ஜனாதிபதியின் பயணத்திற்காக ஒதுக்கப்பட்டிருக்கும் உலங்குவானூர்தி தொடர்பில் வெளிவந்துள்ள அதிர்ச்சி தகவல்கள்..

 

இலங்கை விமானப்படையில் இருக்கும் MI-171 உலங்குவானூர்திகளில் (Helicopter) VIP பயன்பாட்டிற்காக அதாவது ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க பயணிக்கும் உலங்குவானூர்தியின் பறக்கும் காலம் (Flying Hours) அனைத்தும் முடிந்துவிட்டன (Expired).

 

அதாவது அதன் பறக்கவிடக்கூடிய அனுமதித்த கால எல்லைகள் அனைத்தும் தாண்டிவிட்டன இது மிகவும் ஆபத்தான நிலைமையாகும் என புலனாய்வு பத்திரிகையாளர் இலங்கை விமானப்படையின் முன்னாள் உளவுத்துறை அதிகாரியுமான கீர்த்தி ரத்நாயக்க வலையொளி தளமொன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியில் இதனை குறிப்பிட்டுள்ளார்.அவர் குறிப்பிட்ட விடயங்கள்.

பைலட்கள் ‘ஐஸ் போதைப் பாவனை
பாதுகாப்பு இராஜாங்க அமைச்சருக்குக் கூட தெரியாமல் ஜனாதிபதி அநுரகுமார பயணம் செய்த உலங்குவானூர்தி பைலட்கள் ‘ஐஸ் போதைப்பொருள் பாவித்திருந்ததை நான்தான் கூறினேன்.

அதற்குப் பிறகு இரண்டு நாட்கள் கழித்து விமானப்படைத் தளபதி நேரடியாக வந்து அந்தச் செய்தி உண்மை என்று ஒப்புக்கொண்டார். இலங்கையில் மொத்தம் 22 MI-171 உலங்குவானூர்திகள் உள்ளன.

 

அவற்றில் தற்போது இயக்கத்தில் இருப்பது மூன்றே மூன்று மட்டும்தான். மீதமுள்ள 19 உலங்குவானூர்திகளும் பழுதடைந்துள்ளன. அந்த மூன்றில் ஒன்று VIP பயன்பாட்டிற்கானது. மற்றொன்று ஐக்கிய நாடுகள் சபையின் (UN) பணிக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

இன்னொன்று விமானப்படையால் பயன்படுத்தப்படுகிறது. ஆக மொத்தம் மூன்றே மூன்று மட்டும்தான் இயங்குகின்றன. இயக்கத்திலிருக்கும் அந்த மூன்றிலும் பறக்கவிடக்கூடிய அனுமதித்த கால எல்லைகள் அனைத்தும் தாண்டிவிட்டன. இதற்கு ஒரு கால நீடிப்பு வழங்கப்பட்டுள்ளது.

உண்மையில் அப்படி ஒரு கால நீடிப்பை வழங்கும் தொழில்நுட்ப வசதி எம்மிடம் இல்லை. டித்வாவில் விபத்துக்குள்ளானது அவ்வாறு ஒன்று தான். இவற்றை பழுதுபார்ப்பதற்காகஇ சமீபத்தில் துய்ய கொந்தா (பாதுகாப்புச் செயலாளர்) ரஷ்யாவிற்குச் சென்று அவமானப்பட்டு திரும்பி வந்துள்ளார்.

ரஷ்யாவில் துய்ய கொந்தாவுக்கு ஏற்பட்ட அவமானம்
ஏனெனில் இந்த MI-171 உலங்குவானூர்திகளை பழுதுபார்ப்பதற்கு கமல் குணரத்னவின் காலத்தில் ‘Winsley Defense Group’ ‘ என்ற நிறுவனத்திற்கு இதைக் கொடுத்துள்ளார்கள். இதில் நான்கு மட்டுமே பழுதுபார்ப்பதற்காக ஜோர்ஜியாவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

அதாவது ரஷ்யாவின் எதிரி நாடு. யுத்த காலத்தில் இந்த MI-171 உலங்குவானூர்திகளை ரஷ்யாவே வழங்கியது. அதன்பிறகு இரண்டு மூன்று மாதங்களுக்கு முன்பு பாதுகாப்புச் செயலாளர் துய்ய கொந்தா ரஷ்யாவிற்கு ஒரு மாநாட்டிற்காகச் சென்றார்.

 

அங்கே ரஷ்ய பாதுகாப்பு அமைச்சரைச் சந்தித்துப் பேசினார். அப்போது ரஷ்ய தரப்பினர் துய்ய கொந்தாவின் சட்டையைக் பிடிக்காத குறையாகக் காரசாரமாகக் கேள்வி எழுப்பியுள்ளனர். அங்கிருந்தபடியே தொலைபேசி அழைப்பில் அந்த ஒப்பந்தத்தை இரத்துச் செய்துள்ளார்.

கமல் குணரத்ன போன்றவர்கள் முழு நாட்டையுமே ஒரு சர்வதேசப் பிரச்சினையில் மாட்டிவிட்டார்கள். இவர்கள் பாருடன் இருந்தார்கள் என்று பார்க்க வேண்டும். இந்த விடயங்கள் எதுவும் ஜனாதிபதிக்கு தெரியாது. பாதுகாப்புத் துறையில் இருப்பவர்களுக்கும் தெரியாது. ஏனெனில் அதிகாரத்தில் இல்லாத ‘நிழல் அரசு’ இன்னமும் மிகவும் சக்திவாய்ந்ததாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

xon

கொங்கோவில் விமானம் விபத்து: 16 பேர் உயிரிழந்ததாக தகவல்?

September 27, 2026

ஜனநாயகக் குடியரசு கொங்கோவின் கெங்கே பகுதியில் TRACEP நிறுவனத்துக்குச் சொந்தமான Let L-410 ரக விமானம் விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த

purg

பள்ளிகளில் புர்காவுக்கு தடை?

September 27, 2026

இத்தாலி​யில் பிரதமர் ஜார்ஜியா மெலோனி தலை​மை​யில் அமைச்​சரவை கூட்​டம் நேற்​று​முன்​தினம் நடை​பெற்​றது. இக்கூட்டத்​தில், இத்​தாலி​யில் பள்​ளி​களில் புர்கா மற்​றும் நிகாப்

pa

பாகிஸ்தானில் தற்கொலைப் படை தாக்குதல்: 12 பேர் உயிரிழப்பு

September 27, 2026

பாகிஸ்தான் நாட்டின் வடமேற்கு பகுதியில் தற்கொலைப் படை தீவிரவாதி நடத்திய தாக்குதலில் சுமார் 12 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

ir

ஈரான் – அமெரிக்கா: நவம்பரில் மீண்டும் போர் மூளும்

September 27, 2026

ஐ.நா. பொது சபை கூட்டத்தில் பங்கேற்க ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன், ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி ஆகியோர்

1200-675-25121187-thumbnail-16x9-admk-aspera

“திமுக கொரோனா; உருமாறிய கொரோனா தவெக!” – தவெகவை திமுகவின் ‘பி’ டீம் என ஆவேசமாக விமர்சித்த இன்பதுரை எம்.பி!

September 27, 2026

செங்கல்பட்டு: திமுகவின் ‘பி’ டீம் தான் தவெக என்றும், திமுக கொரோனா; உருமாறிய கொரோனா தவெக எனவும் அதிமுக எம்.பி.

koh

டெண்டுல்கர் சாதனையை முறியடித்த கோலி

September 27, 2026

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் விராட் கோலி, சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 15,000 ரன்களைக் கடந்து சாதனை

kon

‘மண்ட வெட்டி’ படத்தின் முதல் பாடல் வெளியீடு

September 27, 2026

தெலுங்கு திரையுலகில் பிரபல நடிகையான கோமலீ பிரசாத் கதையின் நாயகியாக அழுத்தமான வேடத்தில் நடித்திருக்கும் ‘மண்ட வெட்டி’ திரைப்படத்தில் இடம்பெறும்

ctr-nirmal-kumar (2)

“ஜெம் வீரமணி வழக்கை முடிக்க பல நூறு கோடி பேரம்; திமுக, அதிமுகவில் விசுவாசிகள் இல்லை!” – அமைச்சர் நிர்மல்குமார் குற்றச்சாட்டு!

September 27, 2026

மதுரை: ஜெம் வீரமணி வழக்கை முடிக்க முந்தைய திமுக ஆட்சியில் பல நூறு கோடி ரூபாய் பேரம் நடைபெற்றதாக அமைச்சர்

dailythanthi_2026-09-27_du1t0jm4_sami33

“2021 தேர்தலில் திமுகவுக்கு வாக்களித்தவர்தான் விஜய்; அதிமுகவே தவெகவை விழுங்கும்!” – எடப்பாடி பழனிசாமி சரமாரி விமர்சனம்!

September 27, 2026

தாராபுரம்: தாராபுரம் இடைத்தேர்தலை முன்னிட்டு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது தவெக அரசையும் முதலமைச்சர்

snmu

நடிகர் சரண் நடிக்கும் ‘எனிமி ஆஃப் தி ஸ்மக்லர் ‘

September 27, 2026

தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகரான சரண் கதையின் நாயகனாக நடிக்கும் ‘எனிமி ஆஃப் தி ஸ்மக்லர்’ திரைப்படத்தில் இடம்பெற்ற

da

தனுஷ் நடிக்கும் பெயரிடப்படாத திரைப்படத்தின் தொடக்க விழா

September 27, 2026

தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான தனுஷ் கதையின் நாயகனாக நடிக்கும் பெயரிடப்படாத திரைப்படத்தின் தொடக்க விழா மதுரையில் சிறப்பாக

sulo

‘சிக்மா’ – ‘சுலோச்சனா’ பாடல் வெளியீடு!

September 27, 2026

நடிகர் சந்தீப் கிஷன் கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் ‘சிக்மா’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘சுலோச்சனா’ எனும் பாடலும், பாடலுக்கான