மதுரை:
திருச்சி பீமாநகர் செடல் மாரியம்மன் கோவில் வைகாசி தேர்த்திருவிழாவிற்கு அனுமதி கோரிய வழக்கை விசாரித்த மதுரை ஐகோர்ட்டு கிளை, கோவில் திருவிழாக்கள் தொடர்பாகப் பல்வேறு முக்கிய வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது. நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வு இந்த மனுவை இன்று விசாரித்தது.
அப்போது பேசிய நீதிபதி, “கோவில் திருவிழாக்களில் ஜாதி, மத பேதமின்றி அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். யாருக்கும் தனிப்பட்ட முறையில் சிறப்புச் சலுகைகள் வழங்கக் கூடாது” என்று உத்தரவிட்டார். மேலும், திருவிழாக் காலங்களில் உருவாகும் திடக்கழிவுகள் மற்றும் சுகாதாரச் சீர்கேடுகள் குறித்து யாரும் கவலை கொள்வதில்லை என்று அதிருப்தி தெரிவித்த அவர், திருவிழா நடைபெறும் இடங்களில் போதிய எண்ணிக்கையில் தற்காலிகக் குப்பைத் தொட்டிகள் அமைக்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தினார். குறிப்பாக, தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களைக் கோவில் திருவிழாக்களில் பயன்படுத்துவதை முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும் என்றும் நீதிபதி தனது உத்தரவில் திட்டவட்டமாகக் குறிப்பிட்டுள்ளார்.
#MaduraiHighCourt #TempleFestival #SocialEquality #JusticeBharathaChakravarthy #EnvironmentalProtection #NoPlastic #TrichyNews #MaduraiBench #LegalNews #TamilNaduGovernment #BreakingNews #May2 #SanitationFirst #TempleTradition #EcoFriendlyFestival #HighCourtOrder #SocialHarmony #TamilNaduUpdate_