நெடுந்தீவில் பொதுமக்களுக்கு சொந்தமான ஒரு ஏக்கர் காணி கடற்படைக்கு வழங்கப்பட்டமைக்குத் தமிழ்த்தேசியப் பேரவையின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இன்று வெள்ளிக்கிழமை (19.06.2026) நடந்த யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் தனது காட்டமான எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.
யாழ்.மாவட்டக் காணிப் பயன்பாட்டுக் கூட்டம் மக்கள் பிரதிநிதிகளது பங்குபற்றுதல் இல்லாமல் இரகசியமாக நடாத்தப்பட்டுக் காணி வழங்கும் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளமையையும் அவர் அம்பலப்படுத்தினார்.
எனினும், மக்கள் காணிகள் மக்களுக்கே வழங்க வேண்டும் என்று வாக்குறுதிகளை அள்ளி வீசிப் பதவிக்கு வந்த தேசியமக்கள் சக்தியின் ( ஜேவிபி ) அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் கடற்படைக்கே காணி வழங்க வேண்டுமென ஒற்றைக் காலில் நின்றார்