தையிட்டி விகாரையைச் சூழவுள்ள தனியார் காணியில் மேலும் புதிய கட்டுமானப் பணிகள் முன்னெடுக்கப்படுவதாக கிடைத்த தகவலையடுத்து, அதனை நேரில் பார்வையிடச் சென்ற பிரதேச சபை உறுப்பினர்களுக்கு காணிக்குள் செல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டு, அவர்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
குறித்த பகுதியில் இடம்பெறும் புதிய கட்டுமானங்கள் தொடர்பில் தகவல் அறிந்த பிரதேச சபை உறுப்பினர்கள் சம்பவ இடத்திற்குச் சென்று நிலைமையை பார்வையிட முயன்றுள்ளனர்.
எனினும், காணிக்குள் நுழைவதற்கு அனுமதி வழங்கப்படாத நிலையில், உறுப்பினர்கள் அங்கிருந்து திரும்பிச் சென்றுள்ளனர்.
குறித்த கட்டுமானப் பணிகள் தொடர்பான மேலதிக தகவல்கள் மற்றும் அனுமதிகள் குறித்து பிரதேச சபை மட்டத்தில் ஆராயப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.