உலக கிண்ண மகளிர் இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் முதல் லீக் போட்டியில் இங்கிலாந்து அணி அபார வெற்றிப் பெற்றுள்ளது.
இந்தப் போட்டியில் இலங்கை மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகள் மோதின.
இலங்கை நேரப்படி நேற்றிரவு 11 மணிக்கு ஆரம்பமான இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை மகளிர் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பாடிய இங்கிலாந்து மகளிர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் ஒரு விக்கெட்டை மாத்திரம் இழந்து 219 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.
அந்த அணி சார்பில் துடுப்பாட்டத்தில் Danni Wyatt-Hodge ஆட்டமிழக்காமல் 105 ஓட்டங்களை பெற்றார்.
இந்நிலையில் 220 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பாடிய இலங்கை மகளிர் அணி 20 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 132 ஓட்டங்களை மாத்திரமே பெற்று 87 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.
குழந்தையைக் கையில் ஏந்திச் சென்ற தந்தை பேருந்து மோதி பலி
Jun 13, 2026 – 09:19 AM –
0
குழந்தையைக் கையில் ஏந்திச் சென்ற தந்தை பேருந்து மோதி பலி
குருநாகல் – புத்தளம் வீதியின் ஹேரத்கம சந்திக்கு அருகில் நேற்று (12) இடம்பெற்ற பேருந்து விபத்தொன்றில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இவ்விபத்தில் அவுலேகம பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய தந்தை ஒருவரே துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்துள்ளார்.
அவர் தனது 5 வயது குழந்தையை கையில் ஏந்தியவாறு வீதியில் சென்றுகொண்டிருந்தபோது, புத்தளம் திசை நோக்கி பயணித்த பேருந்து மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த தந்தையும் குழந்தையும் உடனடியாக நிக்கவெரட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அங்கு சிகிச்சை பெற்று வந்த தந்தை உயிரிழந்துள்ளார்.
காயமடைந்த குழந்தை மேலதிக சிகிச்சைக்காக குருநாகல் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளது.
விபத்துடன் தொடர்புடைய பேருந்தின் சாரதி தற்போது பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், வாரியபொல பொலிஸார் இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.