அறிமுக நாயகன் கே ஜே ஆர் நடிப்பில் தயாராகி உள்ள ‘அங்கீகாரம்’ எனும் திரைப்படத்தில் இடம்பெற்ற ‘வெற்றி விழா ஆந்தம்’எனும் பாடல் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டு, வெளியிடப்பட்டிருக்கிறது.
இயக்குநர் தென்பாதியான் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘அங்கீகாரம்’ திரைப்படத்தில் கே ஜே ஆர், விஜி வெங்கடேஷ், சிந்துரி, ரங்கராஜ் பாண்டே, வசுந்தரா, மன்சூர் அலிகான் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஏ. விஸ்வநாத் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜிப்ரான் வைபோதா இசையமைத்திருக்கிறார்.
விளையாட்டு வீரரின் வாழ்வியலை தழுவி கொமர்சல் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஸ்வஸ்திக் விஷன்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது.
எதிர்வரும் 26 ஆம் திகதி முதல் உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தில் இடம்பெற்ற ‘வெற்றி விழா ஆந்தம்’ எனும் விளையாட்டு மைதானத்தில் வெற்றி பெறும் வீரர்களுக்கான கொண்டாட்ட பாடல் – செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்டு, வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த பாடலை இசையமைப்பாளர் ஜிப்ரான் மற்றும் தமிழ் கொடி ஆகியோர் இணைந்து பாடி இருக்கிறார்கள்
. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் கூடிய ரீல்ஸ், ஷார்ட்ஸ் , மீம்ஸ் ஆகியவை சமூக வலைதளங்களில் வெளியாகி டிஜிட்டல் தள பார்வையாளர்களின் கவனத்தை கவர்ந்து வருவதால்…. அவர்களது வரவேற்பை பெறுவதற்காக உருவாக்கப்பட்ட இந்த பாடல்- அனைத்து தரப்பு இசை ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்திருக்கிறது.