டுபாய் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளில் பதுங்கியிருக்கும் இலங்கையைச் சேர்ந்த பல குற்றவாளிகள் கைது

டுபாய் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளில் பதுங்கியிருக்கும் குற்றவாளிகளைக் கைது செய்வதற்காக அந்த நாட்டு பாதுகாப்புப் படையினர் முன்னெடுத்துள்ள விசேட நடவடிக்கைகளின் போது, இலங்கையைச் சேர்ந்த பல குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்படும் இலங்கை குற்றவாளிகளை நாட்டுக்கு அழைத்து வருவதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இலங்கையில் இடம்பெறும் பெரும்பாலான குற்றச் செயல்கள் டுபாய் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளில் பதுங்கியிருக்கும் இலங்கை குற்றவாளிகளாலேயே வழிநடத்தப்படுவதாக பாதுகாப்புப் படையினர் கண்டறிந்துள்ளனர்.

அவர்கள் ஈரானில் உள்ள போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நேரடித் தொடர்புகளைப் பேணி இலங்கைக்கு போதைப்பொருட்களை அனுப்பி வைப்பது கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின் போது தெரியவந்துள்ளது.

இதற்கமைய, வெளிநாடுகளில் இருக்கும் இலங்கை குற்றவாளிகளுக்கு எதிராக சிவப்பு எச்சரிக்கை (Red Notice) விடுக்கப்பட்டிருந்த போதிலும், அவர்களைக் கைது செய்ய அந்த நாட்டு அதிகாரிகள் கடந்த காலங்களில் நடவடிக்கை எடுத்திருக்கவில்லை.

எவ்வாறாயினும், தற்போது ஈரான் மத்திய கிழக்கு பிராந்திய நாடுகள் மீது தாக்குதல்களை மேற்கொண்டு வருவதால், ஈரானிய குற்றவாளிகளுடன் தொடர்புகளைப் பேணும் நபர்களைக் கண்டறிய அந்த நாடுகள் விசேட நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸார் கூறுகின்றனர்.

இதன் விளைவாக, இலங்கையைச் சேர்ந்த பல குற்றவாளிகள் ஏற்கனவே மத்திய கிழக்கு நாடுகளில் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கைது செய்யப்பட்டவர்களில் படுவத்தே சாமர, மோதர நிபுன, பரேவி சுதா உள்ளிட்ட பல முக்கிய குற்றவாளிகள் இருப்பதாகத் தகவல்கள் வெளியான போதிலும், அவை இதுவரை உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை.

இது குறித்து தமக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்குமாறு இலங்கை பொலிஸார் மத்திய கிழக்கு நாடுகளிடம் பல கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.

இந்தக் கைது நடவடிக்கைகள் காரணமாக, தற்போது பல குற்றவாளிகள் மத்திய கிழக்கிலிருந்து ஐரோப்பிய நாடுகளுக்குத் தப்பிச் செல்ல முயற்சிப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன் விளைவாகவே, கடந்த சில நாட்களுக்கு முன்னர் ‘கரந்தெனிய சுத்தா’வின் சகோதரரான ‘ராஜூ’ என்பவர் இந்தியாவில் வைத்து கைது செய்யப்பட்டார். அவர் இன்று (17) இலங்கைக்கு அழைத்து வரப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, ‘கரந்தெனிய சுத்தா’வுடன் நெருங்கிய தொடர்பைப் பேணிய 30 வயதுடைய பெண் ஒருவர் காலி மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரிடமிருந்து 35 இலட்சம் ரூபாய் பணம் மற்றும் 99 கிராமுக்கும் அதிகமான தங்கம் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட பெண்ணின் கணவரை கரந்தெனிய சுத்தாவே கொலை செய்துள்ள நிலையில், அதன்பின்னர் அப்பெண் அவருடன் நெருங்கிய தொடர்பைப் பேணி வந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.

குறித்த பெண் கரந்தெனிய சுத்தாவுடன் வீடியோ அழைப்பில் (Video Call) பேசும் புகைப்படமும் கண்டறியப்பட்டுள்ளது.

