செம்மணி 582 மனித எச்சங்கள்; ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு அரசாங்கம் என்ன சொல்லியுள்ளது?

யாழ்ப்பாணம் செம்மணி – சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் இருந்து 582 மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளமை மற்றும் சர்வதேச தடயவியல் உதவி ஆகியவை தொடர்பாக ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு அரசாங்கம் என்ன நிலைப்பாட்டை குறிப்பிட்டுள்ளது? உள்ளக பொறிமுறையை பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்ச்சியாக புறக்கணித்து வரும் நிலையில் உள்ளக பொறிமுறை ஊடாகவே தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசாங்கம் சர்வதேச அரங்கில் குறிப்பிடுகிறது. இவ்வாறான நிலையில் பாதிக்கப்பட்டோருக்கு எவ்வாறு நீதி கிடைக்கும். பொறுப்புக்கூறல் விவகாரத்தில் அரசாங்கத்தின் நகர்வுகள் அதிருப்திக்குரியதாகவே காணப்படுகிறது என இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை (8) நடைபெற்ற அமர்வின்போது நிலையியல் கட்டளை இருபத்தேழு இரண்டின் கீழ் கேள்விகளை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,

மோதல் தொடர்பான மனித உரிமைமீறல்கள் குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்கும்,போதுமான ஆதாரங்கள் உள்ள நபர்களை தகுதியான நீதிமன்றங்களின் முன் கொண்டுவருவதற்கும் அரசாங்கம் உறுதிபூண்டுள்ளதாகக் கூறுகிறது. மனித உரிமைகள் பேரவையின் முன் அரசாங்கம் இந்த நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளதா? மேலும் பொறுப்புக்கூறல் தொடர்பான உயர்ஸ்தானிகரின் கவலைகளை நிவர்த்தி செய்ய மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு தெரிவிக்கப்பட்ட நடவடிக்கைகள் போதுமானவை என்று அரசாங்கம் கருதுகிறதா?

2018ஆம் ஆண்டின் சட்டம் ஏதேனும் வழக்கிற்குப் பயன்படுத்தப்பட்டுள்ளதா, மற்றும் அரசு அதிகாரிகள் சம்பந்தப்பட்ட நம்பகமான குற்றச்சாட்டுகள் தொடரப்படுகிறதா என்பது உட்பட பலவந்தமாக காணாமல் ஆக்கப்படுவதற்கான வழக்குகள் தொடர்பாக சர்வதேச அளவில் அரசாங்கம் என்ன நிலைப்பாட்டைத் தெரிவித்துள்ளது?

உள்நாட்டு விசாரணைகள் மீது பாதிக்கப்பட்ட சமூகத்திற்கு நம்பிக்கை இல்லை என்பதாலும், அந்தச் சமூகத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதி என்ற முறையிலும், பாதிக்கப்பட்ட தமிழ்ச் சமூகம் உள்நாட்டு வழிமுறைகளை மட்டுமே போதுமான பதிலாக ஏற்பதை நிராகரிக்கிறது என்பதை நான் பதிவு செய்கிறேன். அர்த்தமுள்ள சர்வதேச பங்களிப்பு, சுயாதீன அரசு வழக்கறிஞர்கள், சர்வதேச தடயவியல் நிபுணத்துவம், பாதிக்கப்பட்டவர் மற்றும் சாட்சிகள் பாதுகாப்பு மற்றும் தீவிர மனித உரிமைமீறல்கள் மற்றும் சர்வதேச குற்றங்களை விசாரித்தல் (கட்டளைப் பொறுப்பு) தொடர்பாக ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு அரசாங்கம் என்ன நிலைப்பாட்டைத் தெரிவித்துள்ளது?

யாழ்ப்பாணம் செம்மணி – சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் இருந்து 582 மனித எச்சங்கள் மீட்கப்பட்டதாகக் கூறப்படுவது மற்றும் சர்வதேச தடயவியல் உதவி ஆகியவை தொடர்பாக ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு அரசாங்கம் என்ன நிலைப்பாட்டைத் தெரிவித்துள்ளது?

பாதுகாப்புப் படையினரால் முன்னர் பயன்படுத்தப்பட்ட பெரும்பாலான நிலங்கள் திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் கூறுகிறது.

இராணுவம், தொல்பொருள், வனம், வனவிலங்கு மற்றும் மகாவலி அதிகாரசபைகளின் கீழ் உள்ள நிலங்கள் உட்பட அரசு வசமுள்ள அல்லது அரசு உரிமை கோரும் அனைத்து நிலங்கள் குறித்தும் சர்வதேச அளவில் என்ன தகவல்கள் வழங்கப்பட்டுள்ளன என்பதை அமைச்சர் தெரிவிப்பாரா?

பயங்கரவாத தடைச் சட்டத்தை உடனடியாக இரத்து செய்தல், அரசியல் கைதிகளை விடுதலை செய்தல் மற்றும் அதை இரத்து செய்தல் தொடர்பாக சர்வதேச அளவில் அரசாங்கம் என்ன உறுதியைத் தெரிவித்துள்ளது? மாகாண சபை தேர்தல்கள், வாக்குறுதியளிக்கப்பட்ட புதிய அரசியலமைப்பு மற்றும் அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வு தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபைக்கு அரசாங்கம் என்ன நிலைப்பாட்டையும் கால அட்டவணையையும் தெரிவித்துள்ளது?

500க்கும் மேற்பட்ட சாட்சிகள் மற்றும் ஆதாரங்களில் இருந்து 123,000க்கும் மேற்பட்ட உருப்படிகளைக் கொண்ட களஞ்சியத்தை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழு கொண்டிருந்தபோதிலும், அதனுடன் ஈடுபட அரசாங்கம் மறுத்துவிட்ட நிலையில், இந்த மறுப்பை பொறுப்புக்கூறல் மற்றும் சர்வதேச ஒத்துழைப்புக்கான அதன் கூறப்பட்ட அர்ப்பணிப்புடன் அரசாங்கம் எவ்வாறு சமரசம் செய்கிறது?

யாழ்ப்பாணம் சித்துபாத்தி செம்மணி மனித புதைகுழி விவகாரம் தொடர்பில் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிடுகிறார். ஆனால் பாதிக்கப்பட்ட மக்கள் உள்ளக விசாரணைகளை கோரவில்லை. சர்வதேச ரீதியான விசாரணைகளையே கோருகிறார்கள். செம்மணி மனித புதைகுழி தொடர்பில் ஏன் சர்வதேச விசாரணைகளை மேற்கொள்ள அரசாங்கம் பின்வாங்குகிறது. ஏன் சர்வதேச நிபுணர்களுடனான ஒத்துழைப்புடன் டி.என்.ஏ. பரிசோதனைகளை மேற்கொள்ள நடவடிக்கைகளை எடுக்கவில்லை. இது குறித்து அரசாங்கம் தெளிவான நிலைப்பாட்டை அறிவிக்க வேண்டும்.

பயங்கரவாத தடைச்சட்டத்தை இரத்து செய்வதாக அரசாங்கம் குறிப்பிடுகிறது. ஆனால் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வகையில் தற்போது புதிய சட்டமூலம் தயாரிக்கப்படவில்லை. நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச்சட்டத்தைக் காட்டிலும் பாரதூரமான அம்சங்களை இந்த சட்டமூலம் கொண்டுள்ளது. பயங்கரவாத தடைச்சட்டத்தை இரத்துச் செய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கையை கருத்திற்கொள்ளாமல் பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாக்கும் சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டப்படுகிறது. இதன் உண்மைத்தன்மை என்ன?

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பெருமளவிலான காணிகளை விடுவித்துள்ளதாக அமைச்சர் குறிப்பிடுகிறார். காணி விடுவிப்புக்கான போராட்டங்கள் இன்றும் வடக்கு மற்றும் கிழக்கில் தொடர்கின்றன.

மயிலிட்டி, வசவளான் பகுதி மக்கள் காணி விடுவிப்புக்காக தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள். ஒருசில வீதிகளை மாத்திரம் விடுவித்துவிட்டு அதனை முழுமையான காணி விடுவிப்பு என்று குறிப்பிட முடியாது. ஆகவே காணி விடுவிப்பு விவகாரத்தில் அரசாங்கம் பொறுப்புடன் செயற்பட வேண்டும்.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்துக்கு இன்றும் நீதி கிடைக்கவில்லை. காணாமல்போனோரின் உறவுகள் பல வருடங்களாக போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு என்று குறிப்பிட்டார், நல்லாட்சி அரசாங்கம் உள்ளக விசாரணை அதனூடாக தீர்வு என்று குறிப்பிட்டது.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஏதும் செய்யவில்லை. முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உண்மை மற்றும் பொறுப்புக்கூறல் என்று குறிப்பிட்டார். ஆனால் ஏதும் நடக்கவில்லை. இவை அனைத்தும் உள்ளக பொறிமுறையை உள்ளடக்கியதாகவே காணப்பட்டது. இதனை நாங்கள் ஏற்கவில்லை. இந்த அரசாங்கம் சர்வதேச மட்டத்தில் சென்று வெளியக பொறிமுறையை புறக்கணிப்பதாகவும், உள்ளக பொறிமுறையில் செயற்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட மக்கள் உள்ளக பொறிமுறையை நிராகரிக்கும்போது அதனூடாக எவ்வாறு நீதி கிடைக்கும். இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் எவரும் காணாமல் ஆக்கப்படவில்லை என்பதை குறிப்பிடுவோம். ஆனால் பொறுப்புக்கூறல் விவகாரத்தில் அதிருப்தியான நிலையே காணப்படுகிறது. காணாமல் போனோரின் விவகாரத்துக்கு தீர்வு காண எவ்வித முன்னேற்றகரமான நடவடிக்கைகள் இதுவரை காலமும் முன்னெடுக்கப்படவில்லை.

மாகாண சபைத் தேர்தல் பற்றி அமைச்சர் குறிப்பிட்டார். செயற்குழுவின் அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு தேர்தல் நடத்தப்படும். நானும் அந்த குழுவில் இருப்பதாக அமைச்சர் குறிப்பிட்டார். மாகாண சபைத் தேர்தல் பற்றி ஆராயும் பாராளுமன்ற செயற்குழுவில் இருந்து நான் விலகியுள்ளேன். எதிர்க்கட்சிகளின் பிரதிநிதிகள் அனைவரும் அந்த குழுவில் இருந்து விலகியுள்ளார்கள். ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் இதனை அறிவித்துள்ளார். இந்த குழுவின் செயற்பாடுகள் காலத்தை இழுத்தடிப்பு செய்வதால் அதில் தொடர்ந்து அங்கம் வகிப்பது பயனில்லை என்பதால் குழுவில் இருந்து விலகியுள்ளேன் என்றார்.

gs

கிராமத்திற்குள்ளேயே பொருளாதார வாய்ப்பு; 1,540 கிராம உத்தியோகத்தர்களுக்கு நியமனங்கள்

October 9, 2026

தற்போதைய அரசாங்கத்தின் பொருளாதார மற்றும் சமூகப் பயணமானது கிராமிய மக்களை நகரங்களுக்கு அழைத்து வராமல், கிராமத்திற்குள்ளேயே பொருளாதார வாய்ப்புகளை உருவாக்கி,

tru

இடைத்தேர்தலுக்கு முன் ஈரான் மீது தாக்குதல் இல்லை – ட்ரம்ப்

October 9, 2026

எதிர்வரும் நவம்பர் 3 ஆம் திகதி நடைபெறவிருக்கும் இடைத்தேர்தலுக்கு முன்பு எந்த நேரத்திலும் அமெரிக்கா ஈரானைத் தாக்காது என அமெரிக்க

chandrasekar

இந்திய மீனவர்களின் அத்துமீறல் தொடர்பில் இந்திய நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புகளுக்கு நன்றி – சந்திரசேகர்

October 9, 2026

கச்சத்தீவு மற்றும் இந்திய மீனவர்களின் அத்துமீறிய நடவடிக்கைகள் தொடர்பில் இந்திய நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புகளுக்கு நன்றி தெரிவித்துக்கொள்வதாக கடற்றொழில் நீரியல்

chemmani

செம்மணி 582 மனித எச்சங்கள்; ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு அரசாங்கம் என்ன சொல்லியுள்ளது?

