சர்வதேச மலேரியா தினம்: கைக்குழந்தைகளுக்கான மருந்துக்கு உலக சுகாதார அமைப்பு அங்கீகாரம்

சர்வதேச மலேரியா தினத்தை முன்னிட்டு, கைக்குழந்தைகளுக்காக விசேடமாக உருவாக்கப்பட்ட முதலாவது மலேரியா மருந்துக்கு உலக சுகாதார அமைப்பு வெள்ளிக்கிழமை (24) அங்கீகாரம் வழங்கியுள்ளது.

புதிதாக உருவாக்கப்பட்ட இந்த மருந்து, 05 கிலோ கிராமிற்கும் குறைவான எடையுள்ள குழந்தைகளுக்குப் பாதுகாப்பான முதல் மலேரியா எதிர்ப்பு மருந்தாகும்.

குறித்த இந்த மருந்து ஆர்டிமெதர் மற்றும் லுமெஃபான்ட்ரின்ஆகியவற்றால் உருவாக்கப்பட்டுள்ளது.

இதுவரைகாலமும் வளர்ந்த குழந்தைகளுக்காக உருவாக்கப்பட்ட மருந்துகளே கைக்குழந்தைகளுக்கும் வழங்கப்பட்டு வந்த நிலையில் இந்த மருந்தின் கண்டுபிடிப்பு ஒரு திருப்புமுனையாக அமைந்துள்ளது.

புதிய இந்த மருந்துக்கு உலக சுகாதார அமைப்பு அங்கீகாரம் வழங்கியுள்ளமை முழுமையான மருத்துவச் சோதனைகளை நடத்தும் வசதியற்ற நாடுகளும் இந்த மருந்தை உத்தியோகபூர்வமாக உபயோகிக்க அனுமதி கிடைத்துள்ளது.

அத்துடன், ஐக்கிய நாடுகள் சபையின் முகவர் நிறுவனங்கள் இந்த மருந்தைக் கொள்வனவு செய்து, மலேரியா அதிகம் பரவியுள்ள பகுதிகளுக்கு விநியோகிக்கவும் வழிவகுத்துள்ளது.

ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளே மிகவும் பாதிக்கப்படக்கூடிய பிரிவினராக உள்ளனர். நுளம்புளால் பரவும் இந்த நோய் தொடர்பான மொத்த மரணங்களில் சுமார் 70 சதவீதம் இவர்களிடமே நிகழ்கின்றன.

கர்ப்ப காலத்தில் மலேரியா பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. ஒவ்வொரு ஆண்டும் இது சுமார் 10,000 தாய்மார்களின் மரணம், 200,000 கருச்சிதைவுகள் மற்றும் சுமார் 550,000 குழந்தைகள் குறைந்த எடையுடன் பிறப்பதற்கு மலேரியா ஒரு முக்கிய காரணமாகியுள்ளதாக உலக சுகாதார அமைப்பின் தரவுகள சுட்டிகாட்டியுள்ளன.

2000-ஆம் ஆண்டிலிருந்து, உலகளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் முயற்சிகள் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்திற்கு வழிவகுத்துள்ளன. இதன் மூலம் சுமார் 14 மில்லியன் இறப்புகள் தவிர்க்கப்பட்டுள்ளன என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

எனினும், மலேரியா ஒரு பெரிய உலகளாவிய சுகாதார சவாலாகவே நீடிக்கிறது. 2024-ஆம் ஆண்டில் சுமார் 282 மில்லியன் பாதிப்புகளும், அரை மில்லியனுக்கும் அதிகமான இறப்புகளும் பதிவாகியுள்ளன.

உலகளவில் ஏற்படும் மலேரியா பாதிப்புகள் மற்றும் இறப்புகளில் பத்தில் ஒன்பது ஆபிக்க கண்டத்தில் துணை சஹாரா ஆபிரிக்க பிராந்தியத்தில் பதிவாகின்றன.

இது தொடர்பாக உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ்,

பல நூற்றாண்டுகளாக, மலேரியா பெற்றோரிடமிருந்து குழந்தைகளையும், சமூகங்களிடமிருந்து ஆரோக்கியம், செல்வம் மற்றும் நம்பிக்கையையும் பறித்து வந்துள்ளது. ஆனால் இன்று, நிலைமை மாறி வருகிறது. புதிய தடுப்பூசிகள், நோயறிதல் சோதனைகள், அடுத்த தலைமுறை நுளம்பு வலைகள் மற்றும் மிகச் சிறிய குழந்தைகளுக்காக உருவாக்கப்பட்டவை உள்ளிட்ட செயல்திறன் மிக்க மருந்துகள், நிலைமையை மாற்ற உதவுகின்றன என உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் தெரிவித்துள்ளார்.

மலேரியா ஒட்டுண்ணிகள் கண்டறிவதற்குக் கடினமாகும் வகையில் உருமாறியுள்ளதால், இந்த ஏப்ரல் மாத ஆரம்பத்தில் மூன்று புதிய விரைவுப் பரிசோதனைகளுக்கு உலக சுகாதார அமைப்பு அனுமதி அளித்துள்ளது.

‘ஆப்பிரிக்காவின் கொம்பு’ என்றழைக்கப்படும் சோமாலி தீபகற்பப் பகுதியில் உள்ள நாடுகளில், தவறான முடிவுகள் காரணமாக 80 சதவீத பாதிப்புகள் கண்டறியப்படாமல் போவதாகவும், இது சிகிச்சையைத் தாமதப்படுத்தி உயிரிழப்பு அபாயத்தை அதிகரிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே 2021 ஆம் ஆண்டில் முதலாவது மலேரியா தடுப்பூசியை உலக சுகாதார அமைப்பு பரிந்துரைத்திருந்ததுடன், அது ஆபிரிக்காவின் பல நாடுகளில் குழந்தைகளுக்குப் பரந்த அளவில் வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

basil

பசிலை கைதுசெய்யுங்கள் – சர்வதேச பொலிஸாரின் உதவியை பெறுங்கள் -நீதவான் உத்தரவு

October 14, 2026

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவை கைதுசெய்து தன்முன்னாள் நீதிமன்றத்தில் நிறுத்துமாறு கொழும்பு கோட்டை நீதவான் பசன் அமரசேன குற்றப்புலனாய்வு திணைக்களத்தின்

srisena

அரசமைப்பினை பின்பற்றியே ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பை வழங்கினேன்- மைத்திரி

October 14, 2026

அரசமைப்பின் கீழ் தனக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களின் அடிப்படையிலேயே பொதுபலசேனாவின் ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பை வழங்கியதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன

nihal abeyasinga

புதிய அரசியலமைப்பு தொடர்பான உத்தியோகபூர்வ பேச்சுவார்த்தைகள் ஜனவரியில்

October 14, 2026

அரசியலமைப்பு தொடர்பான உத்தியோகபூர்வ பேச்சுவார்த்தைகள் 2027 ஜனவரியில் ஆரம்பமாகலாம் என தெரிவித்துள்ள தேசிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான

anojan

அனோஜனின் மரணதண்டனை இரத்து

October 14, 2026

இலங்கையரான அனோஜன் சிவராஜாவுக்கு விதிக்கப்பட்டிருந்த தண்டனையை சவுதிஅரேபிய நீதிமன்றம் இரத்து செய்துள்ளது என பிரதிவெளிவிவகார அமைச்சர் அருண் ஹேமசந்திர தெரிவித்துள்ளார்.

IMG_9428

விஜேராம பகுதியில் புதிய செயற்கை நுண்ணறிவு (AI) மையம்

October 14, 2026

சிங்கப்பூர் அரசாங்கத்தின் ஒத்துழைப்புடன் விஜேராம பகுதியில் புதிய செயற்கை நுண்ணறிவு (AI) மையம் ஒன்றைத் நிறுவுவதற்குத் திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார

IMG_9427

திக்கம் வடிசாலையை மீள இயக்க நடவடிக்கை!

October 14, 2026

யாழ்ப்பாணம் திக்கம் வடிசாலையை மீள இயக்கி, ஏற்றுமதியை இலக்காகக் கொண்ட உற்பத்தி நிலையமாக மாற்றுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக கடற்றொழில், நீரியல்

IMG_9425

இலங்கையர்களுக்கு எச்சரிக்கை!

October 14, 2026

பிராந்தியத்தில் நிலவும் தற்போதைய சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு, உம்ரா யாத்திரை மேற்கொள்ளத் திட்டமிடும் இலங்கையர்கள் தமது பயண ஏற்பாடுகளை மேற்கொள்ளும்போது அவதானத்துடன்

IMG_9424

ஆட்சி அமுல்படுத்தப்பட்டுள்ளதால் அரசியல் பதற்றம் அதிகரித்துள்ளது.

October 14, 2026

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் கட்சிக்கு அதிக ஆதரவு உள்ள கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் அவசரகால நிலை மற்றும்

nsm

மீண்டும் விளக்கமறியலில் நாமல்!

October 14, 2026

சர்ச்சைக்குரிய எயார்பஸ் (Airbus) கொடுக்கல் வாங்கலில் 1.4 மில்லியன் யூரோவுக்கும் அதிகமான தொகையை இலஞ்சமாகப் பெற்ற குற்றச்சாட்டு தொடர்பில், பாராளுமன்ற

wor

உலக வங்கிப் பிரதிநிதிகள் – ஜனாதிபதியின் செயலாளர் சந்திப்பு!

October 14, 2026

இலங்கையின் விவசாயத் துறையை டிஜிட்டல் மயமாக்குதல் மற்றும் நவீனமயமாக்குதலை நோக்கமாகக் கொண்ட ‘AgriConnect Sri Lanka’ திட்டத்தை எதிர்வரும் ஒக்டோபர்

th

ஏற்றுமதியை இலக்காகக் கொண்ட உற்பத்தி நிலையமாக திக்கம் வடிசாலையை மீளச் செயற்படுத்தத் திட்டம்!

October 14, 2026

திக்கம் வடிசாலையை மீள இயக்குவதற்குச் சாத்தியமான அனைத்து வழிகளிலும் நடவடிக்கைகளை முன்னெடுப்பதுடன், அதனை ஏற்றுமதியை இலக்காகக் கொண்ட உற்பத்தி நிலையமாக

ja

கைதடியில் விபத்து; இரு இளைஞர்கள் பலி

October 14, 2026

யாழ்ப்பாணம், கைதடி பகுதியில் மோட்டார் சைக்கிளொன்றும் லொறியொன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில், இரு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.