யாழ்ப்பாண பல்கலைக்கழக சமூகவியல் பாட மாணவர்களுக்கு உள்ளுராட்சி மன்றங்களின் கட்டமைப்பு மற்றும் செயற்பாடுகள் தொடர்பிலான செயலமர்வு நல்லூர் பிரதேச சபையில் இடம் பெற்றது.
வட மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் சுதர்சன் ஒழுங்குபடுத்தில் நடைபெற்ற இச் செயலமர்வில் நல்லூர் பிரதேச சபையின் செயலாளர் ஜெலீபன் அவர்கள் அரச கட்டமைப்புகள், உள்ளுராட்சி மன்றங்களின் கட்டமைப்புக்கள், உள்ளுராட்சி மன்றங்களின் செயற்பாடுகள் மற்றும் நல்லூர் பிரதேச சபையின் செயற்பாடுகள் தொடர்பாக விளக்கமளித்ததோடு மாணவர்களால் முன்வைக்கப்பட்ட கேள்விகளுக்கும் பதில் வழங்கினார்.
நல்லூர் பிரதேச சபையின் தலைமை அலுவலகத்தின் பிரதான மண்டபத்தில் நடைபெற்ற இச் செயலமர்வில் வடமாகாண உள்ளுராட்சி ஆணையாளர் திரு.சுதர்சன், நல்லூர் பிரதேச சபை தவிசாளர் ப.மயூரன் நல்லூர் பிரதேச சபையின் செயலாளர் திரு.யு.ஜெலீபன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
செயலமர்வின் இறுதியில் மாணவர்கள் நல்லூர் பிரதேச சபையின் நிர்வாக கிளை அலுவலகங்களுக்கு நேரில் சென்று அதன் செயற்பாடுகள் தொடர்பில் கேட்டறிந்து கொண்டன.