லாரி லோகோகோ (Lori Lococo) நயாகரா ஃபால்ஸின் புதிய மேயராகத் தேர்ந்தெடுக்கப்படுவார் என CP24-CTV தேர்தல் பிரிவு கணித்துள்ளது.
அனைத்து வாக்குப்பதிவு மையங்களின் முடிவுகளும் வெளியாகியுள்ள நிலையில், 50 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று, 2010 ஆம் ஆண்டு முதல் மாநகரத்தின் உயரிய பொறுப்பில் இருந்த ஜிம் டியோடாதியை (Jim Diodati) தோற்கடித்து லோகோகோ வெற்றி பெற்றுள்ளார்.