நாட்டுக்கு புதிய அரசியலமைப்பொன்று அனைத்து இனக் குழுமங்களின் பங்கேற்புடன் உருவாக்கப்படுவது அவசியம்!

நாட்டுக்கு புதிய அரசியலமைப்பொன்று அனைத்து இனக் குழுமங்களின் பங்கேற்புடன் உருவாக்கப்படுவது அவசியமாகும். அவ்வாறு உருவாக்கப்படுகின்ற அரசியலமைப்பிற்கான பகிரங்க கலந்துரையாடல்களில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் பங்கேற்பு அவசியம் என பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி உட்பட அரசியல் கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.

கொழும்பு – ஜானகி ஹோட்டலில் நேற்று புதன்கிழமை (21) வன் டெக்ஸ்ட் இனிஷpயேடிவ்வின் ஏற்பாட்டில் ‘இலங்கையில் ஆட்சி நெருக்கடிகள்’ எனும் தொனிப்பொருளில் ஷPரால் லக்திலகவின் தலைமையில் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்ற கலந்துரையாடல் நடைபெற்றது.

இந்த கலந்துரையாடலில் எதிர்க்கட்சி தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாச, பாராளுமன்ற உறுப்பினர்களான ஹர்ஷ டி சில்வா, அஜித் பி பெரேரா, தயாசிறி ஜயசேகர ஆகியோரும், ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் அதன் பொதுச் செயலாளர் தலதா அத்துகோரளவும், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சார்பில் மஹிந்த அமரவீர, லசந்த அழகியவண்ணவும், அநுர பிரியதரஷன யாபா, இலங்கை தமிழரசு கட்சியின் சார்பில் அதன் பதில் பொதுச் செயலாளர் சுமந்திரன், பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநாத், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பி. மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான பிரேம்நாத் சி தொலவத்த, கருணாரத்ன பரணவிதான உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.

அத்துடன் துறைசார்ந்த நிபுணர்களான லால் விஜேநாயக்க, ஜயம்பதி விக்கிரமரத்ன, விரஞ்சன ஹேரத், நிமல்கா பெர்னார்டோ, சுதர்ஷன குணவர்தன ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர். இதன் போது சுமந்திரன் , இளைதம்பி ஸ்ரீநாத் மற்றும் கஜேந்திரகுமார் ஆகியோர் இலங்கையில் தமிழ் மக்களின் பங்கேற்பில்லாத வகையில் தான் இலங்கையில் இதுவரை உருவாக்கப்பட்ட அரசியலமைப்புக்கள் காணப்படுகின்றன.

எதிர்வரும் காலத்தில் அவ்விதமான செயற்பாட்டுக்கு இடமளிக்க விட முடியாது. சமத்துவ பங்கேற்பு புதிய அரசியலமைப்பு செயற்பாட்டில் உறுதிப்படுத்துவதுடன் தமிழ் மக்கள் உள்ளிட்ட சிறுபான்மை குழுக்களின் அபிலாசைகள் உள்வாங்கப்பட வேண்டும். பெரும்பான்மை பாராளுமன்ற பிரதிநிதித்துவம் காணப்படுகிறது என்பதற்காகவும் நிறைவேற்றதிகாரம் இருக்கிறது என்பதற்காகவும் எதேச்சதிகாரமாக செயற்பட முடியாது. அவ்வாறு செயற்படுவதானது சமூக ஒப்பந்தத்தை மீறும் செயலாகும். அது மக்கள் ஆணைக்கு முரணானதாகும். ஆகவே அரசாங்கம் புதிய அரசியலமைப்பு செயற்பாட்டில் வெளிப்படை தன்மையுடன் பங்கேற்பது அவசியமாகும் என்றனர்.

இதேவேளை எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச , தயாசிறி ஜயசேகர, ஹர்ஷ டி சில்வா உள்ளிட்டவர்கள் அரசாங்கம் பாராளுமன்றக் குழுக்களில் எதிர்க்கட்சிகளின் கருத்துக்களுக்கு இடமளிக்காமல் தீர்மானங்களை எடுக்கின்ற போக்கு தொடர்ந்து கொண்டிருக்கிறது. அவ்விதமான நிலையில் புதிய அரசியலமைப்பு செயற்பாடுகளையும் அவர்கள் அதே போக்கை பின்பற்றுவார்களாக இருந்தால் அது மீண்டும் பெரும்பான்மைவாத அரசியல் அமைப்பதாகத் தான் இருக்கும்.

