யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழியில் முன்னெடுக்கப்பட்டு வரும் அகழ்வுப் பணியின் நேற்று வெள்ளிக்கிழமை, மேலும் மூன்று மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
நேற்று கண்டெடுக்கப்பட்ட எலும்புக்கூடுகளுடன் சேர்த்து, இதுவரையான காலப்பகுதியில் செம்மணி மனிதப் புதைகுழியில் மொத்தம் 244 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
அடையாளம் காணப்பட்டவற்றில் 240 மனித எலும்புக்கூடுகள் ஏற்கனவே முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.