வீடற்றோர் நிலை, போதைப்பொருள் விற்பனை மற்றும் வன்முறை குறித்த கவலைகள் அப்பகுதி மக்களிடையே முக்கியப் பிரச்சினைகளாக இருந்தன. டேனியல் டேட் மூன்றாம் இடத்தைப் பிடித்தார்.
வீட்டுவசதி ஆதரவாளரான (Housing Advocate) கர்ரன் ஸ்டிகட்ஸ் (Curran Stikuts), டொராண்டோ சென்டர் (Toronto Centre) தொகுதிக்கான நகரசபை இடத்தைக் கைப்பற்றியுள்ளார். கோடைகாலத்தில் முற்போக்கு வாக்காளர்களின் ஆதரவைத் திரட்டிய இவர், தற்போதைய கவுன்சிலரான கிறிஸ் மோயஸை (Chris Moise) வீழ்த்தியுள்ளார்.
மொத்தமுள்ள 78 வாக்குப்பதிவு மையங்களின் முடிவுகள் வெளியாகிய நிலையில், எண்ணப்பட்ட 41,498 வாக்குகளில் கர்ரன் ஸ்டிகட்ஸ் 11,877 வாக்குகளைப் பெற்று முன்னிலை பெற்றார். கிறிஸ் மோயஸ் 9,690 வாக்குகளுடன் இரண்டாம் இடத்தையும், டேனியல் டேட் (Daniel Tate) 6,288 வாக்குகளுடன் மூன்றாம் இடத்தையும் பிடித்தனர்