பல்கட்சி பங்கேற்பு ஜனநாயக தன்மைகள், அனைத்தையும் கை கழுவும் செயற்பாடாகவே அது அமையும். அவ்விதமான செயற்பாடுகளுக்கு இடமளிக்க முடியாது. ஆகவே புதிய அரசியலமைப்பு உரையாடல்கள் அரசாங்கத்தின் பங்கேற்பென்பது அவசியமானதாகும். அதனை அரசாங்கம் தட்டிக்கழிக்க முடியாது. அவர்கள் நிச்சயமாக வெளிப்படையான செயற்பாட்டில் பங்கேற்பதை உறுதி செய்ய வேண்டும். இதேநேரம் புதிய அரசியலமைப்பு செயற்பாட்டில் முற்போக்கான விடயங்கள் சிலவற்றை உள்ளீர்ப்பது அவசியமாகும்.

உதாரணமாக தென்னாபிரிக்காவின் அரசியலமைப்பில் காணப்படுகின்ற சிவில் அரசியல் கலாசார உரிமைகள் உள்ளீர்க்கப்படுவதுடன் அவை அடிப்படை உரிமைகளுக்குள் உள்வாங்கப்படுவதும் மேம் பாடான அரசியலமைப்பிற்கு வழி வகுப்பதாக இருக்கும். அத்துடன் நிதி பயன்படுத்துகின்ற அதிகாரங்கள் பொருளாதார விடயங்கள், உள்ளிட்டவற்றையும் அரசியலமைப்பில் உள்வாங்க வேண்டியது அவசியமாகிறது. அது நாட்டின் எதிர்கால திட்டமிடலுக்கு மிகவும் முக்கியமானதாகும் என்று குறிப்பிட்டனர்.

இதேவேளை கலாநிதி ஜயம்பதி விக்கிரமரத்ன , லால் விஜயநாயக்க போன்றவர்கள் ஏலவே தயாரிக்கப்பட்டுள்ள அரசியலமைப்பு வரைவுகளை முன்மொழிவுகளையும் மக்கள் கருத்துக்களை வெளியிட்ட அறிக்கைகளையும் சீர்தூக்கி பார்க்க வேண்டும் என்பதை வலியுறுத்தியதோடு, அரசாங்கத்துக்கு தொடர்ச்சியாக புதிய அரசியலமைப்பு செயற்பாட்டில் பங்கேற்பதற்கான அழைப்பினை விடுக்க வேண்டும்; என்று குறிப்பிட்டனர்.

இதேவேளை பிரதமர் ஹரிணி அமரசூரிய, நீதி அமைச்சர் ஹர்ஷண நாயக்கார உள்ளிட்டவர்கள் புதிய அரசியலமைப்பு செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அறிவித்துள்ள நிலையில் அவற்றை பகிரங்கப்படுத்துவதற்கான அழுத்தங்களை எதிர்க்கட்சிகளும் சிவில் தரப்பினரும் தொடர்ச்சியாக பிரயோகிக்க வேண்டும் என்றும் அங்கு கூடியிருந்த பிரதிநிதிகள் வலியுறுத்தியதோடு புதிய அரசியலமைப்பு செயற்பாட்டில் அரசாங்கம் எதிர்க்கட்சிகளின் கருத்துக்களை உள்வாங்காத போக்கில் செயற்படுவார்களாக இருந்தால் அதனை முறியடிப்பதற்கான வியூகங்கள் தொடர்பிலும் திட்டமிட வேண்டும் என்றும் குறிப்பிட்டனர்.

ganja

ஊர்காவற்துறையில் கஞ்சா கடத்த முற்பட்ட இளைஞர் கைது!  

