தேசிய மக்கள் சக்தி என்பது ஒரு அரசாங்கம் மட்டுமே தவிர அது ‘அரசு’ அல்ல

தற்போதைய அரசாங்கத்தின் அமைச்சரான லால்காந்த மேற்கொண்டு வரும் செயற்பாடுகள், பிரித்தானியர் ஆட்சிக்காலத்தில் ஜான் டொய்லி ஆற்றிய சூழ்ச்சிமிக்க பாத்திரத்தையே நினைவூட்டுவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சீவ எதிரிமான்ன தெரிவித்தார்.

பத்தரமுல்லயில் உள்ள கட்சித் தலைமையகத்தில் இன்று வெள்ளிக்கிழமை (30) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர், தேசிய மக்கள் சக்தி (NPP) என்பது ஒரு அரசாங்கம் மட்டுமே தவிர அதுவே ‘அரசு’ அல்ல என்பதைச் சுட்டிக்காட்டினார்.

ஒரு அரசாங்கத்தைத் தேர்தலில் தோற்கடிக்கவோ அல்லது கலைக்கவோ முடியும், ஆனால் ‘அரசு’ என்பது நிலையானது என்றும், அதனைத் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர நினைப்பது சர்வாதிகாரத்தின் வெளிப்பாடு என்றும் அவர் விமர்சித்தார்.

அமைச்சர் லால்காந்த அண்மையில் வெளியிட்ட “நாங்கள் அரசாங்கத்தைக் கைப்பற்றிவிட்டோம், ஆனால் இன்னும் அரசை (State) கைப்பற்றவில்லை” என்ற கூற்றானது அரசியல் அறிவியலின் படி ஆபத்தான முன்னுதாரணமாகும் என அவர் குறிப்பிட்டார்.

பிரான்ஸின் 14-ஆம் லூயி மன்னன் “நானே அரசு” என்று கூறியதைப் போன்றே தற்போதைய ஆட்சியாளர்களும் செயற்படுவதாகக் குற்றம் சாட்டிய சஞ்சீவ எதிரிமான்ன, அரசு என்ற எஜமானனின் சேவகனே அரசாங்கம் என்பதையும், மக்களின் விருப்பங்களை கொள்கைகளாக மாற்றுவதே அதன் பணி என்பதையும் அவர்கள் மறந்துவிட்டதாகத் தெரிவித்தார்.

மாற்றுக் கருத்துடைய அரசியல் பிரிவினரே இல்லாத ஒரு சமூகத்தை உருவாக்க அரசாங்கம் முயற்சிப்பதாகவும், தமது அரசியல் நிலைப்பாட்டிற்கு இணங்காத நிறுவனத் தலைவர்களைச் சுதந்திரமாகச் செயற்பட விடாமல் அரசாங்கம் தடுத்து வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

ganja

ஊர்காவற்துறையில் கஞ்சா கடத்த முற்பட்ட இளைஞர் கைது!  

March 4, 2026

ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுருவில் பகுதியில் 9 கிலோ கிராம் கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது

boa

கடற்றொழிலாளர்களுக்கு தடையின்றி எரிபொருள் விநியோகம்

March 4, 2026

நாட்டில் நிலவும் எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியில், கடற்றொழிலாளர்களுக்குத் தேவையான எரிபொருளை எந்தவிதத் தடையுமின்றி விநியோகிப்பதற்கு முறையான பொறிமுறை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளதாகக்

curr

வெளிநாட்டு நாணயமாற்று நிர்வாகமானது இலங்கையின் பொருளாதார நிலையை அளவிடும் கருவியாக செயற்பட்டு வருகிறது

March 4, 2026

வெளிநாட்டு நாணயமாற்று நிர்வாகமானது இலங்கையின் பொருளாதார நிலையை அளவிடும் கருவியாக வரலாற்று அடிப்படையில் செயற்பட்டு வருகிறது என திருகோணமலை மாவட்ட

b

பிறப்பு வீதம் இலங்கையில் குறைவடைகிறது?

March 4, 2026

இலங்கையில் பிறப்பு வீதம் படிப்படியாகக் குறைந்து வருவதாக லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் வைத்தியர்

arrest

போதைப்பொருளுடன் இராணுவச் சிப்பாய் கைது

March 4, 2026

திருகோணமலையில் வான்எல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில், உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கி மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் இன்று(04.03.2026) கைது

manmu

பிரதேசசபையின் தவிசாளர் அச்சுறுத்துவதாக பிரதேச சபை உறுப்பினர் தெரிவிப்பு

March 4, 2026

தனது அதிகாரத்தின் கீழ் உள்ள பிரதேச சபையின் தோல்வியை மூடி மறைப்பதற்காகவும் எதிரான உறுப்பினர்களை அடிபணிய வைப்பதற்காகவும் பொலிஸில் பொய்யான

photo-collage.png (49)

தனியார் நிறுவன ஊழியர்களின் ஒரு நாள் சம்பளம் Rebuilding Sri Lanka நிதியத்திற்கு நன்கொடை

March 4, 2026

அனைத்து நிறுவன ஊழியர்கள் சங்கத்தின் Varun Beverages Lanka Pvt Ltd (Pepsi Cola Company) கிளையின் மற்றும் Royal

jail

கொழும்பு கிராண்ட்பாஸ் படுகொலைச் சம்பவம் : 6 சந்தேக நபர்கள் கைது!

March 4, 2026

கொழும்பு, கிராண்ட்பாஸ் பகுதியில் நபர் ஒருவரை பாராங்கத்தியால் வெட்டிக் கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய 6 சந்தேக நபர்களை விசேட

hari

நிவாரண கொடுப்பனவை செலுத்தி முடிக்கும் காலத்தை நிச்சயமாக குறிப்பிட முடியாது – பிரதமர்

March 4, 2026

தித்வா புயல் தாக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களில் 80 சதவீதத்துக்கும் அதிகானோருக்கு இழப்பீடு மற்றும் நிவாரண கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளது.இழப்பீடு வழங்கல் குறித்து பல்வேறு

Saj

மக்களிடம் ஜனாதிபதி மன்னிப்பு கோரவேண்டும் – சஜித் பிரேமதாச

March 4, 2026

எமது நாட்டை ஒரு சிண்டாக அறிமுகப்படுத்தியமை தொடர்பில் நாட்டிடமும் மக்களிடமும் ஜனாதிபதி மன்னிப்பு கோரவேண்டியது மிகவும் முக்கியமாகும் என எதிர்க்கட்சித்

lssp

லங்கா சமசமாஜக் கட்சியின் யாப்பை மீறி எவரும் செயலாளர் பதவியை கைப்பற்ற முடியாது

March 4, 2026

லங்கா சமசமாஜ கட்சியின் பொதுச் செயலாளர் பதவி மற்றும் கட்சியின் எதிர்கால அரசியல் நகர்வுகள் குறித்து அக்கட்சி தெளிவுபடுத்தியுள்ளது. கடந்த

fue

போர்ச் சூழல் காரணமாக எரிபொருள் விலை அதிகரிக்குமா?

March 4, 2026

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது நடத்திய தாக்குதல்களைத் தொடர்ந்து, மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழல்