சவூதி சென்ற இலங்கை பெண்ணை 14 ஆண்டுகளாக காணவில்லை!

வெளிநாட்டு வேலை வாய்ப்புக்காக சவூதி அரேபியா சென்ற இலங்கை பெண் ஒருவர் கடந்த 14 ஆண்டுகளாக எவ்வித தகவலும் இன்றி காணாமல் போயுள்ளதாக அம்பன்பொல பகுதியில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன.

அம்பன்பொல, சேருகொட பகுதியைச் சேர்ந்த ராஜபக்ஷலாகே நிலூகா ராஜபக்ஷ என்ற பெண்ணே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.

ஆவணங்கள் மற்றும் தகவல்களின்படி, அவர் 2012ஆம் ஆண்டு ஏப்ரல் 10ஆம் திகதி சவுதி அரேபியா நோக்கிப் புறப்பட்டுச் சென்றுள்ளார்.

அவர் வெளிநாடு சென்றது முதல் கடந்த 14 ஆண்டுகளாக அவரைப் பற்றிய எவ்வித உறுதியான தகவலும் கிடைக்கவில்லை என அவரது குடும்ப உறவினர்கள் கவலையுடன் தெரிவிக்கின்றனர்.

இச்சம்பவம் தொடர்பில் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் உறவினர்கள் பலமுறை முறைப்பாடுகளை அளித்துள்ளனர். அதன்படி, 2022 ஆகஸ்ட் 17 ஆம் திகதி CD/183/2208 என்ற இலக்கத்தின் கீழ் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் 2023 மற்றும் 2024 ஆகிய ஆண்டுகளில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மூலம் கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளதுடன், 2025ஆம் ஆண்டில் ஜனாதிபதி செயலகத்துக்கும் இது குறித்து தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

இருப்பினும், 14 ஆண்டுகளாகக் காணாமல் போயுள்ள நிலூகா ராஜபக்ஷவுக்கு என்ன நேர்ந்தது என்பது இதுவரை கண்டறியப்படவில்லை. இதனால் அவரைப் பற்றி ஏதேனும் தகவல் அறிந்தால் அவரை கண்டறிய உதவுமாறு அவரது குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

sa

சவூதி சென்ற இலங்கை பெண்ணை 14 ஆண்டுகளாக காணவில்லை!

November 8, 2026

வெளிநாட்டு வேலை வாய்ப்புக்காக சவூதி அரேபியா சென்ற இலங்கை பெண் ஒருவர் கடந்த 14 ஆண்டுகளாக எவ்வித தகவலும் இன்றி

strike

அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சுகயீன விடுமுறை போராட்டம்

November 8, 2026

பல கோரிக்கைகளை முன்னிறுத்தி நாடளாவிய ரீதியிலுள்ள அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் நாளை (09) சுகயீன விடுமுறை தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடத் தீர்மானித்துள்ளனர்.

ja

மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ள யாழ் சர்வதேச கிரிக்கெட் மைதானப் பணிகள்!

November 8, 2026

யாழ்ப்பாணம் – மண்டைதீவில் அமையவுள்ள சர்வதேச கிரிக்கெட் மைதான நிர்மாண பணிகளை எதிர்வரும் வாரங்களுக்குள் மீண்டும் ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளதாக

so4

தென்கிழக்கு வங்கக்கடலில் மீண்டும் தளம்பல் நிலை

November 8, 2026

தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில் எதிர்வரும் நவம்பர் 11ஆம் திகதியளவில் வளிமண்டல தளம்பல் நிலையொன்று உருவாகக்கூடிய சாத்தியக்கூறுகள்

