தமிழ் சட்டத்தரணிகள் பேரவை கூட்டத்திற்குச் செல்லாதமை குறித்து கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

கஜேந்திரகுமார் எம். பி தமிழ் கட்சிகளின் ஒன்றிணைவு தொடர்பில் தமிழ் சட்டத்தரணிகள் பேரவையில் எடுக்கப்பட்ட தீர்மானங்களை மீறி ஒருதலைப் பட்சமாக இடம்பெறும் செயற்பாடுகள் காரணமாக குறித்த கூட்டத்திலிருந்து வெளியேறியதாக நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

நேற்று(07.05.2026) கொழும்பில் இடம்பெற்ற தமிழ் மக்களுக்கான தீர்வு விடயங்களில் தமிழ் தேசிய கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையிலான கலந்துரையாடலுக்கு செல்லாமை தொடர்பில் அவரிடம் தொடர்பு கொண்டு கேட்ட போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் குறிப்பிடுகையில்,

தமிழ் மக்களின் தீர்வு விடயங்களில் தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என விரும்பி அதற்கான செயல்பாடுகளை கடந்த பெப்ரவரி மாதம் யாழ்ப்பாணத்தில் மேற்கொண்டோம்.

தமிழரசுக் கட்சி உட்பட தமிழ் தேசியம் சார்ந்த கட்சிகள் பொது அமைப்புக்கள் மற்றும் தமிழ் சட்டத்தரணிகள் சங்கத்திற்கும் குறித்த அழைப்பை விடுத்தோம்.

ஆனால் துரதிஷ்டவசமாக தமிழரசுக் கட்சியும் தமிழ் சட்டத்தரணிகள் பேரவையும் குறித்த கலந்துரையாடலில் கலந்து கொள்ளாத நிலையில், சட்டத்தரணிகள் பேரவை தாங்கள் கொழும்பில் கலந்துரையாடல் ஒன்று ஏற்பாடு செய்யப் போவதாகவும் அதில் கலந்து கொள்ளுமாறும் தெரிவித்தார்கள்.

தமிழ் மக்களின் தீர்வு விடயத்தில் தமிழ் தேசியம் சார்ந்த கட்சிகள் ஒற்றுமையுடன் பயணிக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக கொழும்பில் தமிழ் சட்டத்தரணிகள் பேரவை ஏற்பாடு செய்த கலந்துரையாடலுக்கு சென்றோம்.

நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவம் செய்யும் கட்சி என்ற வகையில் அகில இலங்கை தமிழ் காங்கிரசின் பிரதிநிதிகள் மூவர் கலந்து கொள்ளலாம் என முதல் அழைப்பு கிடைத்தது சென்றோம்.

குறித்த கலந்துரையாடலில், தமிழரசுக் கட்சி சுமந்திரன் நிபுணர் குழு சார்பில் இருவரை அழைப்பதற்கு தீர்மானம் எடுக்க வேண்டும் என பெயர்களை குறிப்பிட்டு அனுமதி கேட்டிருந்தார்.

அதற்கு நாங்கள் சம்மதம் தெரிவிக்கவில்லை கூட்டத்துக்கான அழைப்பு நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் தேசியம் சார்ந்த கட்சிகள் பங்குபெற்றல் என குறிப்பிடப்பட்டது என தெரிவித்துள்ளார்.

va.

தமிழ்த் திரையுலகில் எனக்கும் விஜய்க்கும் இடையே போட்டி பொறாமை இருக்கிறது – அஜித்

October 11, 2026

தமிழ்த் திரையுலகில் அஜித்–விஜய் இருவரும் நீண்டகாலமாக போட்டி நடிகர்களாக ரசிகர்களால் பார்க்கப்பட்டு வருகின்றனர். இருவரும் ஆரம்பகாலத்தில் ‘ராஜாவின் பார்வையிலே’ திரைப்படத்தில்

sig

சிக்மா திரைப்படம் நஷ்டமா?

