தமிழகச் சட்டமன்றத் தேர்தல்; 164 சொத்து விவரப் பட்டியலுடன் பெண் வேட்பாளர்

தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் லால்குடி தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் லீமா ரோஸ், தற்போது தமிழகத்தின் மிகவும் பணக்கார பெண் வேட்பாளராக உருவெடுத்துள்ளார். மார்ட்டின் குழுமத்தின் இயக்குநராக இருக்கும் 58 வயதான இவர், தனது வேட்புமனுவுடன் தாக்கல் செய்துள்ள சொத்து விவரப் பட்டியல் மட்டும் 164 பக்கங்களைக் கொண்டுள்ளது.

இதுவரை தாக்கல் செய்யப்பட்டுள்ள வேட்புமனுக்களின் அடிப்படையில், கோடீஸ்வர வேட்பாளர்கள் பட்டியலில் இவர் முதலிடத்தைப் பிடித்துள்ளார். சமூகப் பணி மற்றும் இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றுள்ள இவர், பெரும் சொத்துக்களுக்கு அதிபதியாக இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

லீமா ரோஸின் பிரமாணப் பத்திரத்தின்படி, அவருக்கு மட்டும் ரூ.139.63 கோடி மதிப்பிலான அசையும் சொத்துக்களும், ரூ.909.94 கோடி மதிப்பிலான அசையா சொத்துக்களும் உள்ளன. ஒட்டுமொத்தமாக இவரது பெயரில் மட்டும் சுமார் 1000 கோடி ரூபாய்க்கும் அதிகமான சொத்துக்கள் உள்ளன. இது தவிர, இவரது கணவர் பெயரில் ரூ.3,262 கோடி அசையும் சொத்துக்களும், ரூ.887.36 கோடி அசையா சொத்துக்களும் இருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. கணவன் – மனைவி இருவரின் மொத்த சொத்து மதிப்பு பல ஆயிரம் கோடிகளைத் தாண்டுவது தேர்தல் அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

தங்கம் மற்றும் வைர நகைகளிலும் லீமா ரோஸ் பிரம்மாண்டமான முதலீடுகளை வைத்துள்ளார். இவரது பெயரில் மட்டும் 19 கிலோ தங்கம், 1,217 கேரட் வைரம், 13 கிலோ வெள்ளி மற்றும் 33 கிராம் பிளாட்டினம் உள்ளது. இவரது கணவர் பெயரில் 281 கிராம் தங்கம், 9.83 கேரட் வைரம், 21 கிலோ வெள்ளி மற்றும் 321 கிராம் மதிப்பிலான முத்துக்கள் உள்ளன. கையில் ரொக்கமாக லீமா ரோஸ் ரூ.5.52 லட்சமும், அவரது கணவர் ரூ.56.48 லட்சமும் வைத்துள்ளனர். இவ்வளவு பெரிய அளவிலான சொத்து விவரங்களைத் துல்லியமாகப் பட்டியலிட்டு அவர் தாக்கல் செய்துள்ளார்.

லால்குடி தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளராகக் களம் காணும் லீமா ரோஸ், தனது பிரம்மாண்ட சொத்துக்கள் மற்றும் கல்வித் தகுதியுடன் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

ஏற்கெனவே அத்தொகுதியில் மார்ட்டின் குழுமம் பல்வேறு சமூகப் பணிகளைச் செய்து வருவதால், அது தனக்கு வெற்றியைத் தேடித் தரும் என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இருப்பினும், எதிர்க்கட்சிகள் இந்தச் சொத்து மதிப்பைச் சுட்டிக்காட்டி விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன. வரும் ஏப்ரல் 23-ம் தேதி நடைபெற உள்ள தேர்தலில், இந்த ‘பணக்கார வேட்பாளர்’ அந்தஸ்து அவருக்குச் சாதகமாக அமையுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

fire

மூன்று மாடி வர்த்தகக் கட்டிடம் ஒன்றில் பாரிய தீ

April 22, 2026

கண்டி மெனிக்ஹின்ன நகரில் அமைந்துள்ள மூன்று மாடி வர்த்தகக் கட்டிடம் ஒன்றில், இன்று (ஏப்ரல் 22) அதிகாலை ஏற்பட்ட பயங்கர

hormuz60

ஹோர்முஸ் நீரிணையில் மூன்று சரக்குக் கப்பல்கள் மீது தாக்குதல்

April 22, 2026

ஈரானுடனான போர்நிறுத்தத்தை நீட்டிப்பதாக டொனால்ட் ட்ரம்ப் அறிவித்த சில மணிநேரங்களில், ஹோர்முஸ் நீரிணையில் மூன்று சரக்குக் கப்பல்கள் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன.

