உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் தண்டனை விதிக்கப்பட்டவர்களில் ஒருவர் தாக்குதலிற்கு காரணமானவர்கள் இன்னமும் சுதந்திரமாக உள்ளனர் ,நீதியை வழங்குவதற்கு உதவி புரிவதற்கான வாய்ப்பு தனக்கு கிடைத்தால் உரிய ஆதாரங்களை வெளியிட தயார் என குறிப்பிட்டுள்ளார்.
உயிர்த்த ஞாயிறுதாக்குதல் வழக்கில் குற்றவாளியாக காணப்பட்டு 200 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட பின்னர் ஆறாவது குற்றவாளியான அபுதரிக் எனப்படும் முகமது அன்வர் முகமது ரிஸ்கான் என்பவர் நீதிமன்றத்தில் இதனை தெரிவித்தார்.
அவர்நீதிமன்றத்தில் மேலும் தெரிவித்ததாவது
பாதிக்கப்பட்டவர்களுக்கு எனது குடும்பம் எந்த தீங்கும் செய்யவில்லை. நாங்கள் தவறிழைக்கவில்லை என்பது அல்லாவிற்கு தெரியும்.
ஏதோ நடந்தது நாங்கள் அதில் சிக்குண்டோம்.நெருப்பின்றி புகையாது.
இதற்கு காரணமானவர்கள் இன்னமும் வெளியில் உள்ளனர் சுதந்திரமாக வாழ்கின்றனர். இந்த சம்பவங்களுடன் தொடர்புடைய , வெளியில் வாழ்கின்றவர்கள் தங்கள் தலைக்கு மேலே இந்த சுமையுடன் வாழ்கின்றனர்.
நீதி நிலைநாட்டப்படுவதற்கு உதவுவதற்கு எனக்கு வாய்ப்பு வழங்கப்பட்டால்,நான் நீதிக்காக பேசுவேன்.
நாங்கள் செய்யாத ஒன்றிற்காக எங்களை ஏன் இந்த நிலைக்கு ஆளாக்கியுள்ளனர்.தவறு இடம்பெற்றுள்ளது ஆனால் நாங்கள் அதனை நாங்கள் செய்யவில்லை.குற்றமிழைத்தவர்கள் நிச்சயமாக தண்டிக்கப்படவேண்டியவர்கள்,என அவர் தெரிவித்துள்ளார்