தெற்கு இத்தாலியில் பூமியதிர்ச்சி : கட்டடங்கள் சேதம்

தெற்கு இத்தாலிய நகரமான நேபிள்ஸுக்கு அருகில் அமைந்துள்ள கம்பீ பிளெக்ராய் பகுதியில் வெள்ளிக்கிழமை (31ஆம் திகதி) 4.7 ரிச்டர் அளவில் சக்திவாய்ந்த பூமியதிர்ச்சி ஏற்பட்டது. இதனால் மின்சார விநியோகம், ரயில் மற்றும் மெட்ரோ சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டு சில கட்டடங்களுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இத்தாலிய நேரப்படி வெள்ளிக்கிழமை மாலை 7:46 மணிக்கு (GMT 1746) நிலவிய இந்நிலநடுக்கம், நேபிள்ஸுக்கு மேற்கே உள்ள கம்பீ பிளெக்ராய் பகுதியில் சுமார் 3 கிலோமீற்றர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக இத்தாலியின் தேசிய புவிப் பௌதிகவியல் மற்றும் எரிமலை இயல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்நிலநடுக்கம் காரணமாக நேபிள்ஸ் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள கட்டடங்களுக்குச் சிறிய அளவில் சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக இத்தாலிய தீயணைப்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும், இதுவரை மீட்புப் பணிகளுக்கான அவசர அழைப்புகள் எதுவும் வரவில்லை என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதிக்கான உள்ளூர் ரயில் மற்றும் மெட்ரோ சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இப்பகுதியில் இதுவரை பதிவான மிகவும் சக்திவாய்ந்த நிலநடுக்கங்களில் இதுவும் ஒன்று என இத்தாலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நிலநடுக்க அதிர்வுகளை உணர்ந்த பொதுமக்கள் அச்சமடைந்து வீதிகளை நோக்கி ஓடிவந்து தஞ்சமடைந்தனர்.

அடர்ந்த மக்கள் தொகையைக் கொண்ட எரிமலைப் பகுதியான கம்பீ பிளெக்ராய் பகுதியில் சமீபத்திய வருடங்களாக நிலநடுக்க அதிர்வுகள் அதிகரித்து வருகின்றன.

சிறிய அளவிலான நிலநடுக்கங்கள் அங்கு வழக்கமானவை என்றாலும், இதுபோன்ற வலுவான அதிர்வுகள் 1980களின் தொடக்கத்தில் அப்பகுதியில் ஏற்பட்ட பாரிய நில அதிர்வு நெருக்கடியை நினைவூட்டுவதாக மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

இத்தாலியில் நிலநடுக்கங்கள் ஏற்படுவது சாதாரண நிகழ்வாகும். கடந்த 2016ஆம் ஆண்டு மத்திய இத்தாலியில் ஏற்பட்ட தொடர் சக்திவாய்ந்த நிலநடுக்கங்களால் 300 பேர் வரை உயிரிழந்தனர்.

அதேபோல, 1980ஆம் ஆண்டு நவம்பரில் தெற்கு இத்தாலியின் இர்பினியா பகுதியில் ஏற்பட்ட 6.9 ரிச்டர் அளவிலான மிக மோசமான நிலநடுக்கத்தில் சுமார் 2,700 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

Sajith-Premadasa-2 (1)

1983 கறுப்பு ஜூலை நிகழ்வானது நமது நாட்டின் அரசியல் வரலாற்றில் ஒரு கறுப்புப் புள்ளியாகும்  

October 10, 2026

1983 கறுப்பு ஜூலை நிகழ்வானது நமது நாட்டின் அரசியல் வரலாற்றில் ஒரு கறுப்புப் புள்ளியாகும். இச்சம்பவத்தினால் அநீதிக்குள்ளான தமிழ் சமூகத்திடம்

trum

நோபல் பரிசுக்கான அத்தனை தகுதியும் தனக்கு இருப்பதாக ட்ரம்ப் கருத்து

October 10, 2026

“அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தான் 2026-ம் ஆண்டுக்கான நோபல் அமைதி பரிசைப் பெறுவதற்கான அத்தனை தகுதிகளும் உள்ளது. ஆனால்

WhatsApp Image 2026-10-06 at 23.09.24

Majestic Asian உணவுத் திருவிழா!

