தவெக கூட்டணி அரசின் முதல் பட்ஜெட்: 2036-க்குள் 1.5 டிரில்லியன் டாலர் பொருளாதார இலக்கு; பெண்கள், மாணவர்கள், இளைஞர்களுக்கு புதிய திட்டங்கள்

சென்னை:

“2036 ஆம் ஆண்டிற்குள் தமிழ்நாட்டை 1.5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்றுவதே இலக்கு” என்ற அறிவிப்புடன், பெண்கள், மாணவர்கள், இளைஞர்கள், விளிம்புநிலை மக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருக்கான புதிய நலத்திட்டங்கள் மற்றும் டெண்டர் நடைமுறைகளில் சீர்திருத்தங்களை உள்ளடக்கிய 2026–2027 ஆம் நிதியாண்டிற்கான தமிழ்நாடு அரசின் முதல் முழுமையான திருத்தப்பட்ட பொது பட்ஜெட் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.

முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான தவெக கூட்டணி அரசின் முதல் பட்ஜெட் என்பதால் பெரும் எதிர்பார்ப்பு நிலவிய நிலையில், நிதியமைச்சர் மரிய வில்சன் இன்று காலை 10 மணிக்கு சட்டப்பேரவையில் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

மாநிலத்தின் ரூ.13.18 லட்சம் கோடி ஒட்டுமொத்தக் கடன் சுமைக்கு மத்தியிலும், பெண்கள், மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் விளிம்புநிலை மக்களை மையமாகக் கொண்டு பல்வேறு புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டன.

மகளிர் நலத் திட்டங்கள்

தவெக-வின் தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றான ‘அண்ணன் சீர் திட்டம்’ கீழ், ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பங்களைச் சேர்ந்த பெண்களுக்கு திருமண உதவியாக 8 கிராம் தங்க நாணயம் மற்றும் ஒரு பட்டுப்புடவை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்காக ரூ.812 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

‘தாய் மாமன் தங்க மோதிரத் திட்டம்’ மூலம் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் முதலமைச்சரின் அன்பளிப்பாக 1 கிராம் தங்க மோதிரம் வழங்கப்படும். இந்தத் திட்டம் செப்டம்பர் 15, 2026 முதல் அமலுக்கு வரவுள்ளதாகவும், ரூ.560 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின பெண் விவசாயத் தொழிலாளர்களை நில உரிமையாளர்களாக மாற்றும் நோக்கில் ‘மண்ணின் மகள் திட்டம்’ அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பெண்கள் விவசாய நிலம் வாங்க நிதியுதவி வழங்கப்படுவதோடு, முத்திரைத்தாள் மற்றும் பதிவுக் கட்டணத்தில் 100 சதவீத விலக்கும் அளிக்கப்படும். இதற்காக ரூ.300 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

கிராமப்புற மற்றும் பின்தங்கிய பகுதிகளைச் சேர்ந்த கர்ப்பிணிப் பெண்களுக்காக ரூ.23 கோடி செலவில் ‘தாய் கேர்’ இல்லங்கள் அமைக்கப்படும்.

மருத்துவம் மற்றும் முதியோர் நலம்

மூத்த குடிமக்களுக்கான மருத்துவ சேவையை மேம்படுத்தும் வகையில், முதற்கட்டமாக 1,000 நடமாடும் முதியோர் சிகிச்சை மையங்கள் அறிமுகப்படுத்தப்படும். மருத்துவர், செவிலியர் மற்றும் பிசியோதெரபிஸ்ட் அடங்கிய குழுவினர் கிராமங்களுக்கு நேரடியாகச் சென்று மருத்துவப் பரிசோதனை மற்றும் மருந்துகளை வழங்குவர். இதற்காக ரூ.33 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

கல்வி மற்றும் மாணவர் நலம்

பள்ளிக் கல்வித் துறைக்கு ரூ.44,567 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அரசு மற்றும் கல்லூரி மாணவர் விடுதிகளை நவீனப்படுத்த ரூ.3,200 கோடி மதிப்பீட்டில் ‘டிஎன்-சுடர் திட்டம்’ செயல்படுத்தப்படும். இதன் கீழ் 1 லட்சம் மாணவர்களுக்கான வசதியுடன் 200 ஒருங்கிணைந்த விடுதிகள் கட்டப்படவுள்ளன. மேலும், ரூ.10 கோடி தொடக்க மூலதனத்துடன் ‘தமிழ்நாடு மாணவர் விடுதிகள் மற்றும் உள்கட்டமைப்பு கழகம்’ அமைக்கப்படும்.

