நீர்வாழ் உயிரினச் செய்கைக்கு வட மாகாணம் பொருத்தமானதாக இருந்தும் அதை முழுமையாக நாம் பயன்படுத்தவில்லை!

“கடலட்டைப் பண்ணை உள்ளிட்ட நீர்வாழ் உயிரினச் செய்கைக்கு வடக்கு மாகாணம் புவியியல் ரீதியாக மிகப் பொருத்தமான அமைவிடத்தைக் கொண்டிருந்தும், அதனை நாம் இன்னும் முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ளவில்லை. எனவே, அனைத்துத் திணைக்களங்களினதும் ஒருங்கிணைந்த கள ஆய்வுகளின் ஊடாக, நீர்வாழ் உயிரின செய்கைக்கான பொருத்தமான இடங்களை எதிர்வரும் இரண்டு மாதங்களுக்குள் அடையாளங்கண்டு ஒதுக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்” என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.

நீர்வாழ் உயிரின செய்கை தொடர்பான விசேட உயர்மட்டக் கலந்துரையாடல், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இ.சந்திரசேகர் மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் ஆகியோரின் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் நேற்று புதன்கிழமை (01) மாலை நடைபெற்றது.

இக்கலந்துரையாடலில் கரையோர நீர்வாழ் உயிரினச் செய்கை விரிவாக்கல் மற்றும் கண்காணிப்புப் பிரிவின் உதவிப் பணிப்பாளரால் தற்போதைய நிலைமைகள் குறித்து விரிவாக விளக்கமளிக்கப்பட்டது. யாழ்ப்பாண மாவட்டத்தில் கடலட்டை வளர்ப்பு பெரிய அளவில் முன்னெடுக்கப்பட்டு வருவதை சுட்டிக்காட்டிய அவர், குறிப்பாக வேலணை, யாழ்ப்பாணம், நல்லூர் மற்றும் சண்டிலிப்பாய் ஆகிய பிரதேசங்களில் சுமார் 1,134 ஏக்கர் பரப்பளவில் 533 கடலட்டை பண்ணைகள் இயங்கி வருவதாகக் குறிப்பிட்டார். மேலும், ஊர்காவற்துறை, வேலணை, சங்கானை மற்றும் நெடுந்தீவு ஆகிய பகுதிகளில் கடற்பாசி வளர்ப்பும் தீவிரமாக ஊக்குவிக்கப்பட்டு வருகின்றது.

வடக்கு மாகாணத்தின் புவியியல் அமைப்பைப் பயன்படுத்திப் புதிய வளர்ப்புத் திட்டங்களை அறிமுகப்படுத்த முடியும் எனவும், இதற்கமைய யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார் மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் இறால், நண்டு மற்றும் சிப்பி வகை வளர்ப்பு நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கும், கடலட்டை குஞ்சு உற்பத்தி நிலையங்களை உருவாக்குவதற்கும் வாய்ப்புகள் உள்ளதாக அவர் தெரிவித்தார். அத்துடன், கடல்வளமற்ற வவுனியா மாவட்டத்தில் நன்னீர் மீன்பிடியைப் பிரத்தியேகமாக மேம்படுத்தலாம் எனவும் சுட்டிக்காட்டினார்.

யாழ்ப்பாணத்தில் உள்ள பண்ணைகளின் சனநெரிசலைக் குறைத்தல், பூநகரி போன்ற பகுதிகளில் இடம்பெறும் சட்டவிரோதச் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்துதல் மற்றும் உள்ளூர் கடற்றொழிலாளர்களின் பாரம்பரியத் தொழில்களுடன் ஏற்படும் முரண்பாடுகளைத் தீர்ப்பதற்கான சுமுகமான பொறிமுறைகளை உருவாக்க வேண்டியதன் அவசியமும் வலியுறுத்தப்பட்டது. இவ்வாறான சவால்கள் தீர்க்கப்படுவதன் ஊடாக வடக்கு மாகாணத்திலிருந்து வருடாந்தம் அண்ணளவாக 100 மில்லியன் அமெரிக்க டொலர் ஏற்றுமதி வருமானத்தைப் பெற்றுக்கொள்ள முடியும் எனத் தெரிவிக்கப்பட்டது.

யாழ்ப்பாண மாவட்டத்தில் இவ்வாறான பண்ணைகளுக்கு இட ஒதுக்கீடு செய்யும்போது உள்ளூர் சமூகத்திலிருந்து எழும் எதிர்ப்புகள் தொடர்பில் யாழ். மாவட்டச் செயலாளர் சுட்டிக்காட்டினார். இது குறித்துக் கருத்துத் தெரிவித்த அமைச்சர் கௌரவ இ.சந்திரசேகர், உரிய கலந்துரையாடல்கள் ஊடாக உள்ளூர் சமூகத்தின் கோரிக்கைகளையும் கவனத்திலெடுத்துச் செயற்பட வேண்டும் எனக் குறிப்பிட்டார். அத்துடன், முதலீட்டாளர்கள் சுட்டிக்காட்டிய காணி தொடர்பான பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண, சம்பந்தப்பட்ட பிரதேச செயலாளர்கள் தலைமையில் அனைத்துத் தொடர்புடைய திணைக்கள அதிகாரிகளும் இணைந்த கள ஆய்வுகளை மேற்கொண்டு குறுகிய காலத்துக்குள் அறிக்கைகளைச் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

இலங்கையின் கடலட்டைப் பண்ணைகளுக்குச் சர்வதேச சந்தையில் உள்ள மிகச் சிறப்பான வர்த்தக நாமத்தைப் பாதுகாப்பதற்கு, அனுமதியின்றி இயங்கும் பண்ணைகளை ஒழுங்குமுறைப்படுத்துவது கட்டாயமானது என அமைச்சர் கௌரவ இ.சந்திரசேகர் வலியுறுத்தினார். திணைக்களங்கள் சில விட்டுக்கொடுப்புகளுக்குத் தயாராக உள்ள நிலையில், இந்த ஒழுங்குமுறைப்படுத்தல் செயற்பாடுகளுக்குப் பண்ணையாளர்களும் முழுமையான ஒத்துழைப்பை வழங்கி ஓர் இணக்கப்பாட்டுக்கு வர வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

இக்கலந்துரையாடலில் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சின் செயலாளர், கரையோர நீர்வாழ் உயிரினச் செய்கை விரிவாக்கல் மற்றும் கண்காணிப்புப் பிரிவின் பணிப்பாளர், வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர், உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர், விவசாய அமைச்சின் செயலாளர், மாவட்டச் செயலாளர்கள், மாகாண காணி ஆணையாளர், பிரதேச செயலாளர்கள், கடற்றொழில் நீரியல் வளத் திணைக்கள உதவிப் பணிப்பாளர்கள், முதலீட்டாளர்கள் மற்றும் பண்ணையாளர்கள் எனப் பலரும் பங்கேற்றனர்.

iran

ஈரானிய துறைமுகங்கள் அமெரிக்காவால் முற்றுகை!

April 18, 2026

ஈரானிய துறைமுகங்கள் மற்றும் கடலோரப் பகுதிகளுக்குள் நுழையும் அல்லது வெளியேறும் கப்பல்களுக்கு எதிரான தனது அறிவிக்கப்பட்ட கடல் முற்றுகையை அமெரிக்கா

tour

இலங்கையின் சுற்றுலாத்துறைக்குப் பாரிய வீழ்ச்சி

April 18, 2026

இலங்கையின் சுற்றுலாத்துறை மூலம் ஈட்டப்படும் வெளிநாட்டு செலாவணி வருவாய், 2026 மார்ச் மாதத்தில் 223.7 மில்லியன் அமெரிக்க டாலர்களாகக் குறைந்துள்ளது.

Parliament

இலங்கை நாடாளுமன்ற முறைகேடுகள்: சர்வதேச அமைப்புகளிடம் முன்னாள் எம்.பி.க்கள் முறைப்பாடு

April 18, 2026

நாடாளுமன்றத்தில் இடம்பெற்று வரும் நிர்வாக முறைகேடுகள், பழிவாங்கல்கள் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள் தொடர்பான நான்கு பிரதான விடயங்களை முன்வைத்து, முன்னாள்

photo-collage.png (12)

கனடாவில் கல்முனை பிராந்திய மக்களின் மரநடுகை விழா

April 18, 2026

இன்றைய தினம்(18) கனடா மிசிஸாக்காவில் கல்முனை பிராந்திய மக்களின் மரநடுகை விழா கனேடிய நேரம் காலை 10 மணி தொடக்கம்

net

நெத்தலியாறு விவசாயிகள் ரவிகரன் எம்.பியிடம் கோரிக்கை

April 18, 2026

தமது சொந்தக் காணிகளிலேயே சிறுபோக நெற்செய்கையை மேற்கொள்வதற்கு அனுமதியைப் பெற்றுத்தருமாறு கல்மடுக்குளத்தின் சிறுபோக நீர்ப்பாசன பங்காளர்களான விசுவமடு மேற்கு கமக்கார

ds

வடக்கு, கிழக்கு சிகையலங்கார நிலைய சம்மேளனங்களை இணைப்பது குறித்து ஆய்வு

April 18, 2026

வடக்கு – கிழக்கு மாகாணத்தில் உள்ள அழகக சம்மேளனங்களை இணைத்து ஒரு கட்டமைப்புக்குள் கொண்டு வருவது குறித்து ஆராய்ந்து வருகிறோம்

ind

இலங்கை விஜயத்தின் போது இந்திய துணை குடியரசு தலைவர் இந்திய வம்சாவளி தமிழர்களை நோக்கி நேசக்கரம் நீட்டுவார்- இந்திய தூதுவர்

April 18, 2026

பரந்த அளவிலான இராஜதந்திர மற்றும் மக்கள் நலன் சார்ந்த பயணமாக, இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் அவர்கள்

chaco

நிலக்கரி முறைகேடு; அடுத்த வாரம் விசாரணை ஆரம்பம்

April 18, 2026

இலங்கையில் நிலக்கரி இறக்குமதி மற்றும் மின் உற்பத்தி நடவடிக்கைகளில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகளை விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின்

cana gu

கனடாவின் நோவா ஸ்கோடியா கிராமப்புற துப்பாக்கிச் சூடு: ஆறாம் ஆண்டு நினைவேந்தல்!

April 18, 2026

கனடாவின் நோவா ஸ்கோடியா கிராமப்புற பகுதியில், பொலிஸ் அதிகாரி வேடமணிந்த நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒரு இளைஞர்

her

லெபனானில் பிரெஞ்சு அமைதிப்படை சிப்பாய் பலி: ஹிஸ்புல்லா மீது மக்ரோன் குற்றச்சாட்டு

April 18, 2026

தெற்கு லெபனானில் இன்று காலை இடம்பெற்ற தாக்குதலில், சர்வதேச அமைதிப்படைப் பணியில் ஈடுபட்டிருந்த பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த சிப்பாய் ஒருவர்

sea

பொலிஸாரிடமிருந்து தப்பிக்க கடலில் குதித்த நபர் உயிரிழப்பு

April 18, 2026

பேருவளை மீன்பிடி துறைமுகத்தில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டிருந்த நபர் ஒருவர், பொலிஸாரிடம் சிக்காமல் இருக்க கடலில் குதித்த நிலையில், நீரில்

Parl

இலங்கை அமைச்சரவையில் மாற்றங்கள்?

April 18, 2026

நிலக்கரி கொள்முதல் மோசடி குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில் குமார ஜெயக்கொடி பதவி விலகியதைத் தொடர்ந்து, அந்த வெற்றிடத்திற்குத் துறைமுகங்கள் மற்றும் விமான