நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலையால் நீர் நுகர்வு அதிகரிப்பு

நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலையுடன் நீர் நுகர்வு அதிகரித்துள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் தலைவர் சந்தன பண்டார தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், பொதுமக்கள் இயன்றவரை நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

தற்போதைய வறட்சியான காலநிலை தொடருமானால், நீர் விநியோகத்தை மட்டுப்படுத்த நேரிடும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்:

“வறட்சியான காலநிலையுடன் நுகர்வோரின் நீர் பயன்பாடு அதிகரித்துள்ளது. குறிப்பாக மேல் மாகாணத்தின் கொழும்பு மாவட்டத்தை எடுத்துக்கொண்டால், நீர் சுத்திகரிப்பு நிலையங்களால் ஒரு குறிப்பிட்ட அளவுக்கே நீரை வழங்க முடியும். அம்பத்தலையில் நாளொன்றுக்கு 560,000 கனமீற்றர் நீரையும், லேபுகமையில் 150,000 கனமீற்றர் நீரையும் மட்டுமே எம்மால் உற்பத்தி செய்ய முடியும். அதற்கு மேல் உற்பத்தி செய்யும் திறன் எமக்கு இல்லை. தற்போது நாடு முழுவதும் அதிகபட்ச கொள்ளளவில் நீரை உற்பத்தி செய்து விநியோகித்து வருகிறோம். இந்த வறட்சி நீடித்தால், அதிகரித்து வரும் தேவையுடன் நீர் வழங்கலில் சிரமங்கள் ஏற்படலாம்.”

“நீரை மிகவும் சிக்கனமாக பயன்படுத்துங்கள். பாவனையை நிறுத்தச் சொல்லவில்லை, ஆனால் வீடுகளில் பயன்படுத்தும்போது வீணாவதைக் குறைத்துக்கொள்ளுங்கள். இல்லையெனில், சில பிரதேசங்களில் உள்ள உயர்ந்த இடங்களுக்கும், நீர் குழாய்களின் இறுதிப் பகுதிகளுக்கும் நீர் அழுத்தம் குறையக்கூடும். குறைவழுத்த நிலையில் நீர் வழங்க வேண்டிய நிலை ஏற்படலாம். நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது. வறட்சி அதிகரித்தால் நீர் விநியோகத்தை மட்டுப்படுத்த வேண்டியிருக்கும்.”

இதேவேளை, ஆறுகளின் முகத்துவாரங்கள் ஊடாக உப்பு நீர் கலப்பது அதிகரித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மணல் அகழ்வு போன்ற மனிதச் செயல்பாடுகளே இதற்கு முக்கிய காரணம் என அவர் தெரிவித்தார்.

“ஆறுகள் கடலில் சங்கமிக்கும் இடங்களில் உப்பு நீர் கலப்பது இப்போது ஒரு பாரிய பிரச்சினையாக மாறியுள்ளது. மணல் அகழ்வு மற்றும் உலக வெப்பமயமாதல் போன்ற காரணங்களால் இந்த நிலைமை தீவிரமடைந்துள்ளது. இதனைத் தடுக்க நாம் உப்பு நீர் தடுப்புகளை அமைத்து வருகிறோம். தற்போது களனி ஆற்றை மையப்படுத்தி உப்பு நீர் தடுப்பு ஒன்றை அமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன” என அவர் மேலும் தெரிவித்தார்.

Police logo

மக்கள் தங்களைத் தாமே பாதுகாத்துக்கொள்ளுமாறு பொலிஸார் எச்சரிக்கை

March 25, 2026

நாட்டில் அண்மைக்காலமாக அதிகரித்து வரும் கொள்ளைச் சம்பவங்கள் மற்றும் குற்றச்செயல்களிலிருந்து பொதுமக்கள் தம்மையும் தமது உடைமைகளைளுயும் பாதுகாத்துக்கொள்ளுமாறு பொலிஸார் பொதுமக்களை

rupe

ஊழல் ஒழிப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி எனப் பொய்க்கூறி பண மோசடி