மாநிலம் முழுவதும் 10,000 அரசுப் பள்ளிகளின் உள்கட்டமைப்பு, தூய்மை, கழிப்பறை வசதி மற்றும் பாதுகாப்பை மேம்படுத்த ‘சூப்பர் கிளீன், சூப்பர் கேம்பஸ்’ திட்டத்திற்கு ரூ.139 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

அண்ணல் அம்பேத்கர் வெளிநாட்டு உயர்கல்வி உதவித்தொகைத் திட்டம் மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு அதிகபட்சமாக ரூ.36 லட்சம் வரை உதவித்தொகை வழங்கப்படும். நடப்பாண்டில் 362 மாணவர்கள் பயனடையும் வகையில் ரூ.131 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படுவதற்காக ரூ.710 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

கல்லூரி மாணவர்களுக்கு புதிய மடிக்கணினிகள் வழங்கும் ‘வெற்றி லேப்டாப் திட்டத்திற்கு’ ரூ.2,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு

13 லட்சம் இளைஞர்களுக்கு தொழிற்துறை சார்ந்த திறன் பயிற்சி வழங்க ‘வெற்றி திறன் பயிற்சித் திட்டம்’ தொடங்கப்படுகிறது.

முன்னணி அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுடன் இணைந்து 20,000 இளைஞர்களுக்கு ஊதியத்துடன் கூடிய இன்டர்ன்ஷிப் வழங்கப்படும்.

விளையாட்டு மற்றும் இளைஞர் நலத் துறைக்கான நிதி ரூ.572 கோடியிலிருந்து ரூ.1,051 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இதில் 10 ஒலிம்பிக் பயிற்சி மையங்களுக்கு ரூ.50 கோடியும், 8 முதல் 12 வயது குழந்தைகளுக்கான விளையாட்டுத் திறனாய்வு திட்டத்திற்கு ரூ.5 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

உள்கட்டமைப்பு மற்றும் சுற்றுச்சூழல்

அடுத்த ஐந்து ஆண்டுகளில் 20,000 பொது மின்சார வாகன சார்ஜிங் நிலையங்களை அமைக்கும் இலக்குடன், நடப்பு ஆண்டில் ரூ.50 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. குடியிருப்புப் பகுதிகளில் சார்ஜிங் மையங்களை அமைக்க ரூ.5 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் மற்றும் கன்னியாகுமரி உள்ளிட்ட 8 கடலோர மாவட்டங்களில் 2,500 ஹெக்டேர் பரப்பளவில் புதிய சதுப்புநில அலையாத்திக் காடுகள் உருவாக்கப்படும்.

பனைத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த ரூ.16 கோடி செலவில் பனை மேம்பாட்டு கழகம் மீண்டும் செயல்படுத்தப்படும்.

திருப்பூரில் சுற்றுச்சூழலுக்கு உகந்த நீடித்த ஆடைகள் உற்பத்திக்கான டெக்ஸ்டைல் டெக்னாலஜி மையம் அமைக்கப்படும்.

முதன்முறையாக ஹஜ் புனித யாத்திரை மேற்கொள்ளும் இஸ்லாமியப் பயணிகளுக்கான மானியம் ரூ.35,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. சிறுபான்மையினர் கல்வி மற்றும் நலனுக்காக ரூ.1,700 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

மூன்றாம் பாலினத்தவர்களுக்காக 5 மாவட்டங்களில் ‘அரண்’ காப்பகங்கள் மற்றும் 15 மாவட்டங்களில் குறுகிய காலத் தங்குமிடங்கள் அமைக்கப்படும்.