October 11, 2026

நடிகர் விஜய், அரசியல் கட்டி துவங்கி தேர்தலில் போட்டியிட்டு இப்போது முதலமைச்சராகிவிட்டார். இதனால் விஜய் சினிமா பக்கமே வருவதில்லை, அவரின்

na

ஹீரோக்களுக்கு நிகரான சம்பளம் வாங்கும் நடிகை

October 11, 2026

சமூக வலைதளங்களில் திரை நட்சத்திரங்களின் புகைப்படங்கள் அவ்வப்போது வைரலாவது வழக்கம். அந்த வகையில், தென்னிந்தியத் திரையுலகின் முன்னணி நடிகையான நயன்தாராவின்

3

இந்தியன் 3 படத்தின் புதிய அப்டேட்

October 11, 2026

பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கமல் ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள இந்தியன் 3 திரைப்படத்தின் அப்டேட்டை லைகா நிறுவனம் தற்போது

sa

சவூதி விமான நிலைய தாக்குதலில் வௌிநாட்டவர்கள் உட்பட 12 பேர் பலி!

October 11, 2026

சவூதி அரேபியாவின் தலைநகர் ரியாதில் உள்ள மன்னர் காலித் சர்வதேச விமான நிலையத்தின் பயணிகள் அமரும் முனையப் பகுதி மீது

thriuvu

திருவள்ளுவர் பண்பாட்டு மைய நம்பிக்கைப் பொறுப்பு நிதியச் சபையின் முதலாவது கூட்டம்

October 11, 2026

யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தை எதிர்காலத்தில் முறையாக நிர்வகித்து, அதன் செயற்பாடுகளைத் திட்டமிட்ட வகையில் முன்னெடுப்பதற்காக அமைச்சரவையின் அனுமதியுடன் உருவாக்கப்பட்டுள்ள

ind

Toronto இந்தியத் துணைத் தூதரகத்தால் ‘கனடாவில் இந்தியப் பெண்களுக்கு அதிகாரத்தை வழங்குதல்’ கருத்தரங்கு

October 11, 2026

கனடாவில் உள்ள இந்தியப் பெண்களுக்குக் கிடைக்கும் ஆதரவு வழிமுறைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, பெண்கள், சமூக அமைப்புகள், சட்ட மற்றும்

nav

‘தீமையின் மீது நன்மை பெற்ற வெற்றி’ – இன்று ஆரம்பிக்கிறது நவராத்திரி விரதம்!

October 11, 2026

இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான நவராத்திரி விரதம் இன்று (11) தொடங்குகிறது. நவராத்திரியின் முதல் மூன்று நாட்களும் அம்பிகையை துர்க்கையாக,

ch

சீனத் தூதுவர் – விஜித ஹேரத் சந்திப்பு

October 11, 2026

இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் ஏற்படுத்தப்பட்டு 70 ஆண்டுகள் நிறைவடைவதையும், இரு நாடுகளுக்கும் இடையிலான இறப்பர் – அரிசி

sm

புகையை வெளியேற்றும் வாகனங்களை கண்டறிவதற்கு புகைப்படப் பிரிவு

October 11, 2026

அதிகளவில் புகையை வெளியேற்றும் வாகனங்களைக் கண்டறிவதற்காக, மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் வாகனப் புகை பரிசோதனைத் திட்டத்தின் கீழ் விசேட புகைப்படப்

acci main

மெட்ரோ பஸ்ஸுடன் மோதிய குற்றச்சாட்டில் பஸ் சாரதி கைது

October 11, 2026

கொழும்பு – கெஸ்பேவ வீதியில், மிரிஸ்வத்த பகுதியில் மெட்ரோ பஸ்ஸுடன் வேண்டுமென்றே மோதியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில், 44 வயதுடைய

chow

சௌவின் முன்னிலையை நெருங்கும் பிரட்போர்ட்: புதிய கருத்துக்கணிப்பு

October 11, 2026

செப்டம்பர் இறுதிப் பகுதியில் வெளியிடப்பட்ட முந்தைய கருத்துக்கணிப்புடன் ஒப்பிடுகையில் சௌவின் முன்னிலை 6 புள்ளிகளிலிருந்து 2.9 புள்ளிகளாகக் குறைந்துள்ளது. ரொறன்ரோ