நாட்டின் ஆரம்பப் பாடசாலைகளுக்கு பொதுவான மாதிரித் திட்டம்

மாணவர் பாதுகாப்பு, நலன்புரி மற்றும் செயல்வழிக் கல்வி ஆகிய முக்கிய துறைகளை உள்ளடக்கிய பொதுவான மாதிரி ஒன்றின் அடிப்படையில், நாட்டின் ஆரம்பப் பாடசாலைகள் அபிவிருத்தி செய்யப்பட வேண்டும் என்று கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சரும் பிரதமருமான ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று நடைபெற்ற கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் ஆலோசனைச் சபைக் கூட்டத்திற்குத் தலைமை தாங்கி உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

அனைத்துப் பிள்ளைகளுக்கும் கல்வியைப் பெறுவதற்கான சம வாய்ப்பை உறுதிப்படுத்துவதே இந்தத் திட்டத்தின் பிரதான நோக்கம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இக்கூட்டத்தின் போது, ஆரம்பப் பாடசாலைகள் அபிவிருத்தித் திட்டத்தின் தற்போதைய முன்னேற்றம் குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டதுடன், ஒரு ஆரம்பப் பாடசாலையில் இருக்க வேண்டிய அடிப்படைத் தேவைகள் மற்றும் அளவுகோல்கள் அடங்கிய அறிக்கையொன்றும் அதிகாரிகளால் சமர்ப்பிக்கப்பட்டது.

வகுப்பறைகளில் இருக்க வேண்டிய நவீன உபகரணங்கள், மாணவர்களைக் கவரும் வகையில் பாடசாலை வளாகத்தை வடிவமைத்தல், வெளிக்களச் செயற்பாடுகளுக்கான விசேட வகுப்பறைகள் மற்றும் விளையாட்டு மைதானங்களை அமைத்தல் போன்ற விடயங்கள் இந்த அளவுகோல்களில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

எதிர்வரும் காலங்களில் இவற்றை மேலும் மேம்படுத்தி, அனைத்து ஆரம்பப் பாடசாலைகளுக்கும் பயன்படுத்தக்கூடிய ஒரு பொதுவான மாதிரியாக வெளியிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பிரதமர் தெரிவித்தார்.

அத்துடன், இந்த அளவுகோல்களின் அடிப்படையில் ஒவ்வொரு மாகாணத்திலும் தெரிவு செய்யப்பட்ட சில பாடசாலைகளை மாதிரிப் பாடசாலைகளாக அபிவிருத்தி செய்வதற்கு அரசு திட்டமிட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

நடப்பு 2026 ஆம் ஆண்டின் வரவு – செலவுத் திட்டத்தின் மூலம் பாடசாலைகளின் பௌதிக வளங்களை மேம்படுத்தும் திட்டங்களுக்காகப் பெருமளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளதால், அத்திட்டங்களை விரைவாகப் பூர்த்தி செய்யுமாறு அதிகாரிகளுக்குப் பிரதமர் ஆலோசனை வழங்கினார்.

இத்தகைய அபிவிருத்தித் திட்டங்களை வினைத்திறனுடன் முன்னெடுப்பதற்குக் கண்காணிப்பு நடவடிக்கைகளில், அந்தந்த மாகாணங்களுக்குப் பொறுப்பான கல்வி அதிகாரிகள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் இணைந்து செயற்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

இதனுடன், தொழில்சார் கல்வி நிலையங்களுக்கு மாணவர்களை இணைத்துக்கொள்ளும் வீதத்தை அதிகரித்தல் மற்றும் அதற்குத் தகுந்தாற்போல் அவற்றின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் பணிகள் குறித்தும் இக்கூட்டத்தின் போது பிரதமரால் விசேட கவனம் செலுத்தப்பட்டது.

இந்த நாடாளுமன்ற ஆலோசனைச் சபைக் கூட்டத்தில் கல்வி மற்றும் உயர்கல்விப் பிரதி அமைச்சர் வைத்தியர் மதுர செனவிரத்ன, தொழில்சார் கல்விப் பிரதி அமைச்சர் நலின் ஹேவகே ஆகியோருடன் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ உள்ளிட்ட அமைச்சின் உயர் அதிகாரிகள் மற்றும் மாகாணக் கல்வி அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

3

“திமுக ஒரு நச்சுப்பாம்பு; தவெக-வுடன் கூட்டணி அமைக்கும் வரை தூரத்தில் இருந்து ரசிப்போம்!” – கூட்டணிக் கட்சியான மதிமுக-வின் அவைத்தலைவர் அர்ஜுன்ராஜ் அசுர வேக அதிரடி!

June 13, 2026

சென்னை: “பாம்புக்குப் பால் வார்த்தாலும் நஞ்சைத் தான் கக்கும், அதேபோலத் திமுக ஒரு கொடிய நச்சுப்பாம்பு; திமுகவினர் தில்லுமுல்லுக்கு முழுச்

2

“சினிமா பாணியில் சிறப்புப் படை; தனிமனித ஒழுக்கத்தை முதலில் உங்கள் கட்சியினருக்குச் சொல்லுங்கள்!” – ஆலந்தூர் தவெக பாலியல் விவகாரத்தில் முதல்வர் விஜயை அசுர வேகத்தில் வறுத்தெடுத்த கனிமொழி எம்.பி!

June 13, 2026

சென்னை: “சினிமா பாணியில் பெயரிட்ட சிறப்புப் படையை அண்மையில் தொடங்கி வைத்து, ‘தனிமனித ஒழுக்கம்’ குறித்துப் பொதுமக்களுக்கு மேடையில் அறிவுரை

1

“சென்னையின் மின்திறன் 3,500 மெகாவாட், ஆனால் பயன்பாடு 5,000 மெகாவாட்! திமுக ஆட்சியில் மின்கட்டமைப்பு சீரழிக்கப்பட்டது!” – வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் அசுர வேக குற்றச்சாட்டு!

June 13, 2026

கோயம்புத்தூர்: “தமிழ்நாட்டில் தற்போதைய மின்சாரப் பயன்பாட்டிற்கு ஏற்ப மின்கட்டமைப்பு வசதிகளைக் கடந்த கால திமுக ஆட்சி எவ்விதத்திலும் உருவாக்கவில்லை; அதிமுக

en

உலக கிண்ண மகளிர்; இலங்கையை வென்றது இங்கிலாந்து

June 13, 2026

உலக கிண்ண மகளிர் இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் முதல் லீக் போட்டியில் இங்கிலாந்து அணி அபார வெற்றிப் பெற்றுள்ளது.

iran

மோதலை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான ஒப்பந்தம் இறுதிக் கட்டத்தில் – ஈரான் அறிவிப்பு

June 13, 2026

ஈரானில் மோதலை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான அமெரிக்காவுடனான ஒப்பந்தம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக ஈரானின் வெளியுறவு அமைச்சர் செய்ட் அப்பாஸ் அராக்சி

ha

நாட்டின் ஆரம்பப் பாடசாலைகளுக்கு பொதுவான மாதிரித் திட்டம்

June 13, 2026

மாணவர் பாதுகாப்பு, நலன்புரி மற்றும் செயல்வழிக் கல்வி ஆகிய முக்கிய துறைகளை உள்ளடக்கிய பொதுவான மாதிரி ஒன்றின் அடிப்படையில், நாட்டின்

kaveendran

கைது செய்யப்பட்டுள்ள பிள்ளையான் – சுரேஷ் சலேயை விடுவிக்கவே கூடாது

June 13, 2026

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் சம்பவத்தின் பின்னணியில் உள்ள உண்மைகள் முழுமையாக வெளிவர வேண்டும் என்றும், அதுவரை இச்சம்பவம் தொடர்பில்

mujipur

மக்களின் ஜனநாயக உரிமையை இல்லாமலாக்கும் நடவடிக்கையை அரசு மேற்கொள்கின்றது – முஜிபுர் ரஹ்மான் குற்றச்சாட்டு

June 13, 2026

வெளிப்படைத்தன்மை தொடர்பில் கதைத்த இந்த அரசாங்கம் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் எரிபொருள் கொள்வனவு செய்துள்ள தகவல்களை கேட்டால், அதனை

Walk-1-1-1-2-3

கனடாவில் புற்றுநோய் விழிப்புணர்வு நடைப்பயணம்; நம்பிக்கைக்காக – வாழ்க்கைக்காக நடப்போம்! உயிர்களைக் காப்போம்!

June 13, 2026

ஒரு நோயை எதிர்த்து போராடுவது மருத்துவர்களின் கடமை மட்டும் அல்ல… அது ஒவ்வொரு மனிதனின் மனிதநேயப் பொறுப்பும் கூட. புற்றுநோயால்

thum

முன்கூட்டியே தகவல்கள் கிடைத்திருந்தும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலைத் தடுக்க தவறிய அதிகாரிகளுக்கு தண்டனை வழங்க வேண்டும் – துமிந்த திஸாநாயக்க

June 13, 2026

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான துல்லியமான புலனாய்வு தகவல்கள் முன்கூட்டியே கிடைத்திருந்தும் அதனைத் தடுக்க தவறிய பாதுகாப்பு பிரிவு அதிகாரிகளுக்கு

5Y6OSMTX3FCXBO26E4SV6JCRGM

உலகக் கோப்பை கால்பந்து: கானா அணி நட்சத்திர வீரர் தாமஸ் பார்ட்டி கனடாவுக்குள் நுழைய தடை!

June 13, 2026

டொராண்டோ: கானா நாட்டின் முன்னணி கால்பந்து மத்தியக்கள ஆட்டக்காரரான (Midfielder) தாமஸ் பார்ட்டி (Thomas Partey) கனடாவுக்குள் நுழைவதற்கு அந்நாட்டு

DQM2IQB3OZC4FOEXASINC2UA5U

டொராண்டோ மைதானத்தில் பரபரப்பு: காவல்துறை அதிகாரிகளைத் தாக்கிய போஸ்னியா நாட்டு ரசிகர்கள் இருவர் கைது

June 13, 2026

டொராண்டோ: டொராண்டோ மைதானத்தில் (Toronto Stadium) இன்று மதியம் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறை அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தியதாக