நிதி மேலாண்மை மற்றும் டெண்டர் சீர்திருத்தங்கள்

அரசுப் பொதுத்துறை நிறுவனங்களின் கடன்களையும் சேர்த்து தமிழ்நாட்டின் ஒட்டுமொத்தக் கடன் ரூ.13.18 லட்சம் கோடியாக உள்ளதாக பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டது.

நடப்பு நிதியாண்டில் மாநிலத்தின் மொத்த வருவாய் ரூ.3,44,575 கோடியாகவும், மொத்த செலவினம் ரூ.4,67,264 கோடியாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது.

போட்டியற்ற டெண்டர் நடைமுறைகள் நீக்கப்பட்டு, ஒப்பந்ததாரர்களுக்கான தேவையற்ற சான்றிதழ் விதிமுறைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதன் மூலம் டெண்டர் முறைகேடுகளைத் தடுத்து அரசுக்கு ரூ.15,000 கோடி கூடுதல் வருவாய் ஈட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் தெரிவித்தார்.

சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் கட்டிட அனுமதி வழங்கும் அதிகாரங்கள் பரவலாக்கப்பட்டு, அனுமதி வழங்கும் செயல்முறைகளில் இருந்த ஊழல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இடம்பெறாத முக்கிய அறிவிப்புகள்

மாநிலத்தின் கடன் சுமையை கருத்தில் கொண்டு, குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.2,500 வழங்கும் மகளிர் உரிமைத் தொகை, ஆண்டுக்கு 6 இலவச சிலிண்டர்கள், வேலையில்லாத இளைஞர்களுக்கான மாதாந்திர உதவித்தொகை மற்றும் அனைத்து அரசுப் பேருந்துகளிலும் மகளிருக்கு இலவசப் பயணம் உள்ளிட்ட தேர்தல் வாக்குறுதிகள் இந்தப் பட்ஜெட்டில் இடம்பெறவில்லை.

2 மணி 30 நிமிட பட்ஜெட் உரை

காலை 10.01 மணிக்கு தனது பட்ஜெட் உரையைத் தொடங்கிய நிதியமைச்சர் மரிய வில்சன், மதியம் 12.31 மணிக்கு உரையை நிறைவு செய்தார். மொத்தம் 2 மணி 30 நிமிடங்கள் பட்ஜெட் உரை வாசிக்கப்பட்டது.

இதையடுத்து சட்டப்பேரவை ஒத்திவைக்கப்பட்டதாக சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் அறிவித்தார்.

Sajith-Premadasa-2 (1)

1983 கறுப்பு ஜூலை நிகழ்வானது நமது நாட்டின் அரசியல் வரலாற்றில் ஒரு கறுப்புப் புள்ளியாகும்  

October 10, 2026

1983 கறுப்பு ஜூலை நிகழ்வானது நமது நாட்டின் அரசியல் வரலாற்றில் ஒரு கறுப்புப் புள்ளியாகும். இச்சம்பவத்தினால் அநீதிக்குள்ளான தமிழ் சமூகத்திடம்

trum

நோபல் பரிசுக்கான அத்தனை தகுதியும் தனக்கு இருப்பதாக ட்ரம்ப் கருத்து

October 10, 2026

“அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தான் 2026-ம் ஆண்டுக்கான நோபல் அமைதி பரிசைப் பெறுவதற்கான அத்தனை தகுதிகளும் உள்ளது. ஆனால்

WhatsApp Image 2026-10-06 at 23.09.24

Majestic Asian உணவுத் திருவிழா!

October 10, 2026

Scarborough-வில் இன்று தொடக்கம் நடைபெறவுள்ள Majestic Asian Food Festival-இல் மறக்க முடியாத உணவுத் திருவிழாவில் கலந்து மகிழ்ந்து களிப்பாகக்

1200-675-27836231-thumbnail-16x9-vaiko

“கமிஷன், கலெக்ஷன் என்ற பேச்சுக்கே இடமில்லை என்பதை உறுதிப்படுத்திய இடைத்தேர்தல் முடிவு!” – வைகோ அதிரடி!