இவர் கைது செய்யப்பட்டதை அடுத்து, அவரது தாயாரும் சகோதரரும் அப்பகுதியிலிருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தென் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் கித்சிறி ஜயலதின் மேற்பார்வையில், காலி பிராந்தியத்திற்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஏ. புஷ்பகுமாரவின் வழிகாட்டலில், காலி மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவின் பணிப்பாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் நாமல் பெரேரா தலைமையிலான குழுவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ssdfes

அம்பேத்கரின் சிந்தனைகளை யாராலும் தகர்க்க முடியாது – நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்

April 17, 2026

சாதி ஒழிப்புக்கு கல்வியை தவிர வேறு ஆயுதம் இல்லை என உயர் நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் பேசினார். மதுரை

kush

நடைபெறவுள்ள தேர்தலில் திமுகவுக்கு மிகப்பெரிய ஏமாற்றம் காத்திருக்கிறது – குஷ்பு

April 17, 2026

“இந்​தத் தேர்​தலில் திமுக-வுக்கு மிகப்​பெரிய ஏமாற்​றம் காத்​திருக்​கிறது. இது முதல்​வர் ஸ்டா​லின் மற்​றும் திமுக-​வில் உள்ள அனை​வ​ருக்​கும் நன்​றாக தெரி​யும்”

ann

தமிழகத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது – அண்ணாமலை

April 17, 2026

“தமிழகத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது. பாலியல் வன்கொடுமை அதிகரித்துள்ளது. சட்டம் ஒழுங்கை நினைவில் வைத்துக்கொண்டு வாக்களியுங்கள்,”

kan

மகளிர் இட ஒதுக்கீட்டை எதிர்க்கவில்லை – மக்களவையில் கனிமொழி

April 17, 2026

“மகளிர் இட ஒதுக்கீட்டை எதிர்க்கவில்லை. ஆனால், அதனை கேடயமாக வைத்து, தொகுதி மறுவரையறை செய்ய உள்ளீர்கள். பிரதமர் மோடியும், உள்துறை

wa

ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டேர்க் கை சந்தித்தார் இலங்கையின் ஐ.நா தூதுவர்

April 17, 2026

ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைப் பிரதிநிதியும் தூதுவருமான சுமித் தஸநாயக்க, ஐநா மனித உரிமைகள் உயர் ஆணையாளர் வோல்கர் டேர்க்

Education

கல்வி அமைச்சு விசேட அறிவிப்பு

April 17, 2026

2026ஆம் ஆண்டிற்கான முதலாம் தர கல்விச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்தும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இது

mak

வெலிக்கடை சிறைச்சாலையில் பிள்ளையானை வைத்திருப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து உண்ணாவிரதப் போராட்டம்!

April 17, 2026

பிள்ளையானின் சிறைவாசத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து கட்சித் தொண்டர்கள் கறுப்புப் பட்டியால் வாயைக் கட்டி அமைதியான முறையில் உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

sss

தெதுரு ஓயாவில் மூழ்கி காணாமல் போன அறுவரின் சடலங்கள் மீட்பு

April 17, 2026

கொபேகனே (Kobeigane), குராட்டியகஹமுல பகுதியில் உள்ள தெதுரு ஓயாவில் நீராடச் சென்றபோது நீரில் அடித்துச் செல்லப்பட்டவர்களில் அறுவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

jud

யாழ்.பல்கலைக்கழக விரிவுரையாளர் படுகொலை – வழக்குவிசாரணை ஒத்திவைப்பு

April 17, 2026

யாழ்ப்பாண பல்கலைக்கழக சித்த மருத்துவ பீட மூத்த விரிவுரையாளர் தயாளனி திலீபன் படுகொலை செய்யப்பட்ட வழக்கு தொடர்பான மரண விசாரணை

arres

புன்னாலைக்கட்டுவானில் வன்முறையில் ஈடுபடுவதற்கு ஆயுதங்களுடன் காத்திருந்த மூவர் கைது

April 17, 2026

யாழ்ப்பாணம், புன்னாலைக்கட்டுவான் பகுதியில் நபர் ஒருவர் மீது தாக்குதல் நடத்துவதற்காக கூரிய ஆயுதங்களுடன் காத்திருந்த வன்முறை கும்பலைச் சேர்ந்த மூவரை

photo-collage.png (9)

சர்ச்சைக்குரிய தையிட்டி விகாரை காணியை அளவீடு செய்ய அனுமதிக்க மாட்டேன் – விகாராதிபதி

April 17, 2026

தையிட்டி விகாரை அமைந்துள்ள காணிகளை அளவீடு செய்வதனை தடுத்து நிறுத்த கோரி விகாராதிபதி பலாலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

ca

பிரதான வீதியில் சென்றுகொண்டிருந்த கார் பள்ளத்தில் வீழ்ந்து; ஒருவர் பலி மூவர் காயம்

April 17, 2026

ஹட்டன் – பொகவந்தலாவை பிரதான வீதியில் சென்றுகொண்டிருந்த கார் ஒன்று, சென் ஜோன் டிலரி பகுதியில் வீதியை விட்டு விலகி