March 25, 2026

வலான ஊழல் ஒழிப்புப் பிரிவின் நிலையப் பொறுப்பதிகாரி இந்திக வீரசிங்க எனத் தன்னை அடையாளப்படுத்தி, WhatsApp ஊடாகப் பல பிரதேச

puth

புதுக்குடியிருப்பு வர்த்தக சங்கத்தினருக்கும் பிரதி அமைச்சருக்கும் இடையில் கலந்துரையாடல்

March 25, 2026

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு வர்த்தக சங்கத்தினருக்கும், முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவரும் கூட்டுறவு பிரதி அமைச்சருமான உபாலி சமரசிங்கவிற்கும் இடையில்

arre

குருநாகல் பிரதான வீதியில் மாட்டைச் சித்திரவதை செய்தவர் கைது!

March 25, 2026

சிலாபம் – குருநாகல் பிரதான வீதியில் ஆபத்தான முறையில் மாட்டு வண்டியை ஓட்டிச் சென்றபோது, எதிரே வந்த கார் ஒன்றுடன்

chana

நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலையால் நீர் நுகர்வு அதிகரிப்பு

March 25, 2026

நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலையுடன் நீர் நுகர்வு அதிகரித்துள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் தலைவர் சந்தன

chin

ஹோர்முஸ் நீரிணையை கடந்த சீனக் கப்பல்

March 25, 2026

ஹோர்முஸ் நீரிணை ஊடாகக் கப்பல்கள் பயணிப்பதற்கு ஈரான் விதித்துள்ள புதிய நிபந்தனைகளுக்கு மத்தியில், இன்று (25) சீனக் கப்பல் ஒன்று

thee

ஆசிரியர்களின் இடமாற்றம்; நாளை முதல் தொடர் போராட்டம்!

March 25, 2026

ஆசிரியர்களின் இடமாற்றம் தொடர்பான கோரிக்கைகளை வடமாகாண கல்வித் திணைக்களம் பரிசீலிக்காமல், மீண்டும் மீண்டும் குறிப்பிட்ட ஆசிரியர்களுக்கே இடமாற்றம் வழங்கத் தீர்மானித்துள்ளதாக

tru

ட்ரம்பின் மக்கள் செல்வாக்கு சரிகிறது!

March 25, 2026

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீதான அந்நாட்டு மக்களின் ஆதரவும் செல்வாக்கும் படிப்படியாகக் குறைந்து வருவதாக அமெரிக்க ஊடக அறிக்கைகள்

train

ரயில் பயணிகள் அதிகரிப்பு

March 25, 2026

எரிபொருள் விலை உயர்வு மற்றும் பேருந்து கட்டண அதிகரிப்பு காரணமாக, பொதுமக்கள் அதிகளவில் ரயில்களைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளதாக ரயில் நிலைய

hato

விடுமுறை நாளில் மேலதிக வகுப்பு; பொலிஸார் நடவடிக்கை

March 25, 2026

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள யுத்த நிலைமை காரணமாக எமது நாட்டில் எரிபொருள் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள சிக்கல்களைக் கருத்திற்கொண்டு வாரத்தில் ஒவ்வொரு

us

மத்திய கிழக்கை நோக்கி அமெரிக்க படையினர் ; உறுதி செய்தது பென்டகன்

March 25, 2026

பல நாட்களாக நீடித்த கேள்விகளுக்குப் பிறகு, குறிப்பிட்ட சில தரைப்படைகளை இந்தப் பிராந்தியத்திற்கு அனுப்புவதை பென்டகன் தற்போது அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.

ff

அமெரிக்கா, பாகிஸ்தான் வழியாக ஈரானிடம் 15 அம்சங்கள் கொண்ட எதிர்பார்ப்புப் பட்டியல் வழங்கியது!

March 25, 2026

அமெரிக்கா, பாகிஸ்தான் வழியாக ஈரானிடம் 15 அம்சங்கள் கொண்ட எதிர்பார்ப்புப் பட்டியலை பகிர்ந்துள்ளதாக இரு பிராந்திய வட்டாரங்கள் சிஎன்என்-இடம் தெரிவித்துள்ளன.