காலி, கராபிட்டிய மருத்துவ பீடத்தில் மூன்றாம் ஆண்டு கல்வி பயின்று வந்த 25 வயதுடைய படபெண்டி கவிந்தி யுக்மணி சில்வா என்ற மாணவி, நேற்று (03/11) அதிகாலை தொடருந்து கடவைக்கு அருகிலுள்ள வீதியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
தண்டவாளத்தை ஆய்வு செய்யச் சென்ற திணைக்கள ஊழியர் ஒருவர் சடலத்தைக் கண்டு பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.
சம்பவ இடத்தில் மாணவியின் கைப்பேசிக்கு அழைப்பு வந்ததையடுத்து, அதற்குப் பதிலளித்த பொலிஸ் அதிகாரி அவரது கணவருடன் பேசியுள்ளார்.
கணவரின் வாக்குமூலத்தின்படி, உயிரிழப்பதற்கு முன்னர் இருவருக்கும் இடையில் வாக்குவாதம் இடம்பெற்றிருந்ததுடன், மாணவி தற்கொலை செய்துகொள்ளும் மனநிலையில் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், மாணவியின் உயிரிழப்புக்கான உண்மையான காரணம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்