October 10, 2026

Scarborough-வில் இன்று தொடக்கம் நடைபெறவுள்ள Majestic Asian Food Festival-இல் மறக்க முடியாத உணவுத் திருவிழாவில் கலந்து மகிழ்ந்து களிப்பாகக்

1200-675-27836231-thumbnail-16x9-vaiko

“கமிஷன், கலெக்ஷன் என்ற பேச்சுக்கே இடமில்லை என்பதை உறுதிப்படுத்திய இடைத்தேர்தல் முடிவு!” – வைகோ அதிரடி!

October 10, 2026

சென்னை: தமிழகத்தில் கமிஷன், கலெக்ஷன் என்ற பேச்சுக்கு இடமில்லை என்பதை தவெகவின் வெற்றி உறுதிப்படுத்தியுள்ளதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

1200-675-27342147-thumbnail-16x9-anbumani

“அ.தி.மு.க கூட்டணியில் இருந்து விலகலா? ‘அரசியலில் எதுவேணா நடக்கலாம்’” – பா.ம.க அன்புமணி ராமதாஸ் சூசகம்!

October 10, 2026

கோயம்புத்தூர்: பாமக கூட்டணி குறித்து மறுபரிசீலனை செய்யப்படும் என்றும், அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம் எனவும் பாமக தலைவர் அன்புமணி

anojan

அனோஜன் தொடர்பில் பொலிஸார் விசேட அறிவிப்பு

October 10, 2026

சவூதி அரேபியாவில் மரண தண்டனைத் தீர்ப்பை எதிர்கொண்டுள்ள சிவராசா அனோஜன் தொடர்பான தேவையற்ற கருத்து பரிமாற்றங்கள் தொடர்பில் கல்முனை தலைமையகப்

can

கனடாவைச் சேர்ந்த பாட்டி புதிய உலக சாதனை

October 10, 2026

கனடாவைச் சேர்ந்த 61 வயது வீராங்கனை டோனாஜீன் வைல்ட் (DonnaJean Wilde), அமெரிக்காவின் உடாவில் நடைபெற்ற உலக சீனியர் விளையாட்டுப்

cyb

போலி சமூக ஊடக கணக்குகள் மீது கடும் நடவடிக்கை

October 10, 2026

தேசிய மற்றும் சர்வதேச மட்டங்களில் போலியான முகநூல் (Facebook) கணக்குகளைத் தயாரித்து, சமூக வலைத்தளங்கள் ஊடாக இனங்களுக்கிடையில் முரண்பாடுகளை ஏற்படுத்தும்

rus

உக்ரைனின் எதிர்ப்புக்கு மத்தியில் ரஷ்யாவிடம் இருந்து டீசல் கொள்முதல் செய்ய அமெரிக்கா முடிவு!

October 10, 2026

அமெரிக்காவில் அதிகரித்து வரும் எரிபொருள் விலையைக் கட்டுப்படுத்தும் நோக்கில், ரஷ்யாவிடம் இருந்து அதிகளவில் டீசல் கொள்முதல் செய்வதற்கு அமெரிக்க ஜனாதிபதி

sau

ஹவுதி இலக்குகள் மீது பாகிஸ்தான் வான்வழி தாக்குதல்

October 10, 2026

மெக்கா ஒப்​பந்​தத்​தின்​படி ஏமனில் உள்ள ஹவுதி இலக்​கு​களை குறி​வைத்து பாகிஸ்தான் போர் விமானங்கள் தாக்​குதல் நடத்​தி​ய​தாக செய்​தி​கள் வெளியாகி உள்​ளன.

bud_AU

மெல்பேர்ண் விஹாரையில் சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை; இலங்கைப் பௌத்த துறவிக்கு 13 ஆண்டுகள் சிறை

October 10, 2026

மெல்பேர்ண் நகரில் உள்ள பௌத்த விஹாரை ஒன்றில் 6 இளம் சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை இழைத்த குற்றத்திற்காக, இலங்கையைச் சேர்ந்த

is

இந்திய பைலட் ஸ்மித் மச்சாருக்கு இஸ்ரேல் அரசின் வீரதீர விருது

October 10, 2026

விமான கடத்​தலை தடுத்த இந்திய பைலட் ஸ்மித் மச்​சா​ருக்கு உலகம் முழு​வ​தி​லும் இருந்து பாராட்​டுக்​கள் குவிந்து வரு​கின்​றன. இந்​நிலை​யில் இஸ்ரேல்