ss

ஓய்வூதிய விதிகளில் மாற்றம்? கனடாவில் 71 வயதை எட்டியதும் ஓய்வூதியச் சேமிப்புக் கணக்கை மாற்ற வேண்டிய கட்டாயம் இல்லாமல் போகுமா? இதற்கான புதிய திட்டத்தை கனடா மத்திய அரசு தனது 2026 வரவு செலவுத் திட்டத்தில் முன்மொழிந்துள்ளது. ‘RRSP for Life’ என அழைக்கப்படும் இந்தத் திட்டம் நடைமுறைக்கு வந்தால், ஓய்வூதியச் சேமிப்பை நிர்வகிக்கும் முறையில் முக்கியமான மாற்றம் ஏற்படலாம். தற்போதைய விதிகளின்படி, கனடாவில் ஒருவர் 71 வயதை அடையும் ஆண்டின் இறுதிக்குள் தனது RRSP சேமிப்புக் கணக்கை RRIF எனப்படும் ஓய்வூதிய வருமானக் கணக்காக மாற்ற வேண்டும். இல்லையெனில் பணத்தைப் பெற்றுக்கொண்டு அதற்குரிய வரிகளைச் செலுத்த வேண்டிய நிலை ஏற்படலாம். புதிய முன்மொழிவு இந்தக் கட்டாயக் கணக்கு மாற்றத்தை நீக்க முயற்சிக்கிறது. அதாவது, 71 வயதைக் கடந்த பின்னரும் ஒருவர் தனது RRSP கணக்கைத் தொடர்ந்து வைத்திருக்க முடியும். கணக்கின் உரிமையாளர் உயிரிழந்தால், அவருடைய கணவன், மனைவி அல்லது சட்டப்படி அங்கீகரிக்கப்பட்ட துணைவர் அந்தக் கணக்கின் அடுத்தடுத்த உரிமையாளராகத் தொடரும் வசதியையும் அரசு பரிசீலித்து வருகிறது. இதன் மூலம் ஓய்வூதியச் சேமிப்பை குடும்ப உறுப்பினர்களுக்கு மாற்றும் நடைமுறை எளிதாகலாம். * 71 வயதுக்குப் பிறகும் குறைந்தபட்ச வருடாந்தப் பணம் பெறும் கட்டாயம் தொடரும். * 71 வயதுக்குப் பிறகு புதிய RRSP பங்களிப்புகளைச் செய்ய முடியாது. * இந்த மாற்றங்கள் இன்னும் சட்டமாகவில்லை. இந்தத் திட்டம் நடைமுறைக்கு வந்தால் நிர்வாகச் சிக்கல்கள் குறையும் என நிதித்துறை நிபுணர்கள் கருதுகின்றனர். கனடாவில் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பால் சிரமப்படும் முதியோருக்கு இந்த மாற்றம் மட்டும் போதுமானதாக இருக்காது என்றும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இந்த முன்மொழிவு தொடர்பாக பொதுமக்கள் தங்கள் கருத்துகளைத் தெரிவிக்க 2027 ஜனவரி 8ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

November 8, 2026

ஓய்வூதிய விதிகளில் மாற்றம்? கனடாவில் 71 வயதை எட்டியதும் ஓய்வூதியச் சேமிப்புக் கணக்கை மாற்ற வேண்டிய கட்டாயம் இல்லாமல் போகுமா?

7

“அவர்களே பாம் வைப்பார்களாம், அவர்களே எடுப்பார்களாம்!” – அமைச்சர் ராஜ்மோகன் கிண்டல்!

November 8, 2026

“‘சென்னை: பெரியார் நூலகப் புத்தகக் கொள்முதல் முறைகேடு விவகாரத்தில், திமுக லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் அளித்திருப்பதை அமைச்சர் ராஜ்மோகன் கடுமையாகக்

6

“பெரியார் புத்தக கொள்முதல் முறைகேடு: விசாரணைக்கு நாங்கள் தயார்!” – உதயநிதி ஸ்டாலின்!

November 8, 2026

சென்னை: முரசு புயலின்போது உயிரிழந்த காசிமேடு மீனவர்களின் குடும்பத்தை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

5

“அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்த 4 பேருக்கு சபாநாயகர் நோட்டீஸ்!” – ஜே.சி.டி.பிரபாகர் அதிரடி!

November 8, 2026

சென்னை: அதிமுகவில் இருந்து விலகித் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த 4 பேருக்குத் தகுதி நீக்க விவகாரம் தொடர்பாகச் சபாநாயகர்

4

“மேகதாது அணை திட்டத்திற்கு அனுமதி வழங்க கூடாது!” – பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் கடிதம்!

November 8, 2026

சென்னை: மேகதாது அணை விவகாரத்தில், கீழ்ப்படுகை மாநிலங்களின் ஒப்புதலின்றி எவ்வித அனுமதியும் வழங்கக் கூடாது என முதலமைச்சர் விஜய் பிரதமர்

3

“’சண்டியர்’ திரைப்படத்தை தமிழகத்தில் வெளியிட அனுமதிக்க மாட்டோம்!” – கிருஷ்ணசாமி எச்சரிக்கை!

November 8, 2026

கோவை: கமல்ஹாசன் தனது புதிய திரைப்படத்திற்கு மீண்டும் ‘சண்டியர்’ எனப் பெயர் சூட்டியுள்ளதற்குப் புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர்

2

“உலகிலேயே AI தொழில்நுட்பத்தில் ஊழல் செய்து சாதனை படைத்த திமுக!” – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா!

November 8, 2026

சென்னை: உலகிலேயே செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி முதன்முதலில் ஊழல் செய்து திமுக மாபெரும் உலக சாதனை படைத்துள்ளதாகப் பொதுப்பணி

1

“சீமானை பொது வேட்பாளராக அறிவித்தால்…!” – நயினார் நாகேந்திரன் பேட்டி!

November 8, 2026

திருநெல்வேலி: அம்பாசமுத்திரம் தொகுதியில் போட்டியிடும் எண்ணம் தமக்கு இல்லை என்றும், அனைத்துக் கட்சிகளும் சீமானைப் பொது வேட்பாளராக அறிவித்தால் பாஜக