March 4, 2026

ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுருவில் பகுதியில் 9 கிலோ கிராம் கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது

boa

கடற்றொழிலாளர்களுக்கு தடையின்றி எரிபொருள் விநியோகம்

March 4, 2026

நாட்டில் நிலவும் எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியில், கடற்றொழிலாளர்களுக்குத் தேவையான எரிபொருளை எந்தவிதத் தடையுமின்றி விநியோகிப்பதற்கு முறையான பொறிமுறை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளதாகக்

curr

வெளிநாட்டு நாணயமாற்று நிர்வாகமானது இலங்கையின் பொருளாதார நிலையை அளவிடும் கருவியாக செயற்பட்டு வருகிறது

March 4, 2026

வெளிநாட்டு நாணயமாற்று நிர்வாகமானது இலங்கையின் பொருளாதார நிலையை அளவிடும் கருவியாக வரலாற்று அடிப்படையில் செயற்பட்டு வருகிறது என திருகோணமலை மாவட்ட

b

பிறப்பு வீதம் இலங்கையில் குறைவடைகிறது?

March 4, 2026

இலங்கையில் பிறப்பு வீதம் படிப்படியாகக் குறைந்து வருவதாக லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் வைத்தியர்

arrest

போதைப்பொருளுடன் இராணுவச் சிப்பாய் கைது

March 4, 2026

திருகோணமலையில் வான்எல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில், உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கி மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் இன்று(04.03.2026) கைது

manmu

பிரதேசசபையின் தவிசாளர் அச்சுறுத்துவதாக பிரதேச சபை உறுப்பினர் தெரிவிப்பு

March 4, 2026

தனது அதிகாரத்தின் கீழ் உள்ள பிரதேச சபையின் தோல்வியை மூடி மறைப்பதற்காகவும் எதிரான உறுப்பினர்களை அடிபணிய வைப்பதற்காகவும் பொலிஸில் பொய்யான

photo-collage.png (49)

தனியார் நிறுவன ஊழியர்களின் ஒரு நாள் சம்பளம் Rebuilding Sri Lanka நிதியத்திற்கு நன்கொடை

March 4, 2026

அனைத்து நிறுவன ஊழியர்கள் சங்கத்தின் Varun Beverages Lanka Pvt Ltd (Pepsi Cola Company) கிளையின் மற்றும் Royal

jail

கொழும்பு கிராண்ட்பாஸ் படுகொலைச் சம்பவம் : 6 சந்தேக நபர்கள் கைது!

March 4, 2026

கொழும்பு, கிராண்ட்பாஸ் பகுதியில் நபர் ஒருவரை பாராங்கத்தியால் வெட்டிக் கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய 6 சந்தேக நபர்களை விசேட

hari

நிவாரண கொடுப்பனவை செலுத்தி முடிக்கும் காலத்தை நிச்சயமாக குறிப்பிட முடியாது – பிரதமர்

March 4, 2026

தித்வா புயல் தாக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களில் 80 சதவீதத்துக்கும் அதிகானோருக்கு இழப்பீடு மற்றும் நிவாரண கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளது.இழப்பீடு வழங்கல் குறித்து பல்வேறு

Saj

மக்களிடம் ஜனாதிபதி மன்னிப்பு கோரவேண்டும் – சஜித் பிரேமதாச

March 4, 2026

எமது நாட்டை ஒரு சிண்டாக அறிமுகப்படுத்தியமை தொடர்பில் நாட்டிடமும் மக்களிடமும் ஜனாதிபதி மன்னிப்பு கோரவேண்டியது மிகவும் முக்கியமாகும் என எதிர்க்கட்சித்

lssp

லங்கா சமசமாஜக் கட்சியின் யாப்பை மீறி எவரும் செயலாளர் பதவியை கைப்பற்ற முடியாது

March 4, 2026

லங்கா சமசமாஜ கட்சியின் பொதுச் செயலாளர் பதவி மற்றும் கட்சியின் எதிர்கால அரசியல் நகர்வுகள் குறித்து அக்கட்சி தெளிவுபடுத்தியுள்ளது. கடந்த

fue

போர்ச் சூழல் காரணமாக எரிபொருள் விலை அதிகரிக்குமா?

March 4, 2026

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது நடத்திய தாக்குதல்களைத் தொடர்ந்து, மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழல்