செம்மணி மனிதப் புதைகுழி; ஐ.நா விசாரணைகளுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் – அவுஸ்திரேலிய செனெட் சபை உறுப்பினர்

செம்மணி மனிதப் புதைகுழி குறித்து சுயாதீன விசாரணைகள் நடாத்தப்படுவதை உறுதிசெய்வதை இலக்காகக்கொண்டு இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதுடன், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இவ்விவகாரம் குறித்து அழுத்தம் பிரயோகிக்கவேண்டும் என அவுஸ்திரேலிய செனெட் சபை உறுப்பினர் டேவிட் ஷுபிரிட்ஜ் அந்நாட்டு அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளார்.

அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் அண்மையில் ஆற்றிய உரையில், ‘இலங்கையில் நீதி மற்றும் பொறுப்புக்கூறலை நிலைநாட்டுவதற்கு ஆதரவளிப்பதாக அவுஸ்திரேலியா உறுதியளித்திருந்த நிலையில், அதனை நடைமுறைப்படுத்தவேண்டிய தருணம் இதுவாகும்’ என டேவிட் ஷுபிரிட்ஜ் சுட்டிக்காட்டியுள்ளார்.

தனது நாடாளுமன்ற உரையின்போது செனெட் சபை உறுப்பினர் டேவிட் ஷுபிரிட்ஜ் மேலும் கூறியதாவது:

தற்போது இலங்கையில் யாழ், செம்மணியில் தடயவியல் அகழ்வாய்வு ஒன்று இடம்பெற்றுவருகிறது. இந்த அகழ்வில் 544 க்கும் மேற்பட்ட மனித எலும்புக்கூடுகள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

சில மனித எலும்புக்கூடுகளின் அளவை அடிப்படையாகக்கொண்டு நோக்குகையில், அவை குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்குச் சொந்தமானவையாக இருக்கக்கூடும் எனக் கருதப்படுகின்றது. இலங்கையைப் பொறுத்தமட்டில் இது புதியதொரு கதை அல்ல.

மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் தரவுகளின் பிரகாரம், இலங்கையில் நாடளாவிய ரீதியில் சுமார் 20 மனிதப்புதைகுழிகள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. இருப்பினும் அவற்றில் குறைந்தபட்சம் ஒரு மனிதப்புதைகுழி தொடர்பில் கூட முழுமையான விசாரணைகள் மேற்கொள்ளப்படவில்லை.

சர்வதேச மன்னிப்புச்சபை 1998 ஆம் ஆண்டு முதற்தடவையாக சர்வதேச ஆதரவுடனான ஒரு சுயாதீன அகழ்வு மற்றும் விசாரணை செயன்முறைக்கு அழைத்து விடுத்ததிலிருந்து செம்மணி மனிதப்புதைகுழி பற்றிய தகவல்கள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.

அண்மையில் இம்மனிதப்புதைகுழியை நேரடியாகப் பார்வையிட்ட ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க், செம்மணி மனிதப்புதைகுழி தொடர்பில் தடயவியல் நிபுணர்களின் பங்கேற்புடன் சுயாதீன விசாரணைகள் முன்னெடுக்கப்படவேண்டும் என வலியுறுத்தினார்.

இலங்கையில் நீதி, பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம் ஆகியவற்றை உறுதிப்படுத்துவதற்கு ஆதரவளிக்கத் தயாராக இருப்பதாக கடந்த ஆண்டு செப்டெம்பர் மாதம் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரில் அவுஸ்திரேலியா உறுதியளித்தது.

அதனை இப்போது நாம் நடைமுறைப்படுத்தவேண்டும். அதற்கமைய செம்மணி மனிதப்புதைகுழி தளத்தைப் பாதுகாத்தல், அங்கு கண்டறியப்பட்ட மனித எச்சங்களை முறையாகப் பாதுகாத்தல் மற்றும் இதுகுறித்த சுயாதீன விசாரணைகளையும் நீதி மற்றும் பொறுப்புக்கூறலை உறுதிசெய்வதையும் இலக்காகக்கொண்டு இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்றல் என்பவற்றுக்கான நடவடிக்கைகளை அவுஸ்திரேலிய அரசாங்கம் முன்னெடுக்கவேண்டும் என வலியுறுத்தினார்.

HPgenfsb0AEZu1o

“கடந்த 6 ஆண்டுகளில் தி.மு.க.வில் நடந்ததைச் சொல்லட்டுமா?” – சட்டப்பேரவையில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆவேசம்!

August 27, 2026

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று சமூக நீதி மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை மானியக் கோரிக்கை விவாதத்தின்போது, தி.மு.க. எம்.எல்.ஏ ராஜாவின்

1200-675-27496391-thumbnail-16x9-cmvijay

சட்டப்பேரவை மரபை மாற்றிய முதலமைச்சர் விஜய்: சக அமைச்சர்களுடன் அமர்ந்து நிகழ்வுகளைக் கவனித்த சுவாரஸ்யம்!

August 27, 2026

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவை வரலாற்றில் முதல்முறையாக, முதலமைச்சர் ஜோசப் விஜய் தனக்கென ஒதுக்கப்பட்ட பிரத்யேக இருக்கையில் அமராமல், சக அமைச்சர்களுடன்

1200-675-27498226-thumbnail-16x9-pinhole

உலகின் முதல் நுண்துளை கருவிழி சீரமைப்பு மையம்: சென்னையில் முதலமைச்சர் விஜய் திறந்து வைத்தார்!

August 27, 2026

சென்னை: சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனையில், உலகின் முதல் ‘பின்ஹோல் பியூபில்லோபிளாஸ்டி’ (Pinhole Pupilloplasty –

photo-collage.png

செம்மணி மனிதப் புதைகுழி; ஐ.நா விசாரணைகளுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் – அவுஸ்திரேலிய செனெட் சபை உறுப்பினர்

August 27, 2026

செம்மணி மனிதப் புதைகுழி குறித்து சுயாதீன விசாரணைகள் நடாத்தப்படுவதை உறுதிசெய்வதை இலக்காகக்கொண்டு இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதுடன், ஐக்கிய நாடுகள்

rum

ஈட்டி எறிதல் தரவரிசையில் ருமேஷ் தரங்கவுக்கு மீண்டும் முதலிடம்

August 27, 2026

பொதுநலவாய விளையாட்டு போட்டியில் தங்கப் பதக்க வென்ற இலங்கையின் ருமேஷ் தரங்க, உலக ஈட்டி எறிதல் தரவரிசையில் மீண்டும் முதலிடத்தைக்

parliment

22ஆவது திருத்தம்: NPP எம்.பியும் மனுத்தாக்கல்

August 27, 2026

அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலத்திற்கு ஆதரவு தெரிவித்து, தேசிய மக்கள் சக்தியின் (NPP) பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் நிபுணஆராச்சி உயர்

court-judge-hammer-gavel-696x398

விபத்தில் ஏழு பேர் பலி: சாரதிக்கு 13 வருட கடூழியச் சிறை உறுதி

August 27, 2026

2017ஆம் ஆண்டு சிலாபம் பகுதியில் இடம்பெற்ற கோரமான வீதி விபத்து ஒன்றில் 7 பேர் உயிரிழக்கக் காரணமாகவிருந்த தனியார் பேருந்து

anu

இனவாத அல்லது மதவாத மோதல்களுக்கு நாட்டில் இடமளிக்கப் போவதில்லை – ஜனாதிபதி

August 27, 2026

நாட்டில் மீண்டும் எவ்வித இனவாத அல்லது மதவாத மோதல்களுக்கும் இடமளிக்கப் போவதில்லை என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க வலியுறுத்தியுள்ளார்.

29

இறுதி யுத்தத்தின்போது இராணுவத்திடம் கையளிக்கப்பட்ட 29 சிறுவர்கள் எங்கே?

August 27, 2026

இறுதி யுத்தத்தின்போது பெற்றோர்களால் இலங்கை இராணுவத்திடம் உயிருடன் கையளிக்கப்பட்ட 29 சிறுவர்களுக்கு என்ன நடந்தது என இதுவரை கூற முடியாத

images

தமிழீழ விடுதலைப் புலிகள், பிள்ளையான், கருணா மற்றும் தவ்ஹீத் ஜமாத் அமைப்புகளுடன் அசாத் மௌலானா தொடர்பிலிருந்தார் – தேசபக்தி தேசிய இயக்கம் திட்டவட்டம்

August 27, 2026

தமிழீழ விடுதலைப் புலிகள், பிள்ளையான் தரப்பு, கருணா தரப்பு மற்றும் சஹ்ரானின் தவ்ஹீத் ஜமாத் ஆகிய அமைப்புகளுடன் அசாத் மௌலானா

WhatsApp Image 2026-08-27 at 21.05.58

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் போராட்டத்தை உள்ளிருந்தே அவதானித்த நீதி அமைச்சர்!

August 27, 2026

ழ். மாவட்ட செயலகத்திற்கு வெளியே காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் முன்னெடுக்கப்பட்ட எதிர்ப்புப் போராட்டம் தொடர்பில், நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார

image-3

“தேர்தல் நாள் நெருங்கும் வேளையில் பிராட்போர்ட்டை விட சவ் மிதமான முன்னிலையைத் தக்கவைத்துக் கொள்கிறார்: புதிய கருத்துக்கணிப்பு”

August 27, 2026

தேர்தல் நாளுக்கு இன்னும் இரண்டு மாதங்களே உள்ள நிலையில், கவுன்சிலர் பிராட் பிராட்போர்ட்டை (Brad Bradford) விட மேயர் ஒலிவியா