“தேர்தல் ஆணையம் பாஜகவின் கிளை அமைப்பா?” – மறுதேர்தல் கோரி வேல்முருகன் ஆவேசம்!

சென்னை:

தேர்தல் ஆணையம் பாஜகவின் கிளை அமைப்பா என்றும், பாசிசத்தின் காலடியில் மக்கள் ஜனநாயகம் நசுக்கப்படுகிறதா என்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் சரமாரியாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.

https://youtu.be/qfUY_mCtxdw

சிறப்புத் தீவிர திருத்தம் (SIR) என்ற பெயரில் மேற்கொள்ளப்பட்ட வாக்காளர் பட்டியல் திருத்த நடவடிக்கையில், தமிழ்நாட்டில் மட்டும் 74 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்களின் பெயர்கள் குறைக்கப்பட்டிருப்பதாக வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக வேல்முருகன் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

உயிருடன் இருப்பவர்கள் நீக்கம்:

“தமிழ்நாட்டின் பல பகுதிகளில் உயிருடன் இருக்கும் வாக்காளர்கள் ‘இறந்தவர்கள்’ என்றும், சொந்த வசிப்பிடத்திலேயே இருந்தவர்கள் ‘இடம்பெயர்ந்தவர்கள்’ என்றும் குறிப்பிடப்பட்டு பெயர்கள் நீக்கப்பட்ட சம்பவங்கள் செய்தி ஆய்வுகளில் வெளிச்சத்துக்கு வந்துள்ளன. இத்தகைய தவறுகள் எவ்வாறு ஏற்பட்டன? யார் பொறுப்பு? பாதிக்கப்பட்டவர்களின் பெயர்கள் எவ்வாறு மீண்டும் சேர்க்கப்பட்டன? இந்த நீக்கங்கள் தேர்தல் முடிவுகளில் தாக்கத்தை ஏற்படுத்தியதா? என்பதற்குத் தேர்தல் ஆணையம் முழுமையான பதில் அளிக்க வேண்டும்.

பாஜகவை திருப்திப்படுத்தச் செயல்பட்டதா?

தேர்தல் ஆணையத்தின் இரு ஆணையர்களான சுக்பீர் சிங் மற்றும் விவேக் ஜோஷி ஆகியோர் பல்வேறு ஆட்சேபணைகளைப் பதிவு செய்திருப்பதாக வெளியாகியுள்ள தகவல்கள் மேலும் கேள்விகளை எழுப்புகின்றன. சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே மற்றும் மேற்கு வங்க முன்னாள் முதலமைச்சர் மம்தா பானர்ஜி ஆகியோர், தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பாஜகவை திருப்திப்படுத்தவே வேலை செய்தார் என்று குற்றம் சாட்டியுள்ளனர்.

வாக்குச்சீட்டில் மறுதேர்தல்:

வாக்காளர் பட்டியல் திருத்தத்தில் ஏற்பட்ட குளறுபடிகள் தேர்தல் முடிவுகளை மாற்றியமைத்திருந்தால், அந்த முடிவை எவ்வாறு ஏற்றுக்கொள்ள முடியும்? எனவே, எஸ்.ஐ.ஆர் நடவடிக்கைகளுக்குப் பிறகு நடைபெற்ற தேர்தல்களில் வாக்காளர் பட்டியல் மாற்றங்கள் வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கும் அளவுக்குத் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளனவா என்பதைச் சுயாதீனமாக விசாரிக்க வேண்டும். அது நிரூபிக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட தேர்தல்களை ரத்து செய்துவிட்டு, மக்களின் நம்பிக்கையை உறுதிப்படுத்தும் வகையில் வாக்குச்சீட்டு முறையில் மறுதேர்தல் நடத்த வேண்டும்\” என்று வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.

#Velmurugan #TVKParty #ElectionCommission #VoterList #BJP #GyaneshKumar #BallotPaper #TNPolitics #BmNews #TamilNews #BreakingNewsTN #TamilNaduNews #LatestNews #TamilNewsLive

oli_1

மீண்டும் மேயரானால் வாரத்திற்கு 10 பயணங்களுக்கு பின் கட்டணமில்லை: ஒலிவியா சௌ அதிரடி வாக்குறுதி!

September 24, 2026

டொரண்டோ மேயர் தேர்தலில் மீண்டும் போட்டியிடும் ஒலிவியா சௌ (Olivia Chow), தாம் மீண்டும் வெற்றி பெற்றால் ‘டொரண்டோ போக்குவரத்து

7596fdb4a4f393127fc206bf98097ec5 - Copy (2)

“13 வயதில் என்னையும் சீரழித்தார்; என் உயிருக்கு ஆபத்து!” – ஜெம் வீரமணி வழக்கில் உதவியாளர் சாந்தியின் பகீர் வீடியோ வாக்குமூலம்!

September 24, 2026

சென்னை: தமிழகத்தையே உலுக்கி வரும் ஜெம் கிரானைட்ஸ் உரிமையாளர் ஆர்.வீரமணி மீதான சிறுமிகள் பாலியல் வன்கொடுமை வழக்கில், அவரது பெண்

1200-675-26735383-thumbnail-16x9-nil (1)

“தேர்தல் ஆணையம் பாஜகவின் கிளை அமைப்பா?” – மறுதேர்தல் கோரி வேல்முருகன் ஆவேசம்!

September 24, 2026

சென்னை: தேர்தல் ஆணையம் பாஜகவின் கிளை அமைப்பா என்றும், பாசிசத்தின் காலடியில் மக்கள் ஜனநாயகம் நசுக்கப்படுகிறதா என்றும் தமிழக வாழ்வுரிமைக்

1200-675-24466243-thumbnail-16x9-cpm

“இடைத்தேர்தலில் தவெக வேட்பாளர்கள் தோற்கடிக்கப்பட வேண்டும்” – சிபிஎம் மாநிலச் செயலாளர் சண்முகம் காட்டம்!

September 24, 2026

செங்கல்பட்டு: மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்ற இடைத்தேர்தல்களில் போட்டியிடும் ஆளும் தவெக வேட்பாளர்கள் தோற்கடிக்கப்பட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்

4

“சிகிச்சை காரணமாகத்தான் முதலமைச்சருடன் லண்டன் செல்லவில்லை” – தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா விளக்கம்!

September 24, 2026

சென்னை: சிகிச்சை காரணமாகத்தான் முதலமைச்சர் விஜய்யுடன் லண்டன் செல்லவில்லை என்று தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார். முதலீடுகள் ஈர்ப்பு:

IMG_8409

அரசு ஊழியர்களுக்கு மாதவிடாய் விடுப்பு அளிப்பது குறித்து ஆய்வு !

September 24, 2026

பெண்கள் முழு ஊதியத்துடன் கூடிய மாதவிடாய் விடுப்பு பெறுவது குறித்த விவகாரத்தை ஆராய, தமிழ்நாடு அரசு 13 நபர் கொண்ட

IMG_8408

பெரம்பலூர் அருகே அதிகாலை கோர விபத்து!

September 24, 2026

திருச்சி–சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் அருகே இன்று (செப். 24) அதிகாலை கார், முன்னால் சென்ற ஆம்னி பேருந்தின் பின்புறத்தில்

court-judge-hammer-gavel-696x398

2008 திருகோணமலை கடத்தல் வழக்கில் இரண்டு ஓய்வுபெற்ற கடற்படை பெண் அதிகாரிகள் விளக்கமறியலில்

September 24, 2026

யுத்த காலத்தில் திருகோணமலையில் இரண்டு பெண்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் இலங்கை கடற்படையின்

yasmin sooka

செம்மணி மனித புதைகுழி ஒரு சாத்தியமான குற்றவியல் நிகழ்வு -வெறும் எலும்புகளை மீட்பது மற்றும் எண்ணிக்கையுடன் சுருங்கிவிடக்கூடாது- ஜஸ்மின் சூக்கா

September 24, 2026

செம்மணியில் நூற்றுக்கணக்கான மனித எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டது வெறும் தொல்பொருள் அல்லது தடயவியல் நிகழ்வல்ல. அது ஒரு சாத்தியமான குற்றவியல் நிகழ்வாகும்

easter attack

உயிர்த்தஞாயிறு தாக்குதலிற்கு காரணமானவர்கள் வெளியே சுதந்திரமாக வாழ்கின்றனர்- தண்டனை விதிக்கப்பட்டவர்களில் ஒருவர் நீதிமன்றத்தில் தெரிவிப்பு

September 24, 2026

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் தண்டனை விதிக்கப்பட்டவர்களில் ஒருவர் தாக்குதலிற்கு காரணமானவர்கள் இன்னமும் சுதந்திரமாக உள்ளனர் ,நீதியை வழங்குவதற்கு உதவி

easter bomb

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்- 15 பேர் தங்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு எதிராக மேன்முறையீடு செய்யவுள்ளனர்

September 24, 2026

2019ம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் தலா 200 ஆண்டுகளுக்கும் அதிகமாக சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள 15 பேர் தங்களுக்கு

WhatsApp Image 2026-09-24 at 10.16.45 AM

மருத்துவச் சான்றிதழ்களை வழங்கும் புதிய டிஜிட்டல் முறைமை!

September 24, 2026

சாரதி அனுமதிப்பத்திரத்தைப் பெறுவதற்குத் தேவையான மருத்துவச் சான்றிதழ்களை வழங்கும் நடைமுறையை இலகுபடுத்தும் வகையில் புதிய டிஜிட்டல் முறைமை இன்று (24)