சனிக்கிழமை அதிகாலை நோர்த் யார்க்கில் (North York) இடம்பெற்ற கத்திக்குத்துச் சம்பவத்தையடுத்து, நபர் ஒருவர் அவசரமாக வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
ரொறன்ரோ பொலிஸார் (Toronto police) சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவொன்றில், யங் வீதி (Yonge Street) மற்றும் ஷெப்பர்ட் அவென்யூ கிழக்கு (Sheppard Avenue East) பகுதியில் அதிகாலை 1:30 மணியளவில் இடம்பெற்ற கத்திக்குத்துச் சம்பவம் குறித்து கிடைத்த தகவலையடுத்து பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்ததாகத் தெரிவித்துள்ளனர்.
பொலிஸார் சம்பவ இடத்திற்குச் சென்றபோது, காயமடைந்த நபர் ஒருவரைக் கண்டறிந்துள்ளனர்.
உயிராபத்து இல்லாத காயங்களுடன் அவர் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
சந்தேக நபர் குறித்த தகவல்கள் எதையும் பொலிஸார் இதுவரை வெளியிடவில்லை.
விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இது தொடர்பான தகவல்கள் ஏதேனும் தெரிந்தவர்கள் முன்வந்து வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.