October 10, 2026

சென்னை: தமிழகத்தில் கமிஷன், கலெக்ஷன் என்ற பேச்சுக்கு இடமில்லை என்பதை தவெகவின் வெற்றி உறுதிப்படுத்தியுள்ளதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

1200-675-27342147-thumbnail-16x9-anbumani

“அ.தி.மு.க கூட்டணியில் இருந்து விலகலா? ‘அரசியலில் எதுவேணா நடக்கலாம்’” – பா.ம.க அன்புமணி ராமதாஸ் சூசகம்!

October 10, 2026

கோயம்புத்தூர்: பாமக கூட்டணி குறித்து மறுபரிசீலனை செய்யப்படும் என்றும், அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம் எனவும் பாமக தலைவர் அன்புமணி

anojan

அனோஜன் தொடர்பில் பொலிஸார் விசேட அறிவிப்பு

October 10, 2026

சவூதி அரேபியாவில் மரண தண்டனைத் தீர்ப்பை எதிர்கொண்டுள்ள சிவராசா அனோஜன் தொடர்பான தேவையற்ற கருத்து பரிமாற்றங்கள் தொடர்பில் கல்முனை தலைமையகப்

can

கனடாவைச் சேர்ந்த பாட்டி புதிய உலக சாதனை

October 10, 2026

கனடாவைச் சேர்ந்த 61 வயது வீராங்கனை டோனாஜீன் வைல்ட் (DonnaJean Wilde), அமெரிக்காவின் உடாவில் நடைபெற்ற உலக சீனியர் விளையாட்டுப்

cyb

போலி சமூக ஊடக கணக்குகள் மீது கடும் நடவடிக்கை

October 10, 2026

தேசிய மற்றும் சர்வதேச மட்டங்களில் போலியான முகநூல் (Facebook) கணக்குகளைத் தயாரித்து, சமூக வலைத்தளங்கள் ஊடாக இனங்களுக்கிடையில் முரண்பாடுகளை ஏற்படுத்தும்

rus

உக்ரைனின் எதிர்ப்புக்கு மத்தியில் ரஷ்யாவிடம் இருந்து டீசல் கொள்முதல் செய்ய அமெரிக்கா முடிவு!

October 10, 2026

அமெரிக்காவில் அதிகரித்து வரும் எரிபொருள் விலையைக் கட்டுப்படுத்தும் நோக்கில், ரஷ்யாவிடம் இருந்து அதிகளவில் டீசல் கொள்முதல் செய்வதற்கு அமெரிக்க ஜனாதிபதி

sau

ஹவுதி இலக்குகள் மீது பாகிஸ்தான் வான்வழி தாக்குதல்

October 10, 2026

மெக்கா ஒப்​பந்​தத்​தின்​படி ஏமனில் உள்ள ஹவுதி இலக்​கு​களை குறி​வைத்து பாகிஸ்தான் போர் விமானங்கள் தாக்​குதல் நடத்​தி​ய​தாக செய்​தி​கள் வெளியாகி உள்​ளன.

bud_AU

மெல்பேர்ண் விஹாரையில் சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை; இலங்கைப் பௌத்த துறவிக்கு 13 ஆண்டுகள் சிறை

October 10, 2026

மெல்பேர்ண் நகரில் உள்ள பௌத்த விஹாரை ஒன்றில் 6 இளம் சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை இழைத்த குற்றத்திற்காக, இலங்கையைச் சேர்ந்த

is

இந்திய பைலட் ஸ்மித் மச்சாருக்கு இஸ்ரேல் அரசின் வீரதீர விருது

October 10, 2026

விமான கடத்​தலை தடுத்த இந்திய பைலட் ஸ்மித் மச்​சா​ருக்கு உலகம் முழு​வ​தி​லும் இருந்து பாராட்​டுக்​கள் குவிந்து வரு​கின்​றன. இந்​நிலை​யில் இஸ்ரேல்