October 9, 2026

யாழ்ப்பாணம் செம்மணி – சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் இருந்து 582 மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளமை மற்றும் சர்வதேச தடயவியல் உதவி

pasa

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனாலேயே ராஜபக்‌ஷ அரசியலை நிறுத்த முடியவில்லை: – பொதுஜன பெரமுன

October 9, 2026

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனாலும் ராஜபக்‌ஷ அரசியலை நிறுத்த முடியவில்லை. அவ்வாறிருக்கையில், பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை

parliment

ஊழல் எதிர்ப்பு (திருத்தச்) சட்டமூலம் பாராளுமன்றில் நிறைவேற்றம்

October 8, 2026

ஊழல் எதிர்ப்பு (திருத்தச்) சட்டமூலம் பாராளுமன்றில் இன்று (8) திருத்தங்களுடன் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டுள்ளது. 2003 ஆம் ஆண்டின் 09 ஆம்

budd

சிறையில் உள்ள பௌத்த துறவிகளுக்கு புதிய சட்டம் – ஆராய குழு

October 8, 2026

சிறையில் உள்ள பௌத்த துறவிகள் தங்கியிருக்கும் விதம் மற்றும் அவர்களைச் சிறைக்கு வெளியே அழைத்துச் செல்லும் முறைமைகள் தொடர்பான தற்போதைய

460511f0-c30b-11f1-babe-4199b0e7ccea.jpg

இலக்கியத்திற்கான நோபல் பரிசு கனடா எழுத்தாளர் ஆன் கார்சனுக்கு (Anne Carson) அறிவிப்பு!

October 8, 2026

2026 ஆம் ஆண்டிற்கான இலக்கியத்திற்கான புகழ்பெற்ற நோபல் பரிசு, கனடாவைச் சேர்ந்த பிரபல கவிஞரும், கட்டுரையாளரும், மொழிபெயர்ப்பாளருமான ஆன் கார்சனுக்கு

images - 2026-10-08T170815.105

“தவெக ஆட்சி குறித்து விமர்சித்ததாக பரவும் தகவலில் உண்மையில்லை!” – நாஞ்சில் சம்பத் விளக்கம்!

October 8, 2026

சென்னை: தவெக ஆட்சி குறித்துத் தான் விமர்சித்ததாகச் சமூக வலைதளங்களில் பரவி வரும் தகவல்களில் எந்த உண்மையும் இல்லை எனத்

1200-675-25141697-thumbnail-16x9-priya

“நம்பி வாக்களித்த பெண்களுக்குப் பாதுகாப்பில்லை!” – தவெக அரசை விமர்சித்த மேயர் பிரியா!

October 8, 2026

சென்னை: தவெகவை நம்பி வாக்களித்த பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என சென்னை மேயர் பிரியா திமுக மகளிர் அணி கூட்டத்தில்

1200-675-27344519-thumbnail-16x9-gkvfdd

“எஸ்.ஐ.ஆர் இல்லையென்றால் த.வெ.க அதிக இடங்களில் வெற்றி பெற்றிருக்கும்!” – அமைச்சர் கே.ஜி. அருண்ராஜ் பேட்டி!

October 8, 2026

சென்னை: எஸ்.ஐ.ஆர் இல்லை என்றால் தமிழக வெற்றிக் கழகம் அதிக இடங்களில் வெற்றி பெற்றிருக்கும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்

1200-675-24466243-thumbnail-16x9-cpm

“ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும்!” – தவெக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்!

October 8, 2026

சென்னை: ஸ்மார்ட் மீட்டர் திட்டம் என்பது மின் வாரியத்தை முழுக்க முழுக்க தனியார் வசம் ஒப்படைக்கின்ற திட்டத்தின் ஒரு பகுதியே