ஞாயிற்றுக்கிழமை இரவு சீயட்ல் சென்டரில் (Seattle Center) முக்கிய உணவுத் திருவிழா நடைபெற்றுக்கொண்டிருந்த போது இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், குறைந்தது ஐவர் காயமடைந்துள்ளனர்.
சீயட்ல் தீயணைப்புத் துறையின் செய்தித் தொடர்பாளர் கிராஸ் நுனெஸ் (Grace Nuñez) கூறுகையில், முதல் உதவிப் படையினர் இரு நோயாளிகளின் உயிரைக் காப்பாற்ற முயன்றும் அது பலனளிக்கவில்லை எனக் குறிப்பிட்டார்.
காயமடைந்தவர்களில் நால்வர் அப்பாந்தியத்தின் முதன்மை அதிர்ச்சிப் பராமரிப்பு மையமான (Trauma Center) வாஷிங்டன் பல்கலைக்கழகத்தின் ஹார்பர்வியூ மருத்துவ மையத்திற்கு (Harborview Medical Center) கொண்டு செல்லப்பட்டதாக அதன் செய்தித் தொடர்பாளர் சூசன் கிரெக் (Susan Gregg) தெரிவித்தார்.
அனைவரும் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியிருந்ததாகவும், கைகள், கால்கள், அடிவயிறு போன்ற இடங்களில் காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் கிரெக் கூறினார்.