port cont

கொள்கலன் விவகார விசாரணை: முக்கிய அதிகாரிகள் சாட்சியமளிக்க எதிர்க்கட்சி கோரிக்கை

April 22, 2026

பரிசோதனையின்றி 323 கொள்கலன்கள் சர்ச்சைக்குரிய வகையில் விடுவிக்கப்பட்ட சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வரும் நாடாளுமன்றக் குழுவின் முன் முக்கிய

namal

2.5 மில்லியன் டாலர் மோசடி: திறைசேரியின் கட்டுப்பாடு குறித்து நாமல் ராஜபக்ச கேள்வி

April 22, 2026

தவறான கொடுப்பனவு அறிவுறுத்தல்கள் மூலம் 2.5 மில்லியன் அமெரிக்க டாலர் இழப்பு ஏற்பட்டிருப்பது ஒரு சிறிய நிதித் தவறு அல்ல,

dea

“எதிர்காலத்திற்கு அடிவைப்போம்” மாற்றுத்திறனாளிகளுக்காக ’தாழ்தள’ பஸ் சேவை ஆரம்பம்

April 22, 2026

லங்கை பொதுப் போக்குவரத்துச் சேவையில் புதிய மைல்கல்லைக் குறிக்கும் வகையில், “எதிர்காலத்திற்கு அடிவைப்போம்” எனும் தொனிப்பொருளில், மாற்றுத்திறனாளிகள் மற்றும் விசேட

Dead

கிளிநொச்சியில் விபத்து: பாதசாரி உயிரிழப்பு

April 22, 2026

கிளிநொச்சி ஏ-9 பிரதான வீதியில் இடம்பெற்ற கோர விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணத்திலிருந்து கிளிநொச்சி நோக்கிப்

sel

இங்கிலாந்து பிறீமியர் லீக்: பிறைட்டனிடம் தோற்ற செல்சி

April 22, 2026

இங்கிலாந்து பிறீமியர் லீக்கில், பிறைட்டன் அன்ட் ஹொவ் அல்பியனின் மைதானத்தில் புதன்கிழமை (22) நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் 0-3 என்ற

photo-collage.png (16)

புயலால் பாதிக்கப்பட்ட கால்நடை இழப்புகளுக்கான இழப்பீடுகள் கிடைக்கவில்லை?

April 22, 2026

நாட்டில் ஏற்பட்ட ‘டிட்வா’ புயலால் பாதிக்கப்பட்ட தங்களுக்கு, அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட இழப்பீடுகள் உரிய முறையில் கிடைக்கவில்லை என மடு பிரதேச

sur

இலங்கையில் நடிகர் சூர்யா

April 22, 2026

தென்னிந்தியத் திரையுலகின் முன்னணி நடிகர் சூர்யா, செவ்வாய்க்கிழமை (21) அன்று காலை சென்னையிலிருந்து இலங்கைத் தலைநகர் கொழும்பிற்குப் பயணம் மேற்கொண்டார்.

theepachelvann

தீபச்செல்வனின் நூல்கள் தடுத்து வைக்கப்பட்டிருப்பதற்கு சோசலிச மக்கள் மன்றம் கண்டனம்

April 22, 2026

தமிழ் எழுத்தாளர் பிரதீபன் தீபச்செல்வனின் பல இலக்கியப் படைப்புகள் வாரக்கணக்கில் இலங்கை சுங்கத் திணைக்களத்தால் தடுத்து வைக்கப்பட்டிருப்பதைக் கண்டித்து, சோசலிச

vikatan_2025-12-31_ra6ig829_695495281b7e2

‘ஜனநாயகன்’ இணையத்தில் கசிந்த விவகாரம்: எடிட்டருக்கு முன் ஜாமீன் வழங்க தயாரிப்பு தரப்பு கடும் எதிர்ப்பு!

April 22, 2026

சென்னை, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் நடிப்பில், எச்.வினோத் இயக்கத்தில் உருவான ‘ஜனநாயகன்’ திரைப்படம் தணிக்கை சிக்கல்களுக்குப் பிறகு

gold

தங்கத்தின் விலையில் மாற்றம்!

April 22, 2026

கடந்த சில நாட்களாக இலங்கையில் தொடர்ந்து உச்சத்திலிருந்து வந்த தங்கத்தின் விலை இன்று (22) வீழ்ச்சியடைந்துள்ளது. நேற்றுடன் (21) ஒப்பிடுகையில்