தம்” என்ற தொனிப்பொருளில் 427 தீப்பந்தங்களை

yasmin sooka

ஹெய்ட்டிக்கு படையினரை அனுப்பிவைக்கும் தீர்மானம்: தண்டனைகளிலிருந்து தப்பிக்கும் போக்கை இயல்பாக்கும் வகையில் அமையக்கூடாது – சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான செயற்திட்டம் வலியுறுத்தல்

June 30, 2026

ஹெய்ட்டியில் இலங்கைப் படையினரால் ஏற்கனவே பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதி நிலைநாட்டப்படவேண்டும். அத்தோடு தண்டனைகளிலிருந்து தப்பிக்கும் போக்கை இயல்பாக்கும் வகையில் தற்போது மீண்டும்

Pillayan-733199

பிள்ளையானுக்கு விளக்கமறியல்!

June 30, 2026

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் என்கின்ற பிள்ளையானை எதிர்வரும் ஜூலை

chemma7

செம்மணி மனிதப் புதைக்குழி: உண்மைகள் புறக்கணிக்கப்படுகின்றன – எஸ்.சிறிதரன் குற்றச்சாட்டு

June 30, 2026

செம்மணி மனிதப் புதைக்குழி மற்றும் ஏனைய மனிதப் புதைகுழிகள் குறித்து மரண தண்டனை கைதியான சோமரத்ன ராஜபக்ஷ குறிப்பிடும் விடயங்களை

Pillayan-733199

நீதிமன்றுக்கு அழைத்துச் செல்லப்பட்டார் பிள்ளையான்

June 30, 2026

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் என்கின்ற பிள்ளையான் இன்று (30)

court-judge-hammer-gavel-696x398

யாழில். தனியார் காணியை அரச காணி என பறிக்க முயற்சி ?

June 30, 2026

தெல்லிப்பழை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட வசாவிளான் குட்டியாபுலம் பகுதியில் உள்ள 2.5 ஏக்கர் தனியார் சொத்தான காணியை, கடந்த செப்டெம்பர்

whats

தொலைபேசி எண் இல்லாமல் வட்ஸ்அப்?

June 30, 2026

உங்கள் தொலைபேசி எண்ணை மற்றவர்களுக்குத் தெரியாமல், ஒரு பயனர்பெயரை (username) மட்டும் பயன்படுத்தி மற்றவர்களுடன் இணைவதற்கான வசதியை வட்ஸ்அப் அறிமுகப்படுத்த

f

சீன தொழிலதிபரான பெண் 42 லட்சம் ரூபாய் சிகரெட்டுகளுடன் கைது

June 30, 2026

சுமார் 42 லட்சம் ரூபாய் பெறுமதியான வெளிநாட்டுத் தயாரிப்பு சிகரெட் தொகையை, சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குள் கடத்தி வர முயன்ற

Fuel_1200px_22_10_17

எரிபொருள் விலைகளைக் குறைத்தது அரசாங்கம்: புதிய விலை விபரங்கள்

June 30, 2026

இலங்கையில் பொதுமக்களுக்கு நிம்மதியளிக்கும் வகையில், தெரிவு செய்யப்பட்ட சில எரிபொருள் வகைகளின் விலைகளை உடனடியாகக் குறைப்பதற்குஇலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம்

eiff

ஈபிள் கோபுரத்தை தாக்கிய மின்னல்

June 30, 2026

பாரிஸ் நகரில் நிலவிய கடும் இடியுடன் கூடிய மழையின் போது, ஐகான் என அழைக்கப்படும் ஈபிள் கோபுரத்தை மின்னல் தாக்கியுள்ளது.

manoga

தேர்தலில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து ஆளும் தரப்பு எமக்கு கற்பிக்கத் தேவையில்லை

June 30, 2026

தேர்தலில் பெண்களுக்கு போதுமான இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து ஆளும் தரப்பினர் எமக்கு பாடம் கற்பிக்க வேண்டிய அவசியம் கிடையாது.