ஜனநாயகனை லீக் எப்படி கண்டுபிடிப்பது? – ‘குறியீட்டு’ ஐடியா கொடுத்த இயக்குநர் மைக்கேல் அருண்

விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு அரசியல் கட்சிகள் அல்ல மாறாக படக்குழுவின் அஜாக்கிரதை காரணம் என்கிறார் இயக்குநர் மைக்கேல் அருண். இல்லை என்றால் வேண்டுமென்றே லீக் செய்திருக்கலாம் என்கிறார். மேலும் அந்த நபரை கண்டுபிடிக்கும் வழியையும் தெரிவித்துள்ளார்.

ஜனநாயகன் படத்தை கசியவிட்டது யார் என்பது தான் தற்போது சினிமா ரசிகர்கள் தீவிரமாக விவாதிக்கும் விஷயம். இந்நிலையில் ஒரு திரைப்படம் ரிலீஸுக்கு முன்பு சாட்டிலைட் கன்ட்ரோலில் இருக்கும் என்றும், அந்த சாட்டிலைட் பாஜக கன்ட்ரோலில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார் தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா.

ஆன்லைனில் உயர் தரத்தில் கசிந்திருக்கும் ஜனநாயகன் பட ப்ரிண்ட்டில் எட்டிடிங் குறியீடு இருக்கிறது என்பதை ரசிகர்கள் கண்டுபிடித்து இந்த கசிவுக்கு எந்த கட்சியையும் கை காட்ட முடியாது என்கிறார்கள். இந்நிலையில் 2017ம் ஆண்டு ரிலீஸான நிசப்தம் படத்தை இயக்கிய மைக்கேல் அருண் ஜனநாயகன் கசிவு பைரஸி இல்லை என்று எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.

ஜனநாயகன் கசிவுக்கு அந்த டீமின் அஜாக்கிரதையே காரணம் என்கிறார் மைக்கேல் அருண். கசிந்த ப்ரிண்ட்டில் EDIT_REF 14012026 என்று இருப்பது எடிட்டர் 14-01-2026 அன்று உருவாக்கிய அவுட்புட் என்றும், அது கசிந்திருந்தால் அது படக்குழுவின் அஜாக்கிரதை மட்டுமே என்கிறார் அவர்.

ஒரு கன்னட மாஸ் ஹீரோவின் இரண்டு படங்களில் இணை இயக்குநராக வேலை செய்தாராம் மைக்கேல் அருண். இணை இயக்குநராக இருந்தபோது ஃபுட்டேஜ்களை டிஜிட்டல் முறையில் லேப்டாப் மூலம் வேலை செய்ய வேண்டியிருக்குமாம். சிஜி, டப், ஆர்ஆர், டிஐ,மிக்சிங் செக், சிஜி செக், ஃபைனல் ஃபிலிம் செக் செய்ய பல முறை ஃபுட்டேஜை ஆக்சஸ் செய்ய வேண்டி முழு ஃபுட்டேஜும் கையில் இருக்கும்போது எல்லாம் நெருப்பு மீது இருப்பது போன்று இருக்கும்.

எல்லா வேலையையைும் முடித்து அந்த ஃபுட்டேஜை அழித்த பிறகே மூச்சு வந்து இயல்பு நிலைக்கு வருவோம். ஃபுட்டேஜ் ஆக்சஸ் செய்யும் அந்த படத்தில் வேலை செய்யும் அனைவருக்குமே இந்த மனநிலை தான் இருக்கும். கோடிகளில் முதலீடு செய்ததுடன், பலரின் உழைப்பு அடங்கியிருக்கே. இதில் அஜாக்கிரதையாக இருந்தால் பெரும் இழப்பு என்கிறார் மைக்கேல் அருண்.

அதை அரசியலாக பார்க்க முடியாது. இதற்கு முழுக்க முழுக்க யாருடைய அஜாக்கிரதை அல்லது படம் மூலம் சொல்ல விரும்பிய கருத்துகளை குறித்த நேரத்தில் சொல்ல முடியாமல் போகின்றதால் அதை லீக் செய்து மக்களிடம் கொண்டு செல்ல முற்படுவதாக தான் பார்க்க முடிகிறது.
அவுட்புட் தேதியை வைத்து விசாரித்து குற்றவாளியை கண்டுபிடிக்க முடியும். அந்த படத்தை யாரும் டவுன்லோடு செய்து பரப்பாமல் இருக்குமாறு கேட்டுக் கொள்ளலாம். ஆனால் இது தேர்தல் களம் என்பதால் கோரிக்கைக்கு எல்லாம் மதிப்பு இருக்கிறதா என்று சொல்ல முடியாது. ஃபுட்டேஜ் குறியீட்டை வைத்து அது யார் மூலம் கசிந்திருக்கும் என்பதை தயாரிப்பாளரும், படக்குழுவும் விசாரணை நடத்தி மக்களுக்கு தெரிவித்தே ஆக வேண்டிய நிலை.

இது அரசியலாக்கப்பட்டதால்…உண்மை வெளியே வருகிறதா என பார்க்கலாம் என தெரிவித்துள்ளார் மைக்கேல் அருண்.

ssasee

ஊடக சுதந்திரத்தை அவமதிக்கும் செயல்களில் பொலிஸார் ஈடுபடுகின்றார்கள் – அருட்தந்தை மா.சத்திவேல்

May 31, 2026

பொலிஸார் ஊடகவியலாளர்களை விசாரணைக்கு என அழைத்து அச்சுறுத்தும் தொனியில் வார்த்தை பிரயோகங்களை மேற்கொள்வது ஊடக சுதந்திரத்தை அவமதிக்கும் செயலாகும் என

vi

யாழ். பொது நூலகம் எரிப்பு: 1981 மே 31 நள்ளிரவில் நடந்தது என்ன?

May 31, 2026

நன்றி: வீரகேசரி நாளிதழ் . இலங்கையில் கடந்த காலங்களில் இடம்பெற்ற மிக மோசமான இன வன்முறைச் செயல்களில் ஒன்றான யாழ்ப்பாண

dja

நாகவிகாரைச் சூழலில் வெசாக் வலயம்

May 31, 2026

யாழ்ப்பாணம் நாகவிகாரைச் சூழலில் இராணுவத்தினரால் ஒழுங்கமைப்புச் செய்யப்பட்டிருந்த வெசாக் வலயத்தின் மின்விளக்கு அலங்காரங்களை சனிக்கிழமை (30) வடக்கு மாகாண ஆளுநர்

cha

தரம் குறைந்த நிலக்கரி குறித்து சட்டத்தரணிகள் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுக்கள்

May 31, 2026

நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்திற்குக் கொண்டுவரப்பட்ட, தரம் குறைந்த நிலக்கரி நிரம்பிய கப்பலை வலுக்கட்டாயமாக இறக்கும் பணி ஏற்கனவே தொடங்கிவிட்டதாகக்

mano

வட-கிழக்கு தமிழர்களை அவமதிக்கும் விதத்தில் டில்வின் சில்வாவின் கருத்து உள்ளது – மனோ கணேசன்

May 31, 2026

மாகாண சபை தேர்தல் குறித்து டில்வின் சில்வா வெளியிட்டுள்ள கருத்து, வடக்கு மற்றும் கிழக்கு மாகாண தமிழ் மக்களை அவர்

cs

சிரியாவில் இருந்து திரும்பிய ISIS தொடர்புடைய பெண்ணுக்கு எதிராக அவுஸ்திரேலியா தீவிர விசாரணை

May 31, 2026

சிரியாவில் உள்ள முகாம்களில் பல ஆண்டுகளாக எவ்வித விசாரணையும் இன்றி அடைக்கப்பட்டிருந்த பெண்கள் மற்றும் குழந்தைகளை அவுஸ்திரேலிய அரசு சமீபத்தில்

Judment

தையிட்டி விகாரைக்கு அருகில் சந்தேகத்திற்கு இடமாக நடமாடிய இளைஞர்களுக்கு அபராதம்

May 31, 2026

தையிட்டி விகாரை பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடி புகைப்படங்களை எடுத்த குற்றச்சாட்டில் கைதான யாழ்ப்பாணத்தை சேர்ந்த இரு இளைஞர்களையும்

kana

காணாமல் போன நான்கு கடற்றொழிலாளர்களை தேடும் பணி தீவிரம்

May 31, 2026

வடமராட்சி கடலிலிருந்து கடந்த 27 ஆம் திகதி கடலுக்குச் சென்று காணாமல் போன கடற்றொழிலாளர்கள் நால்வர் தொடர்பில் விசேட அனுமதியுடன்

sl

இலங்கைத் தமிழ் பெண் சென்னையில் கொலை

May 31, 2026

சென்னையில் இடம்பெற்ற மோதலில் இலங்கையை சேர்ந்த தமிழ் பெண் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். சென்னை கோயம்பேட்டில் நேற்றிரவு (30)

lav

லாவோஸில் 1000 அடி ஆழமான குகைக்குள் சிக்கியவர்களில் நால்வர் மீட்பு

May 31, 2026

லாவோஸின் மத்திய ஷைசோம்போன் மாகாணத்தில் உள்ள நிலத்தடி குகையொன்றில் சுமார் 10 நாட்களாகச் சிக்கியிருந்தவர்களில் நால்வரை மீட்பதற்கு லாவோஸ் மற்றும்

dailythanthi_2026-05-31_rsoq9wd2_rupees

“காகித நோட்டுகளுக்குப் பாய்ந்தது குட்பை!” – கிழிவதைத் தடுக்க பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்த ரிசர்வ் வங்கி அசுர வேகத் தீவிர ஆலோசனை!

May 31, 2026

சென்னை: “இந்தியாவில் காகித ரூபாய் நோட்டுகளுக்குப் பதிலாக, நீண்ட ஆயுள் கொண்ட அதிநவீன பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளைப் புழக்கத்தில் விடுவது

262-2026-05-30-17-14-21

“திமுக கூட்டணியில் தொடரலாமா? வேண்டாமா?” – எடப்பாடியை முதலமைச்சராக்க திமுக முயன்றதாகக் கூறி காதர் மொய்தீன் அசுர வேகப் பரபரப்புப் பேட்டி!

May 31, 2026

கடலூர்: “தமிழகத்தில் புதிய அரசு அமைந்த பிறகு ஏற்பட்டுள்ள அசாதாரண அரசியல் சூழலில், திமுக கூட்டணியில் நீடிப்பதா அல்லது வேண்டாமா