சென்னை:
நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி, தணிக்கை சிக்கல்களால் இன்னும் திரையரங்கிற்கு வராத ‘ஜனநாயகன்’ திரைப்படம் இணையதளத்தில் சட்டவிரோதமாக கசிந்த விவகாரத்தில் கைதான 9 பேருக்கு ஜாமீன் வழங்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் மறுத்துவிட்டது. கடந்த பொங்கல் பண்டிகைக்கு வெளியாக வேண்டிய இப்படம், சென்சார் சான்று கிடைக்காததால் தற்போது வரை மறு ஆய்வில் உள்ளது.
இந்தச் சூழலில், படம் ஆன்லைனில் கசிந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த தயாரிப்பு நிறுவனமான கே.வி.என். புரொடக்சன்ஸ் அளித்த புகாரின் பேரில் ஸ்ரீநாத், சஞ்சய் உள்ளிட்ட 9 பேரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர்கள் தாக்கல் செய்த ஜாமீன் மனுக்களை இன்று விசாரித்த நீதிமன்றம், வழக்கின் தீவிரத்தன்மை மற்றும் புலன் விசாரணை இன்னும் ஆரம்பக்கட்டத்திலேயே இருப்பதைக் கருத்தில் கொண்டு, 9 பேரின் மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ள நிலையில், விஜய்யின் ‘ஜனநாயகன்’ படத்தைச் சுற்றி நடக்கும் இந்தச் சட்டப் போராட்டங்கள் திரையுலகிலும் அரசியல் வட்டாரத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
#Jananayagan #Vijay #ThalapathyVijay #MovieLeak #CyberCrime #ChennaiHighCourt #LegalNews #KVNProductions #NoBail #PiracyKillscinema #JananayaganIssue #BreakingNews #TamilCinema #May2 #CensorBoard #VijayFans #SocialIssues #JusticeForCinema #TNPiracy_