யாழ்ப்பாணத்தில் 11 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 38 வயதுடைய நபர் ஒருவர் வட்டுக்கோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம், மூளாய் – வேரம் பகுதியில் சிறுமியின் வீட்டின் அருகே வசிக்கும் 38 வயதுடைய நபர், கடந்த சில தினங்களுக்கு முன்னர் அச்சிறுமியைத் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளார்.
இச்சம்பவம் குறித்து சிறுமியின் பெற்றோர்கள் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். அதனடிப்படையில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு சந்தேக நபரை இன்று கைது செய்துள்ளனர்.
துஷ்பிரயோகத்திற்கு உள்ளான சிறுமி மருத்துவப் பரிசோதனைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வட்டுக்கோட்டை பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.