நீதியின் கதவுகள் ஒருபோதும் திறக்கப்பட மாட்டாது – தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கம் ஆதங்கம்

மக்களின் கண்ணீர் வற்றிப் போய்விட்டதே தவிர, நீதியின் கதவுகள் ஒருபோதும் திறக்கப்பட மாட்டாது என்பதே பட்டறிவு அனுபவமாக காணப்படுகிறது. உலகம் அநீதியாளர்களின் நண்பராகவே காணப்படுகிறது தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கம் தெரிவித்துள்ளது.

மன்னாரில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் இன்று திங்கட்கிழமை (18) அனுஷ்டிக்கப்பட்டது. அதனை முன்னிட்டு, மன்னாரில் இயங்கி வரும் தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ். சிவகரன் வெளியிட்ட அறிக்கையிலேயே மேற்கண்டவாறு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்படுவதாவது,

கடந்த 70 ஆண்டுகளாக தன்மானம், சுயமரியாதை சமூக சம நீதி மறுக்கப்பட்ட சமூகமாக பல்வேறு காலகட்டங்களில் பலவிதமான போராட்ட வடிவங்களுடன் கால நீட்சி கரைந்து ஓடி எழுபது ஆண்டுகள் கடந்துவிட்டபோதும் கூட வாழ்வியல் சமத்துவ உரிமை மறுக்கப்பட்ட சமூகமாகவே தொடர்ந்து, சிங்கள ஏகாதிபத்திய பௌத்த தேசியவாத மேட்டிமைவாதிகளால் நசுக்கப்படுகிறோம் என்பதே மிகுந்த வேதனைக்குரிய விடயம்.

உலகளாவிய ரீதியிலே மனித உரிமைகள் உச்சம் தொட்டிருக்கும்போது பௌத்த பஞ்ச சீலத்தை முன்னிறுத்தி ஆட்சி செய்கின்றோம் எனும் மாய விம்பத்தை காட்டும் சிங்கள ஆட்சியாளர்கள் தொடர்ந்து தமிழர்களை அடிமைகளாக நசுக்குகின்ற நாசகார வேலையிலே ஈடுபடுகிறார்கள்.

காலத்துக்கு காலம் கட்சிகள் மாறி ஆட்சிகள் மாறுகின்றபோதும் கூட பௌத்த தேசியவாதத்தின் மனோநிலை என்பது மாறவே இல்லை.

பல நாடுகளின் கூட்டுச்சதியால் முள்ளிவாய்க்காலில் நடந்த இனப்படுகொலை 17 ஆண்டுகளைக் கடந்துவிட்டபோதும் கூட காணாமல் ஆக்கப்பட்ட அல்லது கொலை செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு இலட்சத்து 46 ஆயிரத்து 679 ஆகும். இவை அரசின் புள்ளிவிபரங்களில் காட்டுகின்ற எண்ணிக்கையாகும்.

இவர்கள் எங்கே என்கிற கேள்விக்கு இதுவரை சர்வதேச சமூகமும் பதிலளிக்கவில்லை. ஏனெனில், அவர்களும் இந்த இனப்படுகொலையின் பங்குதாரர்களே.

கால நீட்சி சாட்சியங்களையும் ஆதாரங்களையும் காலாவதியாக்கிக்கொண்டே போகிறது. நீதி மறுக்கப்பட்டு சுயமரியாதை இழந்த சமூகக் கட்டமைப்பின் இரண்டாம் தர பிரஜைகளாக இலங்கை அரசாங்கமும் சர்வதேச சமூகமும் விரும்புகிறதா? என்கின்ற கேள்வி பாதிக்கப்பட்ட மக்களுக்கு எழுகிறது.

கொலைகாரர்களிடமும் கொலைகாரர்களின் பங்குதாரர்களிடமும் நீதியின் நிழலைக் கூட பெற முடியாது. இந்த உலகம் கசாப்புக் கடை முதலாளிகளின் கூடாரமாக காணப்படுகிறது.

தமிழ்க் கட்சிகளும் புலம்பெயர் அமைப்புகளும் உள்ளூரில் சில அமைப்புகளும் இனப்படுகொலையை மூலதனம் ஆக்கிக் கொண்டார்களே தவிர கட்டமைக்கப்பட்ட ஒழுங்கு முறையில் எந்த முன்னெடுப்புகளும் இதுவரை முன்னெடுக்கப்படவில்லை. இனப்படுகொலைக்கு சாட்சியமாக ஒழுங்கு முறையாக ஒரு நினைவேந்தல் தூபி கூட நிறுவப்படவில்லை. அதை நிறுவுவதற்கு நினைவேந்தல் குழு கூட ஒழுங்காக அமைக்கப்படவில்லை.

இப்படி சகல விடயங்களிலும் தோற்றுப் போகும் ஒரு இனமாக தமிழினம் கடந்த 17 ஆண்டுகளாக தோல்வி மனநிலையில் இருந்துகொண்டும் இயலாமையில் இருந்துகொண்டும் மற்றவர்களை எதிர்பார்த்து தங்கி வாழும் மனோ நிலையில் இருப்பதுதான் தமிழினத்தின் சாபக்கேடாக அமைந்திருக்கிறது.

நீதி என்பது பாதிக்கப்பட்டவர்கள் பக்கம் இருக்க வேண்டும். ஆனால் இன்றைய சமூக நீதி அதிகாரத்தின் பக்கம்தான் தலை சாய்கிறது என்பது பாதிக்கப்பட்ட சமூகத்தின் விசனமாக இருக்கிறது.

பாதிக்கப்பட்ட மக்கள் யாரை நம்புவது என்று தெரியாமல் யார் யாரையோ எல்லாம் நம்புகிற காலச் சூழல் ஏற்பட்டிருக்கிறது.

அரசியல் ரீதியான இனப் படுகொலையை அரசியல் கட்சிகள் வாக்குக்காக நோக்குவதே இனப் படுகொலைக்கான நீதி இன்னும் நீர்க்குமிழியாகவே தொக்கி நிற்கிறது.

மீட்பருக்காக காத்திருக்கிறது இந்த தேசம். பாதிக்கப்பட்ட மக்களுடைய உணர்வை இதுவரை எவரும் புரிந்துகொண்டதாக தெரியவில்லை.

அந்த மக்களின் கண்ணீரும் வற்றிப் போய்விட்டதே தவிர நீதியின் கதவுகள் ஒருபோதும் திறக்கப்பட மாட்டாது என்பதே பட்டறிவு அனுபவமாக காணப்படுகிறது. உலகம் அநீதியாளர்களின் நண்பராகவே காணப்படுகிறது என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

wa

கடும் குடிநீர்த் தட்டுப்பாடு

August 24, 2026

த்தளை மாவட்டத்தின் வில்கமுவ பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட லெகேதியன்கல – தியவர கிராம மக்கள் தற்பொழுது கடுமையான குடிநீர்த் தட்டுப்பாட்டை

jud

ஐவரை பலியெடுத்த விபத்து: இரண்டு சாரதிகளுக்கும் விளக்கமறியல்

August 24, 2026

ஐவரை பலியெடுத்த வீதி விபத்து தொடர்பில் கைது செய்யப்பட்ட இரண்டு வாகனங்களின் சாரதிகளும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். பதுளையிலிருந்து கெம்பிலின்ன பகுதிக்கு

la

யாழ். வயாவிளான் சந்தியில் காணிகளை விடுவிக்கக் கோரி போராட்டம்!

August 24, 2026

துகாப்புப் படைகள் கையகப்படுத்தியுள்ள மக்களின் காணிகளை விடுவிக்கக் கோரி யாழ். வயாவிளான் சந்தியில் மக்கள் போராட்டத்தில் நேற்று ஈடுபட்டனர். போராட்டத்தில்

pol

கண்டியில் பொலிஸார் மீது தாக்குதல்!

August 24, 2026

கண்டி நகரில் அமைந்துள்ள தலதா மாளிகையின் பிரதான வாசல் பகுதிக்கு அருகில், பெரஹரா கடமையில் ஈடுப்பட்டிருந்த இரண்டு பொலிஸ் அதிகாரிகள்

30

கனேடிய மண்ணில் மாபெரும் கண்டனப் போராட்டம்; செம்மணி எழுச்சி – அணையா தீபம் விழித்தெழு தமிழா!

August 24, 2026

கனேடிய மண்ணில் மாபெரும் கண்டனப் போராட்டமான ‘விழித்தெழு தமிழா!’ நிகழ்வு எதிர்வரும் 30ஆம் திகதி நடைபெறவுள்ளது. செம்மணி சித்துப்பாத்தி மனிதப்

30

கனேடிய மண்ணில் மாபெரும் கண்டனப் போராட்டம்; செம்மணி எழுச்சி – அணையா தீபம் விழித்தெழு தமிழா!

August 23, 2026

கனேடிய மண்ணில் மாபெரும் கண்டனப் போராட்டமான ‘விழித்தெழு தமிழா!’ நிகழ்வு எதிர்வரும் 30ஆம் திகதி நடைபெறவுள்ளது. செம்மணி சித்துப்பாத்தி மனிதப்

j

ஜப்பானின் 5.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்: 37 பேர் காயம்

August 23, 2026

டோக்கியோவிற்கு வடகிழக்கே உள்ள இபராக்கி மாகாணத்தில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் ஏற்பட்ட 5.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தால், குறைந்தபட்சம் 37 பேர்

1376391

“எம்.எல்.ஏ-க்களுக்கு கார் வழங்கும் திட்டத்தைக் கைவிட வேண்டும்!” – தவெக அரசுக்கு சிபிஐ மு.வீரபாண்டியன் வலியுறுத்தல்!

August 23, 2026

சென்னை சென்னை தியாகராய நகரில் உள்ள இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ) தலைமையகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அக்கட்சியின் மாநிலச் செயலாளர்

images - 2026-08-23T201653.538

“கலைஞராக இருந்தாலும் தோற்கடித்திருப்பேன்!” – மு.க.ஸ்டாலினைச் சாடிய தவெக எம்.எல்.ஏ. வி.எஸ்.பாபு அதிரடி!

August 23, 2026

ன்னை சென்னை பெரம்பூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகப் (தவெக) பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட தவெக எம்.எல்.ஏ. வி.எஸ்.பாபு, முதலமைச்சர் விஜய்

hindutamil-prod_2026-07-25_wfbbokby_09c42ddb-771b-4856-8469-a2bd3d39469a

“அறநிலையத்துறை செயல்பாடுகளைச் சேகர்பாபு வேவு பார்ப்பது ஏன்?” – அமைச்சர் ரமேஷ் சரமாரி கேள்வி!

August 23, 2026

திருச்சி திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ், முன்னாள் அமைச்சர் பி.கே.சேகர்பாபு மீது அடுக்கடுக்கான

phototune.ai_1787481855

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினம்: சர்வதேச பொறிமுறையை நோக்கியே போராட்டத்தை நகர்த்துகிறோம் – செல்வராணி!

August 23, 2026

போராட்டத்தை இலங்கை அரசாங்கம் தங்களது உள்நாட்டு பொறிமுறைக்குள் எங்களைத் தள்ளப் பார்த்துக்கொண்டிருக்கின்றார்கள். தள்ளுவதற்கு பல முயற்சிகளில் பல முறைகளில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றார்கள்.

a.

பலாலி மக்கள் 10ஆவது வாரமாகவும் போராட்டம்

August 23, 2026

பலாலி மக்களின் பூர்வீக நிலங்களை இராணுவப் பிடியிலிருந்து விடுவித்து, தமது இயல்பு வாழ்வை மீள உறுதிப்படுத்துமாறு கோரி, நிலமிழந்த பலாலி