‘நேச்சுரல் ஸ்டார்’ நானி அதிரடி எக்சன் நாயகனாக நடித்திருக்கும் ‘தி பாரடைஸ்’ திரைப்படத்தின் டீசர் பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையே வெளியிடப்பட்டிருக்கிறது.
தெலுங்கு இயக்குநர் ஸ்ரீகாந்த் ஓடேலா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘தி பாரடைஸ்’ திரைப்படத்தில் நானி, மோகன் பாபு, கயாடு லோஹர், சோனாலி குல்கர்னி, ராகவ் ஜூயல் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
சி ஹெச் சாய் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். பிரம்மாண்டமான மாஸ் எக்சன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை எஸ் எல் வி சினிமாஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சுதாகர் செருகூரி தயாரித்திருக்கிறார்.
எதிர்வரும் செப்டம்பர் மாதம் 24 ஆம் திகதி முதல் உலகம் முழுவதும் படமாளிகையில் பான் இந்திய திரைப்படமாக வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது.
இதில் இடம் பிடித்திருக்கும் எக்சன் காட்சிகள் ரசிகர்களை வியக்க வைத்திருக்கிறது. இதன் காரணமாக இந்த டீசர் வெளியான குறுகிய கால அவகாசத்திற்குள் பல மில்லியன் கணக்கிலான டிஜிட்டல் பார்வைகளை கடந்து சாதனை படைத